-வெ.கணேசன்புராதனப் பெருமையும் பண்பாடும் ஒளிரும் நம் பாரத மண்ணில் சக்தி வழிபாடு நீண்ட நெடுங்காலமாக நீடித்துவருகிறது. அங்கிங்கெனாதபடி எங்கும் பரவி நிற்கும் தாய் மூகாம்பிகை, மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இராஜபாளையம் அருகே கலங்காப்பேரி என்ற இடத்தில் ஆலயம் கொண்டு அருள்பாலித்து வருகிறாள்..இந்த அம்மன் இங்கு எழுந்தருளியிருப்பதன் பின்னணியில் ஒரு சம்பவம் உள்ளது. கர்நாடக மாநிலம், கொல்லூரில் சௌபர்ணிகா நதிக்கரையில் அமைந்துள்ளது தாய் மூகாம்பிகைக் கோவில். பிரசித்தி பெற்ற சக்திப்பீடங்களுள் ஒன்று. இந்த அம்பாளின் தரிசனத்திற்காக பாபநாசம் ஸ்ரீ சண்முக சுவாமிகளின் சீடரான சிவசக்தி சண்முகபாலா சுவாமிகள் தலைமையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட அடியார்கள் ஆண்டுதோறும் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.ஒருமுறை அவர்கள் சென்றபோது ஆலய வழிபாடு செய்வதற்கு முன் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது சீடர் ஒருவர் ஆற்றிலிருந்து சுயம்புலிங்கம் ஒன்றை வெளியே எடுத்துக்கொண்டு வந்தார். இதன் மூலம் அம்பாள் தனக்கொரு கோவில் எழுப்பவேண்டும் என்பதை குறிப்பால் உணர்த்துவதை அனைவரும் அறிந்துகொண்டனர். கொல்லூரைப் போல் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் கோயில் அமைக்க விரும்பினர். அதனடிப்படையில் இராஜபாளையம் - ஸ்ரீவில்லிபுத்தூர் நெடுஞ்சாலையில் கலங்காப்பேரி என்னும் சிற்றூரில் வானளாவ உயர்ந்து விளங்கும் மொட்ட மலை எதிரே ஒரு இடத்தைத் தேர்வு செய்தனர்..பசுமைப் பூத்துக்குலுங்கும் அந்த இடத்தில் சுயம்புலிங்கத்தை பிரதிஷ்டை செய்தனர். அதற்கு அருணாசலேஸ்வரர் என்ற பெயரிட்டு தொடர்ந்து தினசரி வழிபாடுகளைச் செய்து வருகின்றனர். இந்த சிவாலயத்திற்கு கிழக்கே வடக்குப் பார்த்த வண்ணம் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் என்ற அமைப்பில் தாய் மூகாம்பிகைக்கு எழிலான கலை வண்ணத்தில் பிரமாண்ட கோயில் ஒன்றை எழுப்பினர். ஐந்து அட்சரங்கள் மீது மூலவராகிய தாய் மூகாம்பிகை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். தினமும் அதிகாலை ஹோமத்துடன் உதயமார்த்தாண்ட பூஜை உள்பட பல பூஜைகள் நடைபெறுகிறது. குறிப்பாக, அமாவாசை நாளன்று மாலை 5 மணிக்கு துவங்கும் சிறப்பு வழிபாட்டில் சுற்று வட்டார ஊர்களில் இருந்து திரளான அடியார்கள், வணிகர்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொள்கின்றனர். இந்த வழிபாட்டின் மூலம் பொருளாதார பிரச்னைகள் விலகி வாழ்க்கையில் நலமும், வளமும் பெருகும் என்பது ஐதிகம். இதில் நம்பிக்கையோடு கலந்துகொண்டு அம்பிகையின் அருள் பிரசாதத்தைப் பெற்றுச் செல்வதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.. சாலக்கோபுர வாசல் தாண்டியதும் விசாலமான உள்சுற்று. அதில் செப்புக்கவசம் போர்த்திய கொடிமரம், பலிபீடம், சிம்ம வாகனம் ஆகியவை உள்ளன. இதனையடுத்து மூன்று நிலை இராஜகோபுரம் எழிலாகக் காணப்படுகிறது. கோபுர வாசல் வழியாக உள்ளே நுழைந்ததும் மகாமண்டபமும், சந்நதி எதிரே திரிசூலமும் உள்ளது. அர்த்த மண்டப வாசலில் துவாரசக்தியர், ஆதிசங்கரர் விக்ரகங்கள் உள்ளன. அர்த்த மண்டபத்தில் விநாயகர், பாபநாசம் ஸ்ரீசண்முக