-பனையபுரம் அதியமான்ஆப்பிரிக்கா கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டது புளியமரம். நாளடைவில் இடம் பெயர்ந்த இம்மரம், இந்தியாவின் பண்பாட்டில் கலந்துவிட்ட விருட்சமாகவும், தலமரங்களுள் ஒன்றாகவும் விளங்குகின்றது.இலங்கையின் தென்பகுதியில் இதனை வடுபுளி என்று அழைக்கின்றனர். இம்மரம் வறட்சியைத் தாங்கி அனைத்து தட்பவெப்ப நிலையிலும் செழித்து வளரக்கூடியது.."வினையா யினதீர்த் தருளே புரியும் விகிர்தன் விரிகொன்றைநனையார் முடிமேல் மதியஞ்சூடும் நம்பா நலமல்குதனையார் கமல மலர்மே லுறைவான் தலையோ டனலேந்தும்எனையா ளுடையா னுமையா ளோடும் ஈங்கோய் மலையாரே"-திருஞானசம்பந்தர் தேவாரம்.திருஈங்கோய்மலையில் உள்ள சிவாலயத்திலும், திருக்குருகூர் எனும் வைணவத் தலத்திலும் புளியமரமே தலமரமாக விளங்குகின்றது."சாலையிலே புளியமரம்ஜமீன்தாரு வச்ச மரம்ஏழைகளைக் காக்கும் மரம்எல்லோருக்கும் உதவும் மரம்"என்ற நாட்டுப்புறப் பாடல் ஒன்று புளியமரத்தின் பெருமை பற்றிப் பேசுகின்றது.புளியின் பழமும் ஓடும் ஒன்றுக்கொன்று ஒட்டுவதில்லை. அதனால் இவ்வாறு பழகுபவர்களைக் குறிக்க, "ஓடும் புளியம் பழம் போல" என்ற பழமொழி தமிழில் வழங்கப்படுகிறது..ஆழ்வார் திருநகரி:தூத்துக்குடி மாவட்டம், தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆழ்வார் திருநகரி எனும் திருக்குருகூரில் பழைமையான புளியமரம் உள்ளது. திருப்புளியாழ்வார் எனப் பெருமை பெற்றுள்ள இம்மரத்தை வைணவர்கள் புனித மரமாகப் போற்றுகின்றனர். இம்மரம் பூத்துக்காய்த்தாலும் பழம் பழுப்பதில்லை. இலைகள் இரவில் தூங்குவதில்லை. இந்த மரத்தின் பின்னணியில் புராணக்கதையும் உள்ளது.ஸ்ரீமகாவிஷ்ணு இராமனாக அவதரித்தபோது, பாற்கடலில் அவருக்குப் படுக்கையாக இருந்த ஆதிசேஷனே அவரது தம்பியான இலட்சுமணனாக அவதரித்ததாகக் கூறப்படுகிறது. இராமன் தமது நிறைவுக் காலத்தில், தன்னைச் சந்திக்க எவரையும் அனுமதிக்க வேண்டாம் என தம்பியிடம் கூறினார். இந்த நிலையில், ஒரு சமயம் அங்கு துர்வாச முனிவர் வந்தார். அவரை அனுமதிக்க இலட்சுமணன் தயங்கினார். இதனால் கோபமுற்ற முனிவர், இலட்சுமணனை புளியமரமாக மாறச் சாபமிட்டார். அதன்படி ஆழ்வார் திருநகரியில் இலட்சுமணன் புளியமரமானார் என தலபுராணம் கூறுகிறது. பன்னிரு ஆழ்வார்களில் முதன்மையானவரான நம்மாழ்வார் திருக்குருகூர் புளியமரத்தடியில் பலகாலம் தவம் செய்துவந்ததும் புளியமரத்தின் சிறப்பை பறைசாற்றுகின்றது..திருஈங்கோய்மலை ஈ வணங்கிப்பேறு பெற்ற தேவாரத்தலமாகும். இங்கு தல மரம் புளியமரமாகத் திகழ்வதற்கும் ஒரு வரலாறு உள்ளது.