-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீகுமுதம் பக்தியின் வாசக பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த மங்களகரமான சோபகிருது வருடத்தில், புரட்டாசி மாதம் 21-ம் தேதி (8.10.2023), ஞாயிற்றுக்கிழமை அன்று உதயாதி நாழிகை 23.50க்கு, அதாவது மாலை 3.40 மணிக்கு, அஸ்வினி நட்சத்திரம் 1-ம் பாதம் மேஷ ராசியில் இருந்து ரேவதி நட்சத்திரம் 4-ம் பாதம் மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார், ராகு பகவான்.சரியாக அதே நேரத்தில், சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசியில் இருந்து சித்திரை நட்சத்திரம் 2-ம் பாதம் கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார், கேது பகவான்.இந்த அமைப்பின்படி பன்னிரண்டு ராசிகளுக்குமான பலன்களில், சென்ற இதழின் இணைப்புப் புத்தகத்தைத் தொடர்ந்து இந்த இணைப்புப் புத்தகத்தில் துலாம் முதல் மீனம் வரையான ராசிகளுக்கு உரிய பலன்கள் தரப்பட்டுள்ளன.அவரவர் ராசிக்கு உரிய பலன்களைப் படியுங்கள். எளிய பரிகாரங்களைச் செய்யுங்கள். ஆண்டவன் ஆசியோடு, அரவு கிரஹங்களின் அனுகிரஹமும் கிட்டும். உங்கள் வாழ்வில் உன்னதங்கள் சேரும்..துலாம் ராசிக்காரர்களே..!இதுவரை உங்க ராசிக்கு களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்துல இருந்த ராகு இப்போது ஆறாமிடமான சத்ரு ரோக ஸ்தானத்துக்கு வர்றார்ங்க. அதே சமயத்துல உங்க ஜன்மத்துல இருந்த கேது, பன்னிரண்டாமிடமான விரயஸ்தானத்துக்குச் செல்கிறார்ங்க.இது, நீங்க முயற்சிகளால் முன்னேறக்கூடிய காலகட்டமாக இருக்கும்க. பணியிடத்துல தன்னம்பிக்கை அதிகரிக்கும்க. அதை அசட்டுத் துணிச்சலா ஆக்கிக்காம, பொறுப்பு உணர்ந்து செயல்பட்டா, பெருமையும் பாராட்டும் தேடிவரும்க. வீண்பழி சுமத்தக்கூடியவங்களோட நயவஞ்சகப் பேச்சை நம்பி ஏமாந்துபோக நேரிடலாம்க. எந்தச் சமயத்துலயும் அவசரமும் அலட்சியமுமா கையெழுத்திடுவதோ, பணத்தைக் கையாள்வதோ கூடாதுங்க. உங்க திறமை மேலிடத்தால் உணரப்பட்டு உயர்வும் பெருமையும் பெறுவது நிச்சயம்க.குடும்பத்துல இருந்த இறுக்கமான சூழல் மறைஞ்சு நெருக்கமான சூழல் உருவாகும்க. சங்கடமும் சலிப்புமாகவே இருந்த நிலைமாறி, சந்தோஷங்கள் வரத்தொடக்கும்க. உறவுகளிடையே நெருக்கமும் வாழ்க்கைல விடியலும் வரும்க. வீடு, மனை வாங்க யோகம் வரும்க. பத்திரங்களை கவனமா படிச்சுப் பார்க்கறது அவசியம்க. பூர்வீகச் சொத்துல விட்டுக்கொடுத்துப்போங்க. பெண்களுக்கு மனம்போல மாற்றங்கள் ஏற்படும்க. தசாபுக்திகள் சிறப்பாக உள்ளவங்களுக்கு, திடீர் யோகத்தால பெரும் அதிர்ஷ்டம் ஏற்படக்கூடும்க. வாரிசுகளால மகிழ்ச்சி ஏற்படும்க. விலை உயர்ந்த பொருட்களை இரவல் தருவது, பெறுவதைத் தவிருங்க.