சுவாமிகள் விக்ரகங்கள் உள்ளன.. கருவறையில் மூலவராக தாய் மூகாம்பிகை சிம்ம பீடத்தில் அமர்ந்த கோலத்தில் எழுந்தருளியிருக்கிறாள். மணிமகுடம் தாங்கி வலது மேல் கரத்தில் ஸ்ரீ விஷ்ணு சக்கரமும், இடது மேல் கரத்தில் சங்கும் ஏந்தியிருக்க, வலது கீழ்க்கரம் அபய முத்திரையும், இடது கீழ்க்கரம் வரத முத்திரையும் காட்டியபடி தன் அடியார்களுக்கு அருளை வாரி வழங்கும் தாயாகக் காட்சியளிக்கிறாள். அம்பாளை நம்பி வந்தவர்களுக்கு சுபிட்சம் தடையின்றிக் கிடைத்து வருவதை தங்கள் அனுபவத்தின் மூலம் உணர்ந்துள்ளனர் பல அடியார்கள். எனவே, ராஜபாளையம், சத்திரப்பட்டி ஆகிய ஊர்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீட்டு சுபகாரியங்களை இந்த சந்நதியில் வைத்துப் பேசிமுடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால் ஆண்டு முழுவதும் இத்தலத்தில் அடியார்கள் திரளாகக் கூடுகிற காட்சியை நாம் பார்க்கமுடிகிறது. கோஷ்டத்தில் சப்தகன்னியர், திருவள்ளுவர், அகத்தியர், அஷ்டலட்சுமி விக்ரகங்கள் உள்ளன. மூலவர் விமானம் நாகர வடிவில் உள்ளது. உள்சுற்றில் ஸ்ரீசக்ர காலபைரவர், தட்சிணாமூர்த்தி, நவகிரகம், மகா அக்னி மண்டபம், சித்தி விநாயகர், விஷ்ணு துர்க்கை, சுப்பிரமணியர், லட்சுமி நரசிம்மர், ஐயப்பன், ஆஞ்சநேயர், சனீஸ்வரர் ஆகிய பரிவார தேவதை சந்நதிகள் அமைந்துள்ளன. அம்பாள் வனம் செல்லும் வாசல் மேற்குச் சுற்றில் உள்ளது. இதில் பஞ்ச தலவிருட்சங்களாக வன்னி, வில்வம், ஆல், அரசு, ருத்ராட்சம் ஆகியவை செழித்தோங்கி வளர்ந்துள்ளன. இவ் விருட்சங்களின்மீது வெற்றிலை பசுமையுடன் படர்ந்திருப்பது கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியைத் தருகிறது. தினமும் ஐந்து கால பூஜை நடைபெறுகிறது. வெள்ளி, ஞாயிறு ஆகிய இரு நாட்களில் அம்பாளுக்கு வெள்ளிக்கவசம் சாத்தி அபிஷேகம் நடைபெறும். அன்று வெளியூரிலிருந்து திரளான பக்தர்கள் வந்து கலந்துகொண்டு அருள் பிரசாதம் பெற்றுச் செல்வது வழக்கமாக உள்ளது. சித்திரை தமிழ் வருடப்பிறப்பு, ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை, மகாதீபம், மார்கழி 30 நாட்கள் திருப்பள்ளியெழுச்சி, தைப்பொங்கல், மகாசிவராத்திரி, பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி, நரசிம்ம ஜெயந்தி, ஆஞ்சநேயர் ஜெயந்தி என அநேக உற்சவங்கள் ஆண்டு முழுவதும் வெகு உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. உடல்நலக் குறைபாடு உள்ளவர்களுக்கு வைத்தியமும், சித்த மருந்துகளும் இலவசமாக அளிக்கப்படுகிறது. சந்தான பாக்கியம் கிட்ட, தொழில் அபிவிருத்தி அடைய எனப் பல்வேறு காரணங்களுக்காக இத்தலம் வந்து நம்பிக்கையோடு வழிபட்டு பலர் பலனடைந்து வருகின்றனர். குறையில்லா பெருவாழ்வு வேண்டுவோர் அவசியம் ஒருமுறை இத்தலத்திற்கு குடும்பத்தோடு வந்து தரிசித்துச் செல்லலாமே!.எங்கே இருக்கு?விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் - ஸ்ரீவில்லிபுத்தூர் நெடுஞ்சாலையில் (வன்னியம்பட்டி விலக்கு வழி) 5 கி.மீ. தொலைவில் மொட்டை மலை எதிரில் கலங்காப்பேரி என்ற சிற்றூரில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. தரிசன நேரம்காலை 5.30 – பகல் 12.30; மாலை 4.30 – இரவு 7.30.