Bakthi Magazine
பிள்ளையார் தொட்டியாங்குளம்: வேண்டுதல் நிறைவேறினால் வள்ளித் திருமண நாடகம்!
ஒரு கட்டத்தில் ஊர் மக்கள் இந்த விநாயகருக்கு எழிலான கோயில் ஒன்றைக் கட்ட விரும்பி திருவுளம் கேட்டனர். ஆனால், அதற்கு ஆனைமுகன் அனுமதி தரவில்லை. ஆகவே, கோயில் இல்லா குறையைப் போக்கும் வகையில் கலைநயமிக்க திருமதிலை நான்குபுறமும் வாசல்களோடு அமைத்து, மேல்கூரையை மட்டும் திறந்தவெளியாய் விட்டுவிட்டனர்.