செய்யும் தொழில்ல தேக்க நிலை மாறி லாபம் சீராக வரத்தொடங்கும்க. அது தொடரணும்னா நீங்க முழுமையான கவனத்தைச் செலுத்தணும்க. அயல்நாட்டு வர்த்தகம் லாபம் தரும்க. சிலருக்கு புதிய வர்த்தக வாய்ப்புகளும் கிட்டும்க.அரசியல் சார்ந்தவங்களுக்கு ஆதரவு அதிகரிக்கும்க. புறம்பேசும் நபர்களைப் புறம்தள்ளுங்க. யாருக்கும் வாக்குறுதி தருவதைத் தவிருங்க. அரசுப்பணியில பணத்தைக் கையாளும் பொறுப்புல உள்ளவங்க, கவனமா இருக்கணும்க. தாமதமானாலும் எதிர்பார்த்த மாற்றங்கள் நிச்சயம் வரும், பொறுமையா இருங்க.மாணவர்கள் திட்டமிட்டும் கவனம் சிதறாமலும் படிச்சா, உங்க தனித்திறமை நிச்சயம் பளிச்சிடும்க. தடையாக இருந்த விஷயங்களே படியாக மாறும்க. அனுமதிபெற்றுச் செல்லுங்க.கலை, படைப்புத் துறையினர் நல்ல வாய்ப்பை ஜம்பத்தால மறுத்துட்டு, பெரிய வாய்ப்பு வரும்னு காத்திருப்பது தவறுங்க. சஞ்சலமும் சபலமும் எட்டிப்பார்க்காம கவனமா இருங்க. சகலமும் நன்மையாகும்.பயணம் பத்திரமாக இருக்கணும்னா, வாகனத்துல சிறுபழுதும் உடனே சீர்செய்யப்படறது அவசியம்க.கழுத்து, நரம்பு, சுவாச உபாதைகள், பரம்பரை நோய் அறிகுறிகள், ஜீரண பிரச்னைகளை உடனே கவனியுங்க. தினமும் வியர்வை வெளியேறும் அளவுக்கு சிறிது நேரமாவது உடற்பயிற்சிகளைச் செய்யுங்க. வெளியிடத்து உணவுகளைத் தவிருங்க. வறுத்த, பொரித்த நொறுக்குத் தீனிகளை விலக்குங்க. உணவை முறைப்படுத்துங்க. அறுபது வயதைக் கடந்தவங்க பயத்தையும் வீண் உணர்ச்சி வசப்படலையும் தவிருங்க.இந்தக் காலகட்டத்துல ஒருமுறை ஸ்ரீசைலம் சென்று சுவாமி, அம்பாளை வணங்கிட்டு இயன்ற அளவு பச்சரிசியை அன்னதானத்துக்கு வாங்கிக் கொடுத்துட்டு வாங்க. உங்க வாழ்க்கை மணக்கும்..விருச்சிகம் ராசிக்காரர்களே..!இதுவரைக்கும் உங்க ராசிக்கு ஆறாமிடமான சத்ருரோக ஸ்தானத்துல இருந்த ராகுபகவான், ஐந்தாமிடமான பூர்வபுண்ணிய ஸ்தானத்துக்கு வர்றார்ங்க; அதே சமயத்துல உங்க ராசிக்கு பன்னிரண்டாம் இடமான விரயஸ்தானத்துல இருந்த கேது, பதினோராம் இடமான லாபஸ்தானத்துக்கு வர்றார்ங்க.இந்த அமைப்பின்படி இது உங்க திறமைக்கு ஏற்ப உயர்வுகள் வரக்கூடிய காலகட்டமாக இருக்கும்க. அதேசமயம் சோம்பல் இல்லாத உழைப்பும் அவசியம்க. அலுவலகத்துல உங்க திறமை பலரால் பாராட்டப்படும்க. சிலரோட நயவஞ்சகத்தால திரையிட்டு மூடப்பட்டிருந்த உங்க செயல்திறன் உயர் அதிகாரிகளால் உணரப்படும்க. சோம்பலை விரட்டறதுல சோம்பல் வேண்டாம்க. செயல்களை குறித்த நேரத்துல செய்யாம தள்ளி வைக்கறதுதான் உங்களோட முன்னேற்றத்துக்கே தடையாக மாறிடலாம், உணர்ந்து செயல்படறது உத்தமம்க. அதிகாரத்தால பிறரை வேலை வாங்க நினைக்காம, அன்பாக ஆதரவு திரட்டினா, எதிர்காலத்துலயும் ஏற்றம் நிலைத்திருக்கும்க.