Bakthi Magazine
பக்தை தந்த தீர்த்தத்தை ஏற்ற பரமாசார்யார்!
மறக்காம தீர்த்தச் செம்பை எடுத்துண்டா, அந்தப் பெண்மணி. ஸ்ரீமடத்துக்குப் போய் வரிசைல நிற்கறச்சே, பையில இருந்த செம்பை எடுத்துக் கையில வைச்சுண்டா. அதைப் பார்த்ததும் அவ ஆத்துக்காரர், கொஞ்சம் பதறிட்டார். ”தீர்த்தம் கெட்டிருக்கப்போறது… இதைப் பெரியவாகிட்டே தந்துதான் ஆகணுமா?”ன்னு கேட்டார்.