-டாக்டர் சுதா சேஷய்யன்தன்னை மணந்துகொள்ளும்படி சாந்தனு வேண்ட, அந்தப் பேரழகியும் சம்மதித்தாள். ஆனாலும், சம்மதம் தெரிவிக்கும்போதே, கட்டளைகள் சிலவற்றையும் விதித்தாள்..ராக்ஞ, பவிஷ்யாமி மஹிபால மஹிஷீ தே வசானுகாஅரசரே, (தங்கள் எண்ணப்படி) தங்களின் மனைவியாகிறேன்; தங்களின் கட்டளைகளையும் நிறைவேற்றுகிறேன். யத் து குர்வாம் அஹம் ராஜச் சுபம் வா யதி வா அசுபம் ந தத் வாரயித்வ்யாஸ்மி ந வக்த்வ்யா தத அப்ரியம்(ஆனால், அரசரே), என்னுடைய செயல்களில், அவை உமக்குப் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ, நீர் தலையிடக்கூடாது. என்னிடம் இனிமையற்ற சொற்களையும் பேசக்கூடாது. ஏவம் ஹி வர்த்தமானேஹம் த்வயி வத்ஸ்யாமி - வாரிதா விப்ரியம் சோக்தா த்யேஜேயம் த்வாம் அசம்சயம்நான் விண்ணப்பிக்கும் வகையில் தாங்கள் நடந்துகொண்டால், நான் தங்களோடு வாழ்வேன். எனக்கு இடையீடு செய்தாலோ, என்னிடம் கடுமையான சொற்களைப் பிரயோகித்தாலோ, நான் கண்டிப்பாகத் தங்களைப் பிரிவேன்..யாரென்று தெரியவில்லையாயினும் (சாந்தனுவுக்கு அவள் கங்கை என்று இன்னமும் தெரியாது; இன்னும் பல காலத்திற்குத் தெரியப் போவதுமில்லை; நமக்கு மட்டுமே தெரியும்), அவளுடைய அழகிலும் இனிமையிலும் வசீகரிக்கப்பட்ட சாந்தனு, அவள் கூறியதற்கெல்லாம் ஒத்துக்கொண்டார்..திருமணத்திற்குப் பின், இருவரும் மனமொத்து வாழ்ந்தனர். இசையும் நாட்டியமும் கலைகளும் கலாசாரமும் அன்பும் அறிவுமாக இருவரும் வாழ்க்கைப் பாதையில் பயணித்தனர். இவ்வாறாக வாழ்ந்து வரும் காலத்தில், அந்தப் பெண்ணும் கருக்கொண்டாள்.மான்விழி கருவுயிர்த்தனள் எனக் களிகொள் காலையில் பருவம் உற்று அன்புடன் பயந்த மைந்தனைப் பொரு புனல் புதைத்தனள் புவனம் காணவேமான்விழியாளாம் தன் மனைவி கருவுற்றாள் என்று சாந்தனு மகிழ்ந்தார். கருவுற்றவள், மகனையும் ஈன்றாள். அப்போதுதான், அந்த அதிர்ச்சி! எல்லோரும் பார்க்கும்படியாக, தான் பெற்ற அந்தச் சிசுவை உடனடியாக ஆற்றில் அமிழ்த்தினாள் அவள். இந்தச் செயலைக் கண்டு சாந்தனு மனம் வெறுப்புற்றாலும், திருமணம் செய்துகொள்ளும்போது அந்தப் பெண் கூறியிருந்தவற்றை நினைவுகூர்ந்து, எந்தக் கடுஞ்சொல்லையும் கூறவில்லை. அதுமட்டுமல்லாமல், முன்னர் இருந்த அன்பு மாறாமல் அவளோடு வாழ்க்கையைத் தொடர்ந்தார்..இதைப் போலவே இன்னும் ஆறு குழந்தைகளையும் அப்பெண்மணி பெற்றாள். அந்தக் குழந்தைகளையும் ஆற்றில் அமிழ்த்தினாள். கொடுமைமிக்க இச்செயல்களைக் கண்டு நகர மக்கள் நடுக்கம் கொண்டனர். இருப்பினும், அரசி ஆயிற்றே என்று பேசாமல் இருந்தனர். சாந்தனு மன்னரும்கூட, மனைவி எது செய்தாலும் கேட்கக்கூடாது என்றும், தலையிடக்கூடாது என்றும் சங்கல்பம் கொண்டு, அதன்படியே நடந்துகொண்டார். ஏழு குழந்தைகள் இவ்வாறே ஆற்றோடு போயினர்.எட்டாவது குழந்தையையும் அரசி கருக்கொண்டாள். முன்னர் செய்ததுபோலவே, எட்டாவது குழந்தையையும் ஆற்றில் வீசுவதற்காக அரண்மனையைவிட்டுப் புறப்பட்டாள். குழந்தை பிறந்துவிட்டது என்னும் செய்தியைப் பணியாளர் ஒருவர் வந்து அரசரிடம் கூறினார். ஓடோடிச் சென்ற அரசர், அந்தக் குழந்தையை அரசியார் தூக்குவதற்கு முன்பாக, தாமே அன்புடன் எடுத்து அணைத்துக் கொண்டார்..