குடும்பத்துல குழப்ப சூழல் மறைஞ்சு வசந்தகாலம் பிறக்கும்க. வாழ்க்கைத் துணையுடன் இருந்த சுணக்கம் நீங்கும்க. இந்த சமயத்துல உங்க வார்த்தைகள் சுடு சொல்லாக இல்லாம பார்த்துக்கிட்டா, இல்லத்துல குளுமை நிரந்தரமாகும்க. வாரிசுகள் வாழ்க்கைல இருந்த கல்வி, திருமணம், பணி தடைகள் நீங்கும்க. வரவு அதிகரிக்கும்க. அதேசமயம் செலவுகளும் சேர்ந்தே வரும்க. கடன்களை ஆடம்பரத்துக்காக வாங்கவேண்டாம்க. பெண்களுக்கு நன்மைகள் வரத்தொடங்கும் காலகட்டம்க. குடும்பத்துல உங்க வாக்குதான் நிம்மதியை நிர்ணயிக்கும், உணர்ந்து பேசறது உத்தமம்க. பணிபுரியும் பெண்களுக்கு மேன்மைகள் ஏற்படும்க. அதேசமயம் பதவி, பொறுப்பு உயர்வுகளுடன் வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்பு வரக்கூடும்க. சகோதரவழி உறவுகளுடன் இருந்த மனக்கசப்பு மறையும்க.செய்யும் தொழில்ல லாபத்தின் அளவுகோல் அதிகரிக்கும்க. எதிர்பார்த்த அரசு அனுமதி, வங்கிக் கடன்கள் நிச்சயம் கிட்டும்க. வரவை முறையாக சேமிக்கறதும், தெரிஞ்ச தொழில்ல மட்டுமே முதலீடு செய்யறதும் நல்லதுங்க. அயல்நாட்டு வர்த்தகம் சீராகும்க. புதிய ஒப்பந்தங்கள்ல கவனமா இருங்க. அரசியல் சார்ந்தவங்களுக்கு ஆதரவு அதிகரிக்கும்க. மேலிடத்தின் அனுமதி இல்லாம எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டாம்க. பொது இடங்கள்ல பேசும்போது வார்த்தைகள்ல நிதானமா இருங்க. அரசுத்துறையினருக்கு உடனிருப்போர் ஆதரவு மகிழ்ச்சி தரும்க. புதிய பொறுப்பும் பதவியும் புகழுக்கு ஆதாரமா அமையும்க.மாணவர்களுக்கு உயர்வுகளும் உன்னதமும் வரும் காலகட்டமா இருந்தாலும், மேன்மைகளை நிலைக்க வைச்சுக்க முடங்காத முயற்சிகளும் அவசியம்க. அன்றன்றைய பாடங்களை அன்றன்றே படிக்கறதுல சோம்பல் வேண்டாம்க. கலை, படைப்புத் துறையினர்க்கு திறமை பிரகாசிக்கக்கூடிய காலகட்டம்க. பலநாள் கனவு நனவாகி, வாய்ப்புகள் வரத்தொடங்கும்க. படைப்பு சார்ந்த ரகசியங்களை பரமரகசியமா வைச்சுக்குங்க.வாகனத்தை ஸ்டார்ட் செய்யும்போதே செல்போனை ஆஃப் செய்துடுங்க. வேகம் இல்லாத பயணம்தான் விவேகம், உணர்ந்து வாகனத்தைச் செலுத்துங்க.இந்தக் காலகட்டத்துல கழிவு உறுப்பு, கண்கள், வயிறு உபாதை வரலாம்க. இயன்ற வரை சைவ உணவுக்கு மாறுவதே உங்க உடல்நலம் சீராக இருக்க எளிய பரிகாரம்க.இந்தக் காலகட்டத்துல ஒருமுறை திருச்செந்தூர் சென்று செந்தில் ஆண்டவரை மனதார வணங்குங்க. இயன்ற அளவு பச்சரிசி வாங்கி கோயில் மடைப்பள்ளிக்குக் கொடுங்க. உங்க வாழ்க்கைத்தரம் உயரும்..