சிவபெருமானின் உற்றத் தோழரான சுந்தரர், தனக்கு பொன் - பொருள் வேண்டும்போதெல்லாம் சிவனிடம் வேண்டுகோள் வைப்பது வழக்கம். அந்த வகையில் திருஈங்கோய் தலம் வந்து, "தனக்கு பொன்வேண்டும்’’ எனக்கேட்டார். இவரிடம் விளையாட விரும்பிய சிவபெருமான், மலையில் இருந்த புளியமரத்தில் ஒளிந்தார். சுந்தரர் பலமுறை அழைத்தும் வரவில்லை. ஆனால் சுந்தரருக்கு ஒரேயொரு தங்கப்புளியம்பழத்தை மட்டும் தந்தார். இது சிவபெருமானின் திருவிளையாடல் என்பதை அறிந்தார். இந்தப் புளியம் பழம் எவருக்கும் கிடைக்கக்கூடாதெனச் சாபமிட அவ்வாறே நடந்துவிட்டது. ஆனால், தங்கப்புளியம்பழம் கிடைத்த தலம் என்ற பெருமையையும், தலமரம் என்ற பெருமையையும் புளியமரம் பெற்றது. திருமலை - திருப்பதி வைணவத் திருக்கோவிலின் தலமரமும் புளியமரமே..பிறவாப்புளி − இறவாப்பனை:கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம். இதற்கு பனை மற்றும் புளியமரம் என இரண்டு தலமரங்கள். இங்குள்ள பனைமரம் காலம்காலமாக இறவாமல் பசுமையாகத் திகழ்கிறது. இதை "இறவாப்பனை" என்று அழைக்கின்றனர். ஆலயத்தின் இராஜகோபுரம் எதிரில் மிகப்பெரிய புளியமரம் உள்ளது. இதில் காய்க்கும் பழங்களின் விதைகள் முளைப்பதில்லை. அதனால் இம்மரம் "பிறவாப்புளி" எனப் போற்றப்படுகின்றது..புளியம்பழத்தின் பயன்கள்:புளியம்பழத்தில் வைட்டமின் ஏ,பி1, பி2, சி, சுண்ணாம்புச் சத்துக்கள் உள்ளன. இதுதவிர சர்க்கரை சத்து, சிட்ரிக் அமிலம், டார்டாரிக் அமிலங்களும் உள்ளன. தமிழர்களின் சமையலில் புளி அத்தியாவசியப் பொருளாக விளங்குகின்றது. இது ஜீரண சக்தியை அளிக்கிறது. ஆலயங்களில் புளியோதரை புகழ்பெற்ற பிரசாதமாக விளங்குகின்றது..மருத்துவகுணங்கள்:புளி, உஷ்ணத்தைத் தருவதால், சூலை தொடர்புடைய நோய்களைக் குணமாக்கும். தேள் கடிக்கு புளியுடன் சுண்ணாம்பு சேர்த்து உள்ளங்கையில் நசித்து அந்தச் சூட்டில் கடிவாயில் வைத்தால் விஷம் இறங்கும்.பல் வலி, ஈறு வீக்கத்திற்கு புளியுடன் உப்பை சேர்த்து வலியுள்ள இடத்தில் அழுத்தி வாய் மூடி உமிழ்நீரை துப்பி வந்தால், பல்வலி குறையும். வாந்தி குமட்டலுக்கு புளியை வாயில் போட்டு சப்பி, நீரை விழுங்கினால் நோய் தன்மை மட்டுப்படும். புளியமரப்பட்டையை எரித்து அதை நல்லெண்ணெய்யோடு சேர்த்து தீப்புண்கள் மீது போட்டால் புண் ஆறும். புளியங்கொட்டை எண்ணெய் வார்னிஷ் தயாரிக்க உதவுகிறது.புளியம் பூவும், இலைகளும்கூட மருத்துவத்திற்குப் பயன்படுகின்றன. சிற்றாமணக்கு எண்ணெய்யில் புளியம் பூவையும், புளியம் இலையையும் சம அளவு எடுத்து வதக்கி தாங்கும் சூட்டில் மூட்டு வீக்கத்திற்கு ஒத்தடம் கொடுத்தால் குணம் தரும்.(தலவிருட்சம் வளரும்)