பணிவான வார்த்தைகளைப் பேசத் தொடங்கினார். ‘அம்மா, உன் செயலைத் தடுத்துவிட்டேன் என்றோ, இடையூறு செய்துவிட்டேன் என்றோ சினம் கொள்ளாதே. நம்முடைய குலம் தழைக்கவேண்டும் என்பதால், இந்தப் பிள்ளையைக் காப்பாற்ற முற்படுகிறேன். அருள்கூர்ந்து இந்தக் குழந்தையைப் பாதுகாத்துக் காப்பாற்றி வளர்த்துவிட வழிசெய்’ என்று வேண்டினார்.கோபம் கொப்பளிக்கும் விழிகளால் அரசரை நோக்கினாள் அவள். ‘இந்தக் குழந்தைக்குப் பரிந்து வருகிறீர்களே, ஏழு குழந்தைகளைக் கொன்றபோது உமக்குப் பரிவு வரவில்லையா?’ என்று வினவினாள்.அவளின் தோற்றத்திலும் பாவனையிலும் வினாவிலும் ஏதோ உள்பொருள் இருப்பதாகத் தோன்ற, சாந்தனு நிதானித்தார்..‘அம்மா, நீ யார்? இத்தனை பிள்ளைகளையும் ஏன் ஆற்றில் இட்டாய்? உண்மையைச் சொல் தாயே’ என்று கேட்டுக் கொள்ள, அவளும் சொன்னாள். தன் கதையை, தன்னிடம் உதவி நாடியவர் கதையை, தவறு செய்தவர்கள் தண்டனை பெற்ற கதையை, தர்மத்தைக் காப்பாற்றுகிற பணியே தலையாயது என்னும் கதையைச் சொன்னாள்.ஆரணங்கு உரைத்த அந்தக் கதை, ஆற்றுப் பிள்ளைகளின் அனுதாப முன்கதைதான் என்ன?ஒரு முறை, பிரம்மாவின் சத்தியலோகச் சபைக்கு கங்காதேவி சென்றாள். அழகும் அறிவும் மிக்கவளான அவள், கம்பீரமாக நடந்துசென்று பிரம்மதேவனை வணங்கினாள். கல்வியில் சிறந்தவர்களாக தேவர்கள் விளங்கினாலும், அவர்களில் பலர் மனக்கட்டுப்பாட்டை இழந்திருந்தார்கள். இதனைத் தெரிந்துகொள்வதற்காக, வேண்டுமென்றே வேகமாக வீசினான் வாயுதேவன். இதன் விளைவாக, பிரம்மனை வணங்கிக் கொண்டிருந்த கங்கையின் ஆடை சற்றே நெகிழ்ந்து, மறைவுப் பகுதிகள் சற்றே வெளித் தெரிந்தன. பிரம்ம சபையில் இருந்த தேவர்கள் அனைவரும் கண்களை மூடிக்கொள்ள, ஒருவன் மாத்திரம், வாயுதேவனுக்கு வாழ்த்துரைத்துக் கொண்டே, கண்களை மேலும் விரித்தான். அவன்தான், வருணன். கங்கையைக் காண்பதற்குத் தனக்குக் கிட்டிய வாய்ப்புக்காக, வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த வாயுவுக்கு மானசீகமாக வாழ்த்துரைத்தான்; கங்கையை உற்று நோக்கினான். .இதனைக் கண்ணுற்ற பிரம்மா, சாபம் கொடுத்தார். ‘இன்னமும் யாந்திரிக ஆசைகள் நிறைவேறாமல், மனத்தைக் கட்டுப்படுத்த முடியாமலா இருக்கிறாய்? பூமியில் சென்று பிறப்பாய்’ என்று வருணனுக்கும், ‘உன்னை அவன் நயந்தபோது ஆடைகளை உடனடியாகத் திருத்தத் தெரியாமல் இருந்தாய் அல்லவா? அவனுடைய பார்வையை மகிழ்ச்சியுடன் ஏற்றாய் அல்லவா? அவன் மானுடனாகப் பிறக்கும்போது, அவனோடு வாழ்ந்து, சிலகாலம் மனிதப் பெண்ணாகவே இருந்து, பின்னர் தக்க நேரத்தில் அவனுக்கு உண்மை உரைத்து உன் உருவை அடைவாய்’ என்று கங்கைக்கும் சாபமிட்டார்.வருத்தத்துடன் மண்ணுலகம் நோக்கி வந்த கங்கை, வழியில் ஒளிமங்கி நின்ற எண்மரைச் சந்தித்தாள். கங்கையைக் கண்டவுடன் அடையாளம் தெரிந்துகொண்ட அவர்கள், உடனடியாக அவளை வணங்கினர். பூமிக்கு வரும் காரணம் என்ன என்று வினவினர். அவளும் காரணத்தைக் கூறினாள். தங்களின் துன்பத்தையும் அவர்கள் மொழிந்தனர்..