தனுசு ராசிக்காரர்களே..!இதுவரைக்கும் உங்கராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வபுண்ணிய ஸ்தானத்துல இருந்த ராகு உங்க ராசிக்கு நான்காம் இடமான மாத்ரு ஸ்தானத்துக்கு வர்றார்ங்க. அதேசமயத்துல பதினோராம் இடமான லாபஸ்தானத்துல இருந்த கேது, பத்தாம் இடமான ஜீவனஸ்தானத்துக்கு வர்றார்ங்க.இந்த அமைப்பின்படி இது உங்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும் காலகட்டமாக இருக்கும்க. அதேசமயம், பணியிடத்துல திட்டமிடலும் நேரம்தவறாமையும் அவசியம்க. எந்தச் சமயத்திலும் அலட்சியமும் அவசரமும் கூடாதுங்க. முக்கியமான தீர்மானங்களை எடுக்கும் முன் உங்க மேல உண்மையான அக்கறை உள்ளவங்க ஆலோசனையைக் கேளுங்க. எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம்க. திடீர்னு வரக்கூடிய மாற்றத்தைக் கண்டு தயங்க வேண்டாம்க. தவிர்க்காம அதனை ஏற்றுக்கறதும் உங்களை ஏற்றத்தின் பாதையில அழைத்துச் செல்லும்க.வாழ்க்கைல நல்லது நடக்கணும்னா, வார்த்தைகள்ல நிதானம் அவசியம்க. வீட்டுல விட்டுக் கொடுத்தல் உங்க பங்காக இருந்தா, விசேஷங்கள் தேடிவரும்க. பெற்றோர் வார்த்தைகளை மதிச்சா, சுபதடைகள் விலகும்க. செலவுகளை சுபசெலவாக்கி சேமிக்கறதுதான் புத்திசாலித்தனம்க. தாய்வழி உறவுகள் உடல்நலத்துல கவனம் அவசியம்க. கொடுக்கல் - வாங்கல் எதையும் உடனுக்குடன் குறிச்சு வைச்சுக்கறது நல்லதுங்க. மூன்றாம் நபர் தலையீட்டை குடும்பத்துல அனுமதிக்க வேண்டாம்க. பெண்கள், பிறர் குறையைப் பேசாமல் இருந்தாலே உங்க வாழ்க்கைல நல்லவை நிறையும், உணர்ந்து நடந்துக்குங்க.வர்த்தகம் எதுவானாலும் அதுல நேரடிகவனமும் நேர்மையான முயற்சிகளும் அவசியம்க. கூட்டுத் தொழில்ல சீரான லாபம் கிடைக்கும்க. புதிய நபர்களுடன் அவசர ஒப்பந்தம் கூடாதுங்க. வங்கிக் கடன்களை ஆடம்பரத்துக்குச் செலவிட வேண்டாம்க. அரசுவழி அனுமதிகளுக்கு நேரடியாகவும் நேர்மையாகவும் முயற்சி செய்யுங்க.அரசியல் சார்ந்தவங்க பொறுப்பு உணர்ந்து செயல்பட்டா, பதவி, பொறுப்புகளைப் பெறுவதும் சாத்தியமாகும்க. உடனிருந்தே உபத்திரவம் செய்தவங்களை விட்டு விலகிடறதுதான் உங்களுக்கு நல்லதுங்க. அரசுத்துறையினர், மூன்றாம் நபரை நம்பி முக்கியப் பொறுப்புகள் எதையும் ஒப்படைக்க வேண்டாம்க. நேரடி கவனமும் நேர்மையும் இருந்தா எல்லாமே ஏற்றமாக அமையும்க.மாணவர்களுக்கு கல்வியில் மேன்மையும் கலைகளில் உயர்வும் கிடைக்கக் கூடிய அமைப்புங்க. இந்தச் சமயத்துல கவனம் முழுக்க படிப்புலயே இருந்தா, முன்னேற்றம் முழுமையாக இருக்கும்க.கலை, படைப்புத் துறையினருக்கு முயற்சிகளின் பலனாக வாய்ப்புகள் வரத்தொடங்கும்க. சகவாச தோஷம் சர்வத்தையும் நாசம் செய்துடலாம், சட்டுன்னு விலகிடுங்க.