புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாக இருந்த போதிலும், புரட்டாசி பௌர்ணமி நாளானது சிவனுக்கு உகந்த நாளாகும். இந்த நாளில் சிவனுக்கு விரதம் இருந்து அவரை வழிபட நம்மை துன்பங்கள் நெருங்காது மற்றும் நாம் வேண்டியது கிடைக்கும். இந்த புரட்டாசி பௌர்ணமி விரதத்தை பாகுளி விரதம் என்று அழைப்பர்.பாங்கொளி என்பதுதான் பாகுளி என்று மருவி வழக்குச் சொல்லாக மாறிவிட்டது. பாங்கு என்பது நிறைவு. ஒளி என்பது நிலவின் ஒளி. நிறைவான ஒளியைத் தரும் முழு நிலவு தான் பாகுளி என்பதாகும். இந்த பாகுளி விரதம் பிரசித்தி பெற ஒரு புராணக் கதை ஒன்று உண்டு..பிள்ளையார் பக்தரான கிருச்சமத முனிவரின் மகன் பலி. அவனும் பிள்ளையாரை வழிபட்டு பல வரங்களைப் பெற்றான். அதில் முக்கியமானது, தனக்கு சிவனால் மட்டுமே அழிவு வரவேண்டும் என்பது ஆகும். இந்த வரத்தினைப் பெற்றுக்கொண்டு பலி, பல தேவர்களை கொடுமைப்படுத்தத் தொடங்கினான். அவனது கொடுமை தாங்காமல் தேவர்கள் சிவபெருமானிடம் தஞ்சம் அடைந்தனர். சிவபெருமான் பலியுடன் போரிடச் சென்றார். இருவருக்கும் இடையில் பயங்கர போர் நடந்தது. ஈசன் பலியின் அனைத்து படைகளையும் அழித்துவிட்டார். இறுதியில் பலியுடன் நேருக்கு நேர் சண்டையிட்டார். சண்டையின் முடிவில் தனது கையிலிருந்த கணையை செலுத்தி பலியை வதம் செய்தார். பலி உயிர் மட்டும் அழியவில்லை, அவனது ஆணவமும் அழிந்தது. ஆணவம் அழிந்ததால் முக்தி நிச்சயம். ஈசனால் கொல்லப்பட்ட பலியின் ஆன்மா ஈசன் அடி சேர்ந்து முக்தி அடைந்தது. பலி முக்தி அடைந்த நாள் புரட்டாசி பௌர்ணமி ஆகும். அதாவது பாகுளி நாளன்று வீடுபேறு அடைந்தார்..ஆகவே இந்த நாளில் சிவனுக்கு விரதம் இருந்தால் முற்பிறவி பாவங்கள் அகலும். இந்தப் பிறவியிலும் நம் பாவங்கள் அழிந்து பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து தப்பித்து நாம் ஈசன் அடி சேரமுடியும். ஆண்டுதோறும் இந்தத் திருநாளில், சிவபிரானுக்குத் திருவிழா செய்வதாலும், அவரவர்களுடைய ஆற்றலுக்கேற்றவாறு வழிபாடு முதலியவற்றைச் செய்வதாலும், நெய் தீபம் ஏற்றி வழிபடுவதாலும் அப்படிச் செய்பவர்களை எப்பொழுதும் துன்பம் என்பதே நெருங்காது..நாம் சிவனை வழிபடும் போது அவரது பஞ்சாக்கர மந்திரமான ஓம் நமசிவாய என்பதை உச்சரித்தாலே போதும் நம் முற்பிறவி, இப்பிறவி என அனைத்து பாவங்களும் கரைந்து போகும். அவனடி சேர வழியும் பிறக்கும்."பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தைநண்ணி நின்று அறுப்பது நமசிவாயவே"என்பார் திருநாவுக்கரசு அடிகள். பல பிறவிகளில் நாம் செய்த பாவங்களை எல்லாம் நம் அருகில் வந்து அறுத்து வழி செய்வது நமசிவாய எனும் திருமந்திரமே என்கிறார் அப்பர் அடிகள். வரும் 29.9.2023, பௌர்ணமி தினத்தன்று பாகுளி விரதம் இருந்து நமசிவாய மந்திரத்தை ஓயாமல் ஜெபித்துக் கொண்டு ஈசன் அருள் பெறுவோமாக. திருச்சிற்றம்பலம்.