அவர்கள் எட்டுப்பேரும், அஷ்ட வசுக்கள் என்றழைக்கப்படும் உயர் தோன்றல்கள்; முப்பத்து முக்கோடி தேவர்களில் அடங்குவர். எட்டுப் பேரில் கடைக்குட்டி, பிரபாசன் என்பவன். பிரபாசனின் மனைவி ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் கொண்டவள். அவளுடைய உந்துதலால், வசிட்டரின் ஆசிரமத்தில் இருந்த காமதேனுப் பசுவைப் பிரபாசன் திருட, மீதமிருந்த எழுவரும் அதற்கு உடந்தையாகி, அவனுடன் சென்றனர்.பசுவை யாரோ திருடிவிட்டார்கள் என்னும் தகவல், வசிட்ட மாமுனிக்குச் சென்றது. ஞான திருஷ்டியில் திருடியவர் யார் என்பதை அவர் அறிந்தார். திவ்ய வடிவில், ஒளி பொருந்தியவர்களாக இருக்கும் நிலையிலிருந்து, தங்களில் அதர்மச் செயலால் வசுக்கள் கீழே விழுந்துவிட்டார்கள் என்பதையும் உணர்ந்தார். பூமியில் பிறந்து தங்களின் தவறுக்கு அவர்கள் கழுவாய் தேடவேண்டும் என்று ஆணையிட்டார்..தலைகுனிந்து நின்ற வசுக்கள் எண்மரும், தங்களுக்கு எப்போது விடிவு என்று யாசித்தனர். வசிட்டரின் கோபம் நெடுநேரம் தங்காதில்லையா? கருணை கொண்டார். ’பூமியில் பிறந்தவுடனேயே, அப்பிறப்பின் காரணத்தாலேயே பரிகாரம் கிடைத்து, உடனடியாகப் பிறப்பு நீங்கப்பெறுவீர்’ என்று ஏழு பேருக்கு விமோசனம் காட்டினார். ஒருவனுக்கு மட்டும், ’எந்தப் பிரபாசன் மனைவியின் சொல் கேட்டுக் காமதேனுவைத் திருடினானோ, அந்தப் பிரபாசனுக்கு மட்டும் பூமி வாழ்க்கை நீளும்; அதுமட்டுமின்றி, பெண் மோகத்தால் தவறு செய்த அவன், பூமியில் பெண்ணால் கிட்டும் இல்லற உறவின்றி இருப்பான்’ என்று மேலும் உரைத்தார்.அஷ்ட வசுக்களும்தாம், கங்கையை வழியில் சந்தித்தனர். தங்கள் குறையைக் கூறினர்..எல்லாவற்றையும் கேட்ட கங்கை, அவர்களுக்கு ஆறுதல் கூறினாள். ’வருணதேவனே, குரு வம்சத்தில் மன்னனாகப் பிறப்பான். அப்போது, அவன் மனைவியாக யான் வருவேன். அந்த சமயத்தில், நீங்கள் எட்டுப் பேரும் எங்களின் மக்களாகத் தோன்றுவீர்கள். அப்போது உங்கள் உய்வுக்கு நான் வழிகாட்டுவேன்’ என்று வருங்காலம் உரைத்தாள்.நால் இரு வசுக்களும் நதிமடந்தை சொல் பால் இரு செவிப்பட படாத நல்தவம் சால் இரு நிலத்திழி தாயை அன்புடன் கால் இரு கரத்தினால் கசிந்து போற்றினர்நதிப்பெண்ணாளான கங்காதேவியும் சொற்களைச் செவியுற்ற அஷ்டவசுக்கள் எண்மரும், நல்ல தவப்பயன் கொண்டதான பூமிக்கு இறங்கிக்கொண்டிருந்த கங்கையைக் கால்களில் பணிந்து, தத்தம் கைகளால் வணங்கினர்.சதய நட்சத்திரத்திற்கு உரியவனான வருணன், சந்திர குலத்தில், குருவின் வம்சத்தில், கங்கை நல்லாள் பல்கிப் பெருகிப் பாயும் அதன் நிலப்பரப்பில், சாந்தம் மிக்க சாந்தனு மன்னராய் உதித்தான். நதிக்கரையில் மன்னன் உலாவிக்கொண்டிருந்த வேளையில், மானுடப் பெண்ணாகி மன்னன் உள்ளத்தையும் உணர்வுகளையும் கங்கை கவர்ந்தாள்..முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும் என்பார் வள்ளுவப் பேராசான். எப்போதோ செய்தது, இப்போதோ அப்போதோ எப்போதோ வந்தே தீரும் என்பதை உறுதிப்படுத்துவதாகவே, பிள்ளைகளாய்ப் பிறந்த வசுக்கள், பிறந்தவுடன் உய்ந்தார்கள், ஒருவனைத் தவிர! தவறான செயலை மனைவி சொன்னாள்; அதன் சாதக பாதகம் பாராமல், மனைவி என்பதற்காகவே செய்த பிரபாசன், எட்டாவது பிள்ளையாகத் தோன்றினான். மனைவி சொல்லால் கெட்டவன், மனைவி என்னும் சிந்தனையையும் சொல்லையுமே துறந்தான். (பாரதம் விரியும்)