தொலைதூரப் பயணத்தை பகல்ல தொடங்கறது நல்லதுங்க. குடும்பத்துடன் ஒரே வாகனத்தில் செல்லும்போது லாகிரிக்கு இடம்தர வேண்டாம்க.கொழுப்புச் சத்து அதிகரிப்பு, அலர்ஜி, கழிவு உறுப்பு உபாதை, மூட்டு, முழங்கால் வலி, காது, மூக்கு, தொண்டை, நரம்பு உபாதைகள் வரலாம்க. ஏற்கெனவே பரம்பரை நோய் பாதிப்புக்காக சிகிச்சை எடுத்துக்கிட்டு இருக்கறவங்க கூடுதல் கவனத்துடன் இருக்கறது அவசியம்க.இந்தக் காலகட்டத்துல ஒருமுறை பட்டீஸ்வரம், திருநாகேஸ்வரம் தலங்களுக்குச் சென்று துர்க்கையையும், அரவு கிரஹங்களையும் ஆராதனை செய்துட்டு வாங்க. உங்க வாழ்க்கை வசந்தமாகும்..மகரம் ராசிக்காரர்களே..!இதுவரைக்கும் உங்க ராசிக்கு நான்காமிடமான மாத்ரு ஸ்தானத்தில் இருந்த ராகு இப்போது மூன்றாம் இடமான சகோதர ஸ்தானத்துக்கு வர்றார்ங்க. இந்த சமயத்துல உங்க ராசிக்குப் பத்தாமிடமான ஜீவன ஸ்தானத்துல இருந்த கேது, ஒன்பதாமிடமான பித்ரு ஸ்தானத்துக்கு வர்றார்ங்க.இந்த அமைப்பின்படி இது உங்களுக்கு நன்மைகளைத் தரக்கூடிய காலகட்டமாக இருந்தாலும் வீண் தர்க்கமும் வேண்டாத வார்த்தைகளும் அறவே தவிர்க்கணும்க. அலுவலகத்துல உங்க திறமை உணரப்படும்க. அதேசமயம், எல்லாம் தெரியும் என்ற நினைப்பை அறவே தவிர்க்கணும்க. சிலருக்கு திடீர் இடமாற்றம், பதவி மாற்றம் வரலாம்க. தவிர்க்காம ஏற்றுக்கிட்டா, தலை நிமிர்ந்து நடக்கலாம்க. எந்த வேலையானாலும் வெறுப்பு இல்லாம பொறுப்பு உணர்ந்து செயல்பட்டாலே உங்க பெருமை அதிகரிக்கும், உணர்ந்து நடந்துக்கறது புத்திசாலித்தனம்க.இல்லத்துல் இனிமை இடம்பிடிக்கும்க. விசேஷங்கள் படிப்படியா வரத்தொடங்கும்க. என்றோ உங்களை ஏளனம் செய்தவங்களை இன்றும் மனசுல வைச்சுக்கிட்டு வெறுப்புல வார்த்தைகளை நெருப்பாகக் கொட்டறது கூடாதுங்க. வரவுல ஒரு பங்கை சேமிக்கப் பழகுங்க. ஆடை, ஆபரணம், பொருள் சேரும்க. இந்த ராசிப் பெண்கள், பெற்றோர் வார்த்தைகளுக்கு மதிப்பு குடுத்தா, திருமணத் தடை நீங்கும்க. மகப்பேறுக்காகக் காத்திருக்கறவங்க, முறையான மருத்துவப் பரிசோதனைகள், சிகிச்சைகளை தவறாம எடுத்துக்கறது அவசியம்க. புன்னகை முகமும், அன்பான வார்த்தைகளும் உங்க வாழ்க்கையை வசந்தமாக்கும், உணர்ந்து நடந்துக்குங்க.செய்யும் தொழில்ல நிச்சயம் ஏற்றமும் மாற்றமும் வரும்க. கூட்டுத் தொழில்ல புதிய நபர்களை நம்புவதைவிட பழைய நட்புக்கே முதலிடம் தர்றது நல்லதுங்க. அரசுவழி அனுமதி, வங்கிக்கடன்கள் தாமதமானாலும் நிச்சயம் கிட்டும்க.