- முனைவர் இரா. இராஜேஸ்வரன் ‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என ஔவையார் சொன்னதுபோல அரிதாகக் கிடைத்த இந்த மானிடப்பிறவியானது இயற்கையின் விதிப்படி இறப்பது நிச்சயம். நம்மிடையே வாழ்ந்து இறந்தவர்களை பித்ருக்கள் என அழைக்கிறோம்.. பித்ருலோகத்தில் வசிக்கும் இவர்களைத் திருப்திப்படுத்தவும், நம்முடைய வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளவும் சிரார்த்தம் செய்வது நமது கடமை. நாம் இந்தக் கடமையைச் செய்யத் தவறினால் நம் பித்ருக்கள் இதனால் மனம் வருந்துவார்கள். இதைத்தான் பித்ரு சாபம் என்று சொல்லுவார்கள். பொதுவாக பிரதி மாதம் அமாவாசையில் மட்டும் தர்ப்பணம் (நீர்க்கடன்) செய்வது வழக்கம். தர்ம சாஸ்திரப்படி ஒரு வருடத்திற்கு 96 நாட்கள் தர்ப்பணம் கொடுப்பதற்கு ‘ஷண்ணவதி தர்ப்பணம்’ எனப் பெயர். இதில் புரட்டாசி மாதம் வரும் மஹாளயபட்ச தினங்களான 16 நாட்களும் அடங்கும். ஜாதக ரீதியில், சில கோயில்களுக்குச் செல்வது மூலமும், தீர்த்த யாத்திரை செய்வது மூலம் அல்லது அதற்கான பரிகாரங்களைச் செய்வது மூலமும் பித்ரு தோஷத்திலிருந்து விடுபட முடியும் என்பது நமது நம்பிக்கை. இதற்கான பரிகார ஸ்தலங்களில் ஒன்றுதான் கும்பகோணம் அருகே இருக்கும் திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மூவரது தேவாரப் பாடல் பெற்ற இந்தத் தலத்தை மத்தியார்ஜுனம் என்றும் அழைப்பார்கள்.இறந்தவர்களுக்கு முதல் வருடத்தில் ஒவ்வொரு மாதத்தில் இறந்த திதியன்று சிரார்த்தம் செய்யவேண்டும். அதற்கு ‘மாசியம்’ எனப் பெயர். இவ்வாறு பன்னிரண்டு மாசியங்கள் செய்த பின்னர் வருடதிதி அன்று செய்யப்படும் சிரார்த்தத்திற்கு ‘வருஷாத்தியம்’ எனப்பெயர். அதன்பிறகு அமாவாசை 12, மாத ஸங்கிரமணம் (சங்கிராந்தி) 12, அஷ்டகா (அட்டகை) 12, வைத்ருதி (வைதிருதி) 13, வியதீபாதம் 13, மன்வாதி தினம் 14, யுகாதி தினம் 4, மஹாளயம் 16 என 96 தினங்களும் பித்ருக்களுக்கு சிரார்த்த தர்ப்பணத்தை முழு அர்ப்பணிப்பு மனதுடன் செய்தால் நல்ல பலனைக் கொடுக்கும் என நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். . யமதர்மராஜாவின் அனுமதியுடன் பித்ரு லோகத்தில் வசிக்கும் நம்முடைய பித்ருக்கள் அஷாடமாதம் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) பிரதமை அன்று அங்கிருந்து கிளம்பி தங்களின் சந்ததியினரைக் காணவும், அவர்கள் செய்யும் பித்ரு சிரார்த்தத்தை ஏற்றுக்கொள்ளவும் ஆவலுடன் பூலோகத்திற்கு வருவார்கள். மஹாளய பட்ச தினங்களான 16 நாட்களும் பூலோகத்தில் தான் தங்கி இருப்பதால், அந்த 16 தினங்களும் தினமும் தர்ப்பணம் செய்வது நல்லது. மஹாளயத்தின்போது பிராமணர்களை (குறைந்தது ஆறு பேர்), வீட்டிற்கு வரவழைத்து பிராமண போஜனம் அளித்து, ஹோமம், பிண்டதானம் முதலியவை செய்வதற்கு ‘பார்வணம்’ எனப் பெயர். பிராமண போஜனம் என்கிற சாப்பாட்டைப் போட முடியாதவர்கள் அரிசி, பருப்பு, காய் போன்றவற்றைத் தருவதற்கு ‘ஹிரண்யம்’ எனப் பெயர். இதுவும் முடியாதவர்களுக்கு எள்ளும், தண்ணீரும் தருவதற்கு ‘தர்ப்பணம்’ எனப் பெயர். இப்படி ஏதாவது வகையில் பித்ருக்களை திருப்திப்படுத்த வேண்டும். இறந்தவர்களுக்குச் செய்ய வேண்டிய சடங்குகளை முழு மனதுடன் கட்டாயம் செய்ய வேண்டும் என்பதற்காக இராமாயணத்தில் தசரதன் இறந்தவுடன் அவரது மகன் பரதன் சடங்குகளைச் செய்தார் என்பதையும், சடாயு இறந்த பின்பு ஸ்ரீராமர் சடங்குகளைச் செய்தார் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இறைவனே சரிவர சடங்குகளைச் செய்தார் என்பதால் மானிடராகிய நாமும் அதே போன்று பித்ருக்களுக்கு உண்டான சடங்குகளைச் செவ்வனே செய்தல் அவசியம்..நான்காம் திருமுறையில் திருநாவுக்கரசர் திருவிடைமருதூர் கோயிலைப் பற்றிப் பாடும்போது, காடுடைச் சுடலை நீற்றர் கையில் வெண்டலையர் தையல் பாடுடைப் பூதஞ்சூழப் பரமனார் மருத வைப்பில் தோடுடைக் கைதை யோடு சூழ்கிடங் கதனைச் சூழ்ந்த ஏடுடைக் கமல வேலி இடைமரு திடங்கொண் டாரேஎனப் பாடுகிறார். இப்பேர்ப்பட்ட சிறப்புடைய திருவிடைமருதூர் ஸ்ரீபெருநலமாமுலையம்மை உடனுறை ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோயில் பித்ரு சாபம் நீக்கி, புத்திர பாக்கியத்தை சோழ குலத்தின் சிற்றரசன் சுகீர்த்தி என்பவருக்கு அருளியதாக மருதவனப் புராணம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. . சிற்றரசனான சுகீர்த்திக்கு தனக்குப் பின்பு நாடாள குழந்தைகள் இல்லையே என்கிற கவலை இருந்தது. அகத்திய முனிவரை வணங்கி இதற்கு ஒரு வழியைச் சொல்லுமாறு வேண்டினார். முக்காலத்தையும் உணர்ந்த அகத்தியர் அரசனுக்கு பித்ருசாபம் இருப்பதை உணர்ந்தார். பசி, தாகத்தால் அவதிப்படும் பித்ருக்களின் மனவருத்தத்தைக் களைய திருவிடைமருதூர் திருத்தலத்திற்குச் சென்று பித்ருக்களுக்கான சடங்குகளைச் செய்து, மகாலிங்க சுவாமியை வழிபட்டால், தோஷம் நீங்கி, மக்கட்பேறு கிடைக்கும் என்கிற யோசனை கூறினார். அதன்படி அரசன் பித்ருக்களுக்கான சடங்குகளைச் செவ்வனே செய்து சந்ததியைப் பெற்றான் என்பதை, பகரொரு காரணத்தால் துன் மரணமெய்திப் பசா பதத்திருந்திடுவோர் நரகினுற்றோர் இகலுறுவெம் பசியதனில் உணவிலாமல் இடருறுங்கால் புவியிடைத் தம் வருக்கத்தோர்க்கு மகவிலையாகுக என்னச் சபித்தல் செய்வார் மற்றவர் தங்களுக்கு இறைவர் பிதிர்க்களாகும் புகழவரைப் பூசித்தால் அன்னோர் தம்மைப் பொருபசி தீர்த்து இவர்களுக்கும் புதல்வரீவர் (20) மருதவனப் புராணத்தின் சுகீர்த்திமன் சுருக்கப் படலத்தில் கூறப்பட்டுள்ளது. பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்பவர்கள் தீர்க்காயுளையும், சுகத்தையும், நற்சந்ததியையும், சிவபெருமானுடைய கிருபையையும் அடைவார்கள். அவர்களுக்குத் தீவினையும், வறுமையும் இடரும் நீங்கும் என சோமசம்யுபத்ததி என்கிற நூலில் கூறப்பட்டுள்ளதால் இறந்தவர்களுக்கு பித்ரு சடங்குகளைச் செய்வது நம் கடமை. அதிலும் இந்த மஹாளயபட்ச தினத்தில் (இவ்வருடம் 30.9.23 தொடக்கம்) செய்வது மிகவும் நல்லது.