-பழங்காமூர் மோ.கணேஷ்பரந்தாமனாகிய ஸ்ரீமன் நாராயணர் இந்த பூமியில் புரிந்த லீலைகள் எண்ணிலடங்காதவை. அழகின் இலக்கணமாகத் திகழும் அந்த அழகர் பெருமாள் குடிகொண்டு அருளும் திருத்தலங்களும் எண்ணற்றவை..சுந்தரம், செளந்தரம் என்பதற்கு அழகு என்பது பொருளாகும். அப்படி சுந்தரனாக பெருமாள் வீற்றருளும் ஓர் அற்புத க்ஷேத்திரம்தான் சுந்தரப்பெருமாள் கோவில். ஆதியில் இது சுந்தரவனம், சமீவனம் (வன்னி மரக்காடு) என்றெல்லாம் போற்றப்பட்டுள்ளது.பஞ்ச நதிகள் என்று போற்றப்படும் காவிரியாறு, அரசலாறு, குடமுருட்டியாறு, திருமலைராஜன் ஆறு மற்றும் முடிகொண்டான் ஆறு ஆகிய ஆறு நதிகளுக்கு நடுவே இங்கு ஸ்ரீ சௌந்தரவல்லித் தாயாருடன் எழுந்தருள்கின்றார் ஸ்ரீ சௌந்தரராஜப் பெருமாள்..ஒரு சமயம் இந்திரனுக்கு சாபத்தால் தோல் நோய் ஏற்பட்டது. அதோடு, தனது இந்திர பதவியையும் இழந்தான். சாதாரண மானுடனாக மாறி, இப்பூவுலகை அடைந்தான். விமோசனம் வேண்டி அலைந்து திரிந்தான். பின் இச்சுந்தரவனத்தை அடைந்த இந்திரன், நாரதரின் தரிசனம் கிடைக்கப்பெற்றான்.அவர், "தினமும் ஒரு வெண்பூசணிக்காயை ஓர் அந்தணருக்கு தானம் செய்யவேண்டும். இதுபோல் 360 நாட்கள் தொடர்ந்து அந்தணருக்கு தானம் செய்தால் உன் தோல் நோய் நீங்கும்’’ என்று இந்திரனுக்கு ஆலோசனைக் கூறினார்..அதன்படி வெண்பூசணிக்காயை தினமும் ஓர் அந்தணர் வீதம் கொடுத்து வந்தான் இந்திரன். ஒருநாள் பல இடங்களில் தேடியும் அந்தணர் ஒருவரும் அகப்படவில்லை. மனம் வருந்திய இந்திரன் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணரை வேண்டி நின்றான். மனமிரங்கிய மலையப்ப சுவாமி, ஓர் ஏழை அந்தணராக உருவம் கொண்டு இந்திரன் முன் வந்து நின்றார். மனம் மகிழ்ந்த இந்திரன், அவருக்கு வெண்பூசணியை தானம் செய்தான். என்னே ஆச்சரியம்! அடுத்த நொடியே அவன் நோய் நீங்கப்பெற்று, பழைய நிலையை அடைந்தான் தேவேந்திரன்.திருமாலும் தனது அந்தண ரூபத்தை மாற்றிக்கொண்டு பன்னீர் மரத்தடியில் சௌந்தரவல்லித் தாயாருடன் சுந்தர ரூபத்தில் சௌந்தரராஜப்பெருமாளாகக் காட்சியருளினார். மனம் மகிழ்ந்த இந்திரன், தாங்கள் இங்கு வீற்றிருந்து சேவை சாதித்தருளவேண்டும் என்று வேண்டினான். அப்போது சூரிய - சந்திரர்கள் சாமரம் வீசிட, முப்பது முக்கோடி தேவர்களுடன், ஸ்ரீருத்ரரும் பிரம்மாவும் உடனிருந்து இந்திரனுக்கு ஆசிவழங்கினர். இந்தச் சம்பவம் நடைபெற்றது சுந்தரவனம் என்னும் சுந்தரப்பெருமாள் கோவிலில்தான்..ஊரின் உட்புறம் உயரிய மதில்கள் கொண்டு ஏழு கலசங்களுடனான ஐந்து நிலை இராஜகோபுரம் கிழக்குப் பார்த்தவாறு கம்பீரமாகக் காணப்படுகின்றது. உள்ளே முதலில் ஸ்ரீ தும்பிக்கை ஆழ்வாராக கணபதி இராஜகோபுரத்தின் கீழே வடக்கு முகமாகக் காட்சிதருகின்றார். வெளிப்புறத்தில் நந்தவனம் அமைக்கப்பட்டு மிகவும் ரம்மியமாக உள்ளது. தென்கிழக்கில் மடப்பள்ளியுள்ளது..