அரசியல் சார்ந்தவங்க, பொறுப்பு உணர்ந்து நிதானமாகச் செயல்பட்டால், இருக்கும் பதவியிலேயே நிம்மதியாக இருக்கலாம்க. அரசுத் துறையினர், அமைதியாகச் செயல்படவேண்டிய காலகட்டம்க. மேலிடத்திடம் அநாவசிய விவாதமும், வேண்டாத கேளிக்கைகளும் அறவே தவிருங்க. உங்க நிழலாக இருந்தாலும் பணியிட ரகசியங்களைப் பகிர்ந்துக்காதீங்க.மாணவர்கள் அவரவர் திறமைக்கு உரிய பெருமையை நிச்சயம் பெறலாம்க. சோம்பலை விரட்டிட்டு படிக்கும் நேரத்தை முறைப்படுத்தினீங்கன்னா, உங்க மதிப்பெண்ணும் மதிப்பும் உயரும்க.கலை, படைப்புத் துறையினர் தேடிவரும் வாய்ப்புகளை உங்க வார்த்தைகளாலும் வீண் ஜம்பத்தாலும் நீங்களே திருப்பி அனுப்பிட வேண்டாம்க. கர்வத்தைத் தவிர்த்தா சர்வத்திலும் ஜெயிக்கலாம்க.வாகனத்துல சிறுபழுது இருந்தாலும் உடனே சீர் செய்யுங்க. இருட்டான இடங்கள்ல விஷப்பூச்சிகளால காயப்படவும், வளர்ப்புப் பிராணிகளால கடிபடவும் வாய்ப்பு உண்டு, கவனமா இருங்க.உடல்நலத்துல அலட்சியம் கூடவே கூடாத காலகட்டம்க. அலர்ஜி, தொற்றுக் காய்ச்சல், காது, மூக்கு, தொண்டை உபாதைகள் வரலாம்க. தினமும் சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்யப் பழகுவது நல்லதுங்க.இந்தக் காலகட்டத்துல ஒருமுறை காணிப்பாக்கம் சென்று கணபதியை மனதார வணங்குங்க. உங்க வாழ்க்கைல களிப்பு மிகும்..கும்பம் ராசிக்காரர்களே..!இதுவரைக்கும் உங்க ராசிக்கு மூன்றாமிடமான சகோதர ஸ்தானத்துல இருந்த ராகு, இப்போது இரண்டாமிடமான வாக்கு ஸ்தானத்துக்கு வர்றார்ங்க. அதே சமயத்துல இதுவரை ஒன்பதாமிடமான பித்ரு ஸ்தானத்துல இருந்த கேது, எட்டாமிடமான ஆயுள் ஸ்தானத்துக்கு வர்றார்ங்க.இந்த அமைப்பின்படி இது உங்களுக்கு சங்கடங்கள் குறைந்து சாதகங்கள் அதிகரிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்க. பணியிடத்துல மூடிக்கிடந்த உங்க திறமை உரியவர்களால் உணரப்படும்க. உடனிருப்போர் ஆதரவும், மேலதிகாரிகள் பாராட்டும் கிடைக்கும்க. இந்தச் சமயத்துல கர்வத்தை விட்டா, சர்வமும் ஜெயமாகும்க. புறம்பேசும் நபர்களோட நட்பை விலக்கறது ரொம்பவே அவசியம்க. இதுவரைக்கும் சரியான வேலையே அமையாத ஏக்கத்துல இருந்தவங்க மனம் மகிழும்படி புதிய பணி கிட்டும்க. ஏற்றம் வரும் சமயத்துல செயல்கள்ல முழுமையான ஈடுபாடு இருந்தா, ஈடு இல்லாத நன்மைகளைப் பெறலாம், உணர்ந்து நடந்துக்குங்க.இல்லத்துல சந்தோஷமும் ஒற்றுமையும் அதிகரிக்கும்க. வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் அதிகரிக்கும்க. குலதெய்வத்துக்கு உரிய வழிபாடுகளை தவறாமல் செய்தா, தடைபட்டிருந்த விசேஷங்கள் படிப்படியா வர ஆரம்பிக்கும்க. இளம் வயதினர் காதல் கைகூடி வரும்க. பழைய கடன்கள் சுலபமாக பைசல் ஆகும்க. வீடு, வாகனம் சேரும்க. பெண்களுக்கு நிதானம் ரொம்பவே முக்கியம்க. அக்கம்பக்கத்தினருடன் அநாவசிய வாக்குவாதம் வேண்டாம்க. வயதுல முதிர்ந்தவங்க உடல்நலத்துல கூடுதல் கவனம் செலுத்துங்க.