- ரா. ஜெனகராஜ் மலைமீது மாலவன் கோயில் கொண்ட தலங்கள் மகிமைமிக்கதாகவும், மங்கலங்களை வாரிவழங்குவதாகவும் விளங்குகின்றன. அந்த வகையில் சிறப்புமிக்க ஒரு ஆலயம்தான், வத்தலகுண்டு அருகே கோட்டைப்பட்டியில் அமைந்துள்ள சென்றாயப்பெருமாள் கோயில்..சுமார் நானூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்தது சென்றாயப்பெருமாள் திருக்கோயில். கடல் மட்டத்திலிருந்து சுமார் 371 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இவ்வாலயத்தில் ராஜகம்பளத்தார் வழியில் வந்த ஆதி சென்னம நாயக்கரில் ஆரம்பித்து, தற்போது வரை அவரது வம்சாவளியினர் பூஜை செய்து வருகின்றனர்.இவ்வாலயம் குறித்து ஒரு வரலாற்றுக்கதை உண்டு.முற்காலத்தில், இந்தப் பகுதி அடர்ந்த வனமாகத் திகழ்ந்துள்ளது. சென்னம நாயக்கர் என்னும் பெருமாள் பக்தர் ஒருவர், தினமும் இங்கு ஆடு, மாடுகள் மேய்க்க வருவது வழக்கம். ஒரு நாள், அவரது பசுக்களில் ஒன்று காணாமல் போனது. காடு முழுவதும் தேடியலைந்த சென்னம நாயக்கர், இறுதியாக அருகில் இருந்த மலையில் ஏறி அதன் உச்சியை அடைந்தார்..அங்கே ஓரிடத்தில், இதுவரை கன்று ஈனாத பசு ஒன்று பால் சொரிய, சிறுவன் வடிவில் பெருமாளே அந்தப் பாலை அருந்திக்கொண்டிருந்ததைக் கண்டு அதிசயித்த சென்னம நாயக்கர் அவரை வணங்கி நின்றார். அப்போது தமது சுயரூபத்தைக் காட்டிய பெருமாள், ''இனி, இந்த மலையில்தான் நான் வாசம் செய்யப்போகிறேன். என்னை பரிபாலிக்கும் உன்னை மட்டுமின்றி, உன் சந்ததியினரையும்; என்னை நாடி வரும் மக்களையும் நான் வாழவைப்பேன்!'' என்று கூறி அருள்புரிந்தார்.இதைக் கேட்ட சென்னம நாயக்கர், ''எனக்கு வாரிசு எவரும் இல்லையே, என்ன செய்வது?'' என்று பகவானிடம் முறையிட்டு அழுதார்.''வருந்தாதே! உனக்கு வாரிசு உண்டாகும்; இனி, உனது வாக்குகள் யாவும் பலிக்கும்!'' என்றார் பெருமாள்..நாட்கள் நகர்ந்தன. பெருமாள் அருளியபடியே சென்னம நாயக்கர் தம்பதிக்குக் குழந்தை பிறந்தது.பிற்காலத்தில் சென்னம நாயக்கரின் விருப்பப்படி அவரது மூத்த மகன் கோவிந்தப்ப நாயக்கரே இந்த இடத்தில் பெருமாள் விக்ரகத்தை பிரதிஷ்டை செய்து, திருக்கோயிலும் எழுப்பினாராம். சென்னம நாயக்கருக்குக் காட்சி தந்தவர் என்பதால், இங்குள்ள பெருமாளுக்கு 'சென்றாயப் பெருமாள்' என்ற திருநாமம் அமைந்ததாம். இங்கு பெருமாள் பாலகன் என்பதால் இறைவனுடன் 'தாயார்’வீற்றிருக்கவில்லை. இருந்தபோதிலும், மக்களாக விருப்பப்பட்டு திருவுருவக் கவசத்தின் மார்புப் பகுதியில் லட்சுமி முகம் பதித்து வணங்குகின்றனர். இங்கு பெருமாள் சிறுவனானாலும் முறுக்கு மீசை, தாடியுடன் காட்சியளிப்பதும், இரு கைகளைக் கூப்பி நிற்பதும் வித்தியாசமான காட்சி. தலவிருட்சமாக உசிலை மரம் விளங்குகிறது..பசுவின் மடியில் பெருமாள் பால் அருந்திய இடம் இப்போது கோயிலின் மண்டபமாகக் கட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் பக்தர்கள் அமர்ந்து தங்கள் மனதில் உள்ள கோரிக்கையை பெருமாளுக்கு பக்தியுடன் தெரிவித்து வேண்டிக்கொள்கிறார்கள் . தடை நீங்கி திருமணம் நடைபெற, குழந்தை பாக்கியம் கிடைக்க, விவசாயம் சிறக்க, செழிப்பான வாழ்வமைய பெருமாளிடம் பக்தர்கள் வேண்டிக்கொண்டு பலன்பெறுகின்றனர். சென்றாயப் பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமைகளில் பஜனைப் பாடல்கள் பாடப்படுகிறது. சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் நடைபெறுகிறது. புரட்டாசி சனிக்கிழமைகள் மிகவும் விசேஷம். கிட்டத்தட்ட ஐந்நூறு படிகள் கொண்ட மலை உச்சியில் வீற்றிருக்கும் சென்றாயப் பெருமாளுக்கு ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் படிபூஜை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி நாட்களில் பக்தர்கள் கூட்டம் கோயிலில் அலைமோதும்..