நேராக பலிபீடமும், துளசிமாடமும் உள்ளன. பின் ஸ்ரீ கருடாழ்வார் கரம்குவித்தபடி வணங்கி நின்றுள்ளார். பின்னர் சிற்ப வேலைகளுடனான முகமண்டபம் காட்சியளிக்கின்றது. அடுத்ததாக இரண்டாம் வாயிலும், அதன் மேலே சிறிய மூன்று நிலை கோபுரமும் காணப்படுகின்றது. உள்ளே செல்ல, நான்கு கால் மண்டபம் அழகூட்டுகின்றது. இடதுபுறம் கொலு மண்டபம் காணப்படுகின்றது. வலப்புறம் ஸ்ரீ விஷ்வக்சேனர் என்னும் முதலியாண்டாரின் தனிச் சன்னதி உள்ளது. பக்கத்தில் ஸ்ரீ யோகநரசிம்மர், ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் ஸ்ரீ அனுமன் சன்னதிகள் உள்ளன. தொடர்ந்து ஆழ்வார்களின் தரிசனத்தையும் காண்கிறோம்..மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை ஆகிய அமைப்பில் பெருமாள் சன்னதி அமைந்துள்ளது. கருவறையில் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு ஸ்ரீதேவி - பூதேவியருடன் ஸ்ரீ சௌந்தரராஜப் பெருமாள் அழகே வடிவாய் அருட்காட்சி அருள்கின்றார். மனக்கஷ்டம், பணக்கஷ்டம் உள்பட சகல சங்கடங்களையும் தீர்க்கும் பெரும் வரப்பிரசாதி.மும்மூர்த்தி தலமாகத் திகழும் இப்பதியில் வடக்கு முகமாக பிரம்மாவும், தென்முகமாக ஸ்ரீ ருத்ரரும் அருள்பாலிக்கின்றனர். பெருமாளுக்குப் பின்புறம் சூரியனும், சந்திரனும் சாமரம் வீசிக்கொண்டிருக்கின்றனர். தேஜோமயமாய் அதிரூப சுந்தரனாய்த் திகழும் இப்பெருமாளை முப்பத்து முக்கோடி தேவர்களும், 41,000 ரிஷிகளும் மலர்த்தூவி வணங்கி நிற்பதாக ஐதிகம். சகல சௌபாக்யங்களும் வழங்கும் மூர்த்தியாக இங்கு சேவை சாதித்துக்கொண்டிருக்கின்றார் திருமால். தினமும் சூரிய ஒளியானது பெருமாள் மீது படர்வது ஓர் தனிச்சிறப்பாகும்..பெருமாள் சன்னதிக்கு வலதுபுறம் ஸ்ரீ சௌந்தரவல்லித் தாயார் சன்னதி கொண்டு அருள்பாலிக்கின்றாள். ஆண்டாள் சன்னதி இடதுபுறம் அமைந்துள்ளது. ஆண்டாள் சன்னதிக்கு வெளிப்புறம் தென்முகமாக சிறிய வடிவில், திருமாலிருஞ்சோலை என்னும் அழகர்கோவிலில் காட்சி தருவது போல் ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பர் அருள்புரிகின்றார். இவரிடம் எவ்வித வேண்டுதல் வைத்தாலும் விரைவில் நடந்திடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இது உட்பிராகாரமாகும்.சோழர்களின் கலைப்பொக்கிஷமாகத் திகழும் மிகப்பழமை வாய்ந்த இவ்வாலய திருப்பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயம்..சனிக்கிழமைகளில் ஸ்ரீ ராமநாம பஜனை நடைபெறுகிறது. புரட்டாசி சனிக்கிழமைகளில் விசேஷ வழிபாடு உண்டு. புரட்டாசியில் ஒரு சனிக்கிழமையன்று திருப்பாவாடை உற்சவம் அமர்க்களமாக நடைபெறும். திருவோண நட்சத்திரத்தன்று பெருமாளுக்கு திருமஞ்சன சேவை நடைபெறுகின்றது. நவராத்திரி, கிருஷ்ண ஜெயந்தி ஆகிய வருடாந்திர விசேஷங்கள் இங்கு சிறப்பாக அனுசரிக்கப்படுகின்றன.குழந்தை இல்லா தம்பதியர் தாயாருக்கு வளையல்கள் சாற்றி வழிபட, தடை விலகி குழந்தை பாக்கியம் கிடைக்கும். பல்வேறு நோய்களால் அவதிப்படுபவர்கள் அவர்களது நட்சத்திரத்தன்று பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து வழிபட்டு, வெண்பூசணிக்காயை தானம் கொடுக்க விரைவில் நோய் குணமாகுகிறதாம்..எங்கே இருக்கு?கும்பகோணத்தில் இருந்து 16 கி.மீ. தொலைவிலும், பாபநாசத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும் சுந்தரப்பெருமாள்கோவில் அமைந்துள்ளது.தரிசன நேரம்காலை 6 – 10; மாலை 5 - இரவு 7.ஆலய தொடர்புக்கு:- ஆராவமுதன் பட்டர் :- 9092399553.