செய்யும் தொழில்ல சேதாரம் குறைஞ்சு செழிப்பு ஏற்படத் தொடங்கும்க. ரியல் எஸ்டேட், வீடு, மனை சார்ந்த வர்த்தகத்துல வளர்ச்சி சீராகும்க. வர்த்தக வளர்ச்சிப் பணிகளை உண்மையான அக்கறை உள்ள உறவுகளை கலந்து ஆலோசித்த பிறகு செய்யறதுதான் புத்திசாலித்தனம்க.அரசியல் சார்ந்தவங்களுக்கு ஆதரவு நிலைக்கும்க. தேவையில்லாத வாக்குறுதிகளும் அநாவசியமான டாம்பீகமும் அஸ்திவாரத்தையே அசைச்சுடலாம்க. யாரோட கட்டாயத்துக்காகவும் இருக்கும் இடத்தைவிட்டு பறக்கும் இடத்தை பிடிக்க அடி எடுத்து வைக்க வேண்டாம்க. அரசுத் துறையினருக்கு அனுகூலமான காலகட்டம்க. மனம்போல பாராட்டு, பதவி உயர்வுகள் பெறும் வாய்ப்பு நிச்சயம் வரும்க. பெருமையும் புகழும் வரும்போது பொறுமையும் பணிவும் உடன் வர்ற மாதிரி பார்த்துக்கறது நல்லதுங்க.மாணவர்கள் தினமும் அதிகாலையில எழுந்து பாடங்களைப் படிக்கறது பெருமளவுக்கு நன்மை தரும்க. அயல்நாடு செல்வோர் அங்கே உள்ள சட்ட நடைமுறைகளை மீறாம இருக்கறது முக்கியம்க. கலை, படைப்புத் துறையினருக்கு வாசல்தேடி வாய்ப்புகள் வரும்க. அறிமுக வாய்ப்பாக இருந்தாலும் அக்கறையாகச் செய்தா, அரசுவழி பாராட்டுக்கும் வாய்ப்பு உண்டுங்க.வாகனத்துல வேகம் வேண்டவே வேண்டாம்க. வழிப்பாதை உணவை இயன்றவரை தவிர்க்கறது நல்லதுங்க.காது, மூக்கு, தொண்டை உபாதை, சளித்தொந்தரவு, அலர்ஜி, சைனஸ் உபாதைகளை உடனே கவனியுங்க. உணவுல நேரக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடியுங்க.இந்தக் காலகட்டத்துல ஒருமுறை திருப்பதி சென்று ஏழுமலையான மனதார வணங்கிட்டு வாங்க. உங்க வாழ்க்கை ஏற்றம் பெறும்..மீனம் ராசிக்காரர்களே..!இதுவரைக்கும் உங்க ராசிக்கு இரண்டாம் இடமான வாக்கு ஸ்தானத்துல இருந்த ராகு இப்போது உங்க ஜன்ம ராசிக்கு வர்றார்ங்க. இந்தச் சமயத்துல இதுவரை எட்டாமிடமான ஆயுள் ஸ்தானத்துல இருந்த கேது, ஏழாமிடமான களத்திர ஸ்தானத்துக்கு வர்றார்ங்க.இந்த அமைப்பின்படி இது, நீங்க நிதானமாகவும் நேர்மையாகவும் செயல்பட்டா நிம்மதி நிலைக்கும் காலகட்டமாக இருக்கும்க. அலுவலகத்துல பொறுப்புகள் உயரும்க. அதேசமயம் புலம்பாம செய்யறதுதான் புத்திசாலித்தனம்க. எதிர்பாராத மாற்றங்கள் வந்தா மறுக்காம ஏற்றுக்குங்க. சிலருக்கு வெளிநாட்டுப் பயண வாய்ப்பு வரலாம்க. அந்தச் சமயத்துல உரிய தஸ்தாவேஜுகளை பத்திரமா வைச்சுக்குங்க. பணி சார்ந்த ரகசியங்கள் எதையும் உங்க நிழல்கிட்டேகூட பகிர்ந்துக்க வேண்டாம்க. இப்போதைய நிதானச் செயல்பாடுகள்தான் எதிர்காலத்துல உங்க ஏற்றத்துக்கான ஏணியாக இருக்கும், மறந்துட வேண்டாம்க. புதிய பணிகளை ஒருமுறைக்கு இருமுறை யோசிச்சு செய்யுங்க. பணத்தைக் கையாளும் பொறுப்புல உள்ளவங்க கூடுதல் கவனமா இருங்க.