’விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை’ என்பார்கள். இந்த முதுமொழி உறவுகள் மேம்பட வழிவகை செய்கிறது என்பதே உண்மை.‘’யாரிடம், எதற்காக விட்டுக்கொடுக்க வேண்டும்?’’ என்று சிலர் கேள்வி எழுப்புவார்கள். முதலில் உறவுகளிடம் நாம் விட்டுக் கொடுக்கவேண்டும்.’’அவர்களிடம் நான் எப்போதும் விட்டுக்கொடுத்துத்தான் வாழ்கிறேன். ஆனால், அவர்கள் ஒருபொழுதும் எனக்கு விட்டுக்கொடுத்ததில்லை. இனி நான் யாருக்கும் விட்டுக் கொடுத்து ஏமாளியாக இருக்கப்போவதில்லை?’’ என்பார்கள்.இதில் யார் ஏமாளி அல்லது புத்திசாலி என்ற பேச்சுக்கே இடமில்லை. நம் குழந்தைகளிடம் நம் திறமையைக் காண்பிப்பது இல்லை. அவர்கள் நம்மை தாண்டிச் செல்லவே விரும்புவோம்.அதேபோலத்தான் நாம் யாரிடமும் ஏமாறவில்லை என்பதை உணரவேண்டும். விரும்பியும், தெரிந்தும், உறவைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்றுதான் விட்டுக்கொடுக்கிறோம். வீட்டுக்கு வீடு வாசப்படி என்றுதான் சொல்லவேண்டும். எல்லாக் குடும்பங்களிலும் பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும்.உடன் பிறந்தவர்கள், நெருங்கிய உறவினர்கள் எல்லாம் இப்படி பிரச்னை செய்யும்போது என்ன செய்வது? விட்டுக்கொடுத்துத்தான் போக வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் அந்த உறவும் நட்பும் நிலைக்காது. ஒவ்வொரு உறவையும் நட்பையும் பகைத்துக்கொண்டிருந்தால் கடைசியில் யாருமே மிஞ்ச மாட்டார்கள். விட்டுக்கொடுப்பது என்பது ஒரு நல்ல பண்பு. அதில் பாதகங்களைவிட சாதகங்களே அதிகம்.குழந்தைகள் வளர்ந்துவிட்ட நிலையிலும்கூட இன்றும் சில குடும்பங்களில் கணவன், மனைவி இருவரில் ஒருவர் விட்டுக்கொடுத்துப்போக மறுக்கின்றனர். அதனால் குடும்ப உறவில் விரிசல் ஏற்பட்டுவிடுகிறது. குழந்தைகளின் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது. அதைத் தவிர்ப்பது நல்லது.நீங்கள் சாலையில் செல்லும் போது இந்த அனுபவத்தைப் பெறலாம். சிலர், மற்றவர்களுக்கு வழிவிடாமல் அவர்கள் மட்டுமே அவசரமாகச் செல்வது போலவும்; மற்றவர்கள் எல்லாம் ஒரு வேலையும் இல்லாமல் செல்வது போலவும் நடந்துகொள்வார்கள். அது சரியல்ல!.தன்னுடைய திறமையாலோ பேச்சாலோ மற்றவர்களை வென்றுவிட்டோம் என்று அகந்தைக் கொள்பவர்களை உடனே மாற்ற முடியாது. ஆனால் காலம் அவர்களை நிச்சயம் ஒருநாள் மாற்றும். எப்பொழுதும் உலகம் திறமைசாலியைவிட நல்லவர்களையே விரும்புகிறது. அந்த நல்ல பெயர் மட்டும் எடுத்து விட்டால் போதும்…. அது எல்லாக் காலத்திற்கும் நமக்கு துணை நிற்கும். தங்கத்தைப் புடம் போட்டால்தான் மதிப்பு கூடும். அது போன்றே நம்மிடம் உள்ள மாசுகளை நீக்க இவர்கள் உதவுகிறார்கள் என்று எண்ண வேண்டும். விட்டுக்கொடுப்பதை வலி என எண்ணாதீர்கள். அது வலிமை என உணருங்கள்! பக்தியுடன் ஆசிரியர்