ஓணம் பண்டிகையன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் அணிந்த மாலை சென்றாயப்பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது. இவர் குழந்தையாக இங்கு காட்சி தந்ததால் கிருஷ்ண ஜெயந்தி வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.சென்னம நாயக்கருக்கு ஒரு பங்குனி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையன்றுதான் பெருமாள் திருக்காட்சி தந்தருளினாராம். இதையொட்டி, இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இங்கு நடைபெறும் விழா பிரசித்திப் பெற்றது. பங்குனி மாதம் முதல் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கும் விழா மூன்று நாள் வரை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது, மூலவரே உற்சவராக வீதி உலா வருகிறார்..மலையிலிருந்து இறங்கிவரும் சென்றாயப் பெருமாள் மேளதாளங்கள், கொட்டுகள் முழங்க, வாணவெடிகள் போடப்பட்டு ஆட்டம் பாட்டத்துடன் ஊரில் உள்ள அலங்கார மண்டபத்திற்கு அழைத்து வரப்படுகிறார். அங்கு பூச்சப்பரத்தில் வைத்து பெருமாளுக்கு அலங்காரம் செய்யப்படுகிறது. பின்னர் பெருமாளுக்கான மரியாதை வழங்கப்படும் மூன்று வீடுகளுக்குச் செல்கிறார். அங்கு அவருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டு மரியாதை செய்யப்படுகிறது. இதை முடித்துவிட்டு ஊரில் உள்ள அனைத்து வீதிகளுக்கும் சென்று திரும்புகிறார். அப்போது உருமிமேளத்துடன் தேவராட்டம் வெகுசிறப்பாக நடத்தப்படும்.அன்றிரவு பூச்சப்பரத்தில் மக்களை சந்தித்து ஆசி வழங்கி ஆட்டம் பாட்டத்துடன் வீதி உலா வருகிறார். ஆடல் பாடல், நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெறும் இடங்களுக்கு பெருமாள் அழைத்துச்செல்லப்படுகிறார். இதையடுத்து பெருமாள் விடைபெறும் நிகழ்ச்சி தொடங்கும். அதில் வெள்ளைச்சேலை அணிந்த 15 பெண்கள் பெருமாளுக்கு மஞ்சள் நீராட்டுகிறார்கள்..அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பெருமாள் ஊரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று விடைபெற்றுக்கொள்கிறார். பின்னர் அவர் மலையேறும் தருணம் வருகிறது. ஆனால் சென்றாயப் பெருமாள் மக்களோடு மக்களாக திருவிழாவில் ஆட்டம் பாட்டத்தில் கலந்துகொண்டு மகிழ்ந்ததால் மலையேறத் தயக்கம் காட்டுவதாகவும்; அதனால் சில வசைச்சொற்களைக் கூறி அவரை வலுக்கட்டாயமாக மலையேற்றுகிறார்கள்.அதற்கு முன்னதாக பெருமாளுக்கு அணிவிக்கப்பட்ட அலங்கார நகைகள், உடைகள், பூமாலைகளை எடுத்து பெட்டியில் வைத்து ஊரில் உள்ள பெருமாள் கோயிலுக்குக் கொண்டுவரப்படுகிறது. வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்படும் சென்றாயப்பெருமாள் மலையில் உள்ள கோயிலில் இறக்கிவிடப்படுகிறார். இத்துடன் திருவிழா நிறைவடைகிறது.திண்டுக்கல், நிலக்கோட்டை, போடி, பெரியகுளம், தேனி, வருசநாடு, ஆண்டிபட்டி, மதுரை, கரூர், ராசதானிக்கோட்டை, திருநெல்வேலி, பாஞ்சாலங்குறிச்சி, எட்டையபுரம், தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், சிவகங்கை பகுதியில் இருந்து ஜமீன் வாரிசுகள் மற்றும் ராஜகம்பளத்து நாயக்கர்கள், அரச குடும்பத்தினர் மற்றும் உள்ளூரில் இருந்து வெளியூருக்கு இடம்பெயர்ந்தவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் இத்திருவிழாவில் பங்கேற்று மகிழ்கின்றனர்.எங்கே இருக்கு?திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பேருந்து நிலையத்தில் இருந்து தேனி செல்லும் வழியில் சுமார் 4 கி.மீ. தொலைவில் கோட்டைப்பட்டியில் சென்றாயப்பெருமாள் கோயில் உள்ளது. நகரப்பேருந்துகள் உள்ளன. மலையின் அடிவாரத்தில் இருந்து உச்சி வரை இருசக்கர வாகனத்திலும் செல்லலாம். தரிசன நேரம்காலை 8 – இரவு 7. சனிக்கிழமைகளில் காலை 5 – இரவு 9.