குடும்பத்துல குதர்க்கப்பேச்சு தவிர்த்தா, குதூகலம் நிலைக்கும்க. குடும்பத்துல பிறர் தலையீட்டை அனுமதிக்கறதும் கூடாதுங்க. எதிர்பால் நட்புகளிடம் எச்சரிக்கையாகப் பழகுங்க. ஆடை, ஆபரணம் சேரும்க. விடுபட்ட நீத்தார் கடனை உடனடியா நிறைவேற்றுங்க. பூர்வீகச் சொத்துல விட்டுக் கொடுத்துப்போங்க. வழக்குகள்ல நேரடி கவனம் செலுத்துங்க. வாழ்க்கைத் துணை வார்த்தைகளுக்கு மதிப்பு குடுங்க. பெண்களுக்கு தடைப்பட்ட மகப்பேறு கிட்ட குலதெய்வ வழிபாடும், மருத்துவ சிகிச்சையும் பலன் தரும்க. சின்னச் சின்ன வார்த்தைத் தீ கூட சீரான வாழ்க்கையை சிதைச்சுடலாம்க. உணர்ந்து பேசுறதுதான் உத்தமம்க. வாரிசுகள் வாழ்க்கைல நல்லவை நடக்கும்க.செய்யும் தொழில்ல லாபத்தின் அளவு சீராக இருக்கும்க. பூமி சார்ந்த வர்த்தகத்துல புதிய ஒப்பந்தங்கள்ல கவனம் முக்கியம்க. வெளிநாட்டு வர்த்தகத்துல உரிய சட்ட நடைமுறைகளை முழுமையா கடைபிடியுங்க. வர்த்தகக் கடன் பெறுவதில் நேரடி வழிமுறைகளை மட்டுமே பின்பற்றுங்க. வேண்டாத முதலீடுகளைத் தவிருங்க.அரசியல் சார்ந்தவங்க செயல்கள்ல திட்டமிடலும் நிதானமும் இருந்தா ஏற்றமும் மாற்றமும் நிலைக்கும்க. மதிப்பு உயரும் சமயத்துல தற்பெருமை பேசறதும், தன்னிலை மறக்கறதும் தலைகுனிவுக்குதான் வழிவகுக்கும், உணர்ந்து நடக்கறது புத்திசாலித்தனம்க. அரசுத்துறையினர் கவனக்குறைவால கோப்புகளை இடம் மாற்றி வைச்சு இடைஞ்சல்பட நேரிடலாம்க. பொறுப்பு உணர்ந்து செயல்படுங்க. ஏற்றமும் மாற்றமும் தேடிவரும்.மாணவர்கள் எண்ணம்போலவே உயர்கல்வி வாய்ப்பும் வெளிநாட்டுக் கல்வி வாய்ப்பும் கிடைக்கும்க. எங்கே இருந்தாலும் மனதை ஒருநிலைப்படுத்தறதும், தீயசகவாசத்தை ஒதுக்கறதும் அவசியம்ககலை, படைப்புத் துறையினர்க்கு வாய்ப்புகள் வரத்தொடங்கும்க. எந்த வாய்ப்பும் கைக்கு எட்டும் முன்பாக பிறரிடம் அதைப் பற்றிப் பகிர்ந்துக்கறதைத் தவிருங்க. போதுமான ஓய்வு இல்லாம தொலைதூரம் வாகனத்தை தொடர்ந்து இயக்க வேண்டாம்க. உடன் வரும் யாரிடமும் உரக்கப் பேசுவதும், குடும்ப விஷயங்களை பொது இடங்கள்ல விவாதிக்கறதும் கூடவே கூடாதுங்க.உடல்நலத்துல அடிவயிறு, முதுகுத் தண்டுவடம், பாதம், கழிவு உறுப்பு உபாதைகள், தோல்நிறமாற்றப் பிரச்னைகள் வரலாம்க. உணவே நஞ்சாகும் அபாயம் உண்டுங்க.இந்தக் காலகட்டத்துல ஒருமுறை பூவரசன் குப்பம் சென்று லட்சுமி நரசிம்மரை மனதார வணங்குங்க. உங்க வாழ்க்கை பூவாக மலரும்.