-எஸ். ஸ்ரீதுரைகாசியப முனிவருக்கு திதி, அதிதி என்று மனைவியர் இருவர் இருந்தனர். இவர்களுள் திதியின் வயிற்றில் பிறந்தவர்களே அசுரர்கள் என்று அழைக்கப்பட்டனர். அதிதியின் வயிற்றில் பிறந்தவர்களே தேவர்கள் ஆவர்.ஸ்ரீவராஹாவதார மூர்த்தியால் கொல்லப்பட்ட ஹிரண்யாக்ஷனும், ஸ்ரீநரசிம்மாவதார மூர்த்தியால் சம்ஹாரம் செய்யப்பட்ட ஹிரண்யகசிபுவும் அசுரர்களே. அவ்விருவருள் ஹிரண்யகசிபுவின் திருமகனாகிய பக்தப்பிரகலாதனின் பேரனே மகாபலிச் சக்கரவர்த்தி ஆவார்..தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் தீராத பகை இருந்ததையும், அவ்விருவர்களிடையே அடிக்கடி யுத்தம் நடைபெற்று ஒருவர் மாறி ஒருவர் வெற்றி பெற்றதும் தொடர்கதையாகவே இருந்து வந்தது.இந்நிலையில், ஒரு சமயம் தேவேந்திரனால் கொல்லப்பட்ட மகாபலிக்கு சஞ்சீவினி மந்திரத்தின் மூலம் அசுரகுருவாகிய சுக்கிராச்சாரியார் உயிர் கொடுத்தார். அதன் பின்னர் “விஸ்வஜித்” என்னும் யாகத்தை சுக்கிராச்சாரியார் நடத்திக் கொடுத்ததால் பெரும்பலம் பெற்ற மகாபலிச் சக்கரவர்த்தி தேவலோகத்தை நோக்கிப் படையெடுத்தார்..இதையடுத்து, தமது ஞானதிருஷ்டியால் நடக்கவிருப்பதை அறிந்துகொண்ட தேவகுருவாகிய பிருஹஸ்பதியும், “தேவேந்திரா! தற்சமயம் அசுரர்களுக்கு அனுகூலமான காலமாக இருக்கிறது. எனவே நீயும் ஏனைய தேவர்களும் சிறிது காலத்திற்கு இந்த தேவலோகத்தை விட்டு வேறிடத்திற்குச் சென்று தலைமறைவாக வாழவேண்டும்” என்று கூறிவிட்டார். தேவர்களும் அவ்வாறே தலைமறைவாகிவிட, மகாபலிச்சக்கரவர்த்தி எதிர்ப்பு ஏதுமின்றி தேவலோகத்தை ஆட்சி செய்யத் தொடங்கினார்.தன்னுடைய புத்திரர்களாகிய தேவர்களின் கதியை எண்ணிக் கலங்கிய அதிதி தன் கணவர் காசியபரிடம் முறையிட்டாள். காசியபரோ, ஸ்ரீமந்நாராயணனை வேண்டி விரதம் இருக்கும்படி அதிதிக்கு அறிவுரை கூறினார்.பங்குனி மாதம் வளர்பிறையின் முதல் பன்னிரண்டு நாளில் பால் மட்டும் அருந்தி உபவாசம் இருந்து அதிதி ஸ்ரீமந்நாராயணனை வேண்டிக்கொள்ள, பகவானும் அவள் வயிற்றில் மகனாக அவதரித்து தேவர்களின் துன்பத்தைப் போக்குவதாக வரம் அளித்தார்..அதேபோன்று “விஜய துவாதசி” என்று அழைக்கப்படும் திருவோண நட்சத்திரம் கூடிய புண்ணியமான துவாதசி திதியில் அபிஜித் முகூர்த்தத்தில் அதிதியின் திருவயிற்றில் தேவேந்திரனின் தம்பியாக “உபேந்திரன்” என்ற திருநாமத்துடன் எம்பெருமான் அவதரித்தார். வர்ணிக்க முடியாத அழகுடன் அவதரித்த அந்தத் திருக்குழந்தை பிறந்த சற்று நேரத்திலேயே வளரத் தொடங்கியது. உடனடியாகத் தம்முடைய திருமகனுக்குப் பூணூல் அணிவித்து பிரம்மோபதேசம் என்னும் காயத்திரி மந்திர உபதேசத்தைச் செய்தருளினார் காசியப முனிவர். “பவதி பிக்ஷாம் தேஹி” என்று கூறிய அந்த பிரம்மச்சாரிக்கு சாக்ஷாத் ஸ்ரீஅன்னபூரணியே பிக்ஷையிட்டு மகிழ்ந்தாள்..தந்தை காசியபர் காட்டிய வழியில் தனது நித்திய கர்மாக்களைச் செய்து வந்த உபேந்திரன், நர்மதை நதிக்கரையில் மகாபலிச்சக்கரவர்த்தி அஸ்வமேதயாகம் செய்து வருவதாகக் கேள்விப்பட்டு அவரிடம் யாசகம் பெற்று வருகிறேன் என்று கூறிக் கிளம்பினார்.சிறிய உருவத்துடன் வந்திருக்கும் இந்த பிரம்மச்சாரி ஸ்ரீமஹாவிஷ்ணுவே என்பதை உணர்ந்த சுக்கிராச்சாரியார் இவருக்கு தானம் தரவேண்டாம் என்று தடுத்தார். ஆனால், அஸ்வமேத யாகத்தின் பலன் கிடைப்பதற்காகவும், தனது குலப்பெருமையைக் காப்பதற்காகவும் பகவான் கேட்ட மூன்றடி மண்ணைத் தருவதாக மகாபலிச்சக்கரவர்த்தி வாக்களித்தார்..நாம் அனைவரும் அறிந்தபடி, தானத்தைப் பெற்றுக்கொண்ட எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் தம்முடைய உருவத்தை மேன்மேலும் வளரச்செய்து தம்முடைய ஓர் அடியால் இந்த மண்ணுலகையும், இன்னோர் அடியால் பிரம்மலோகம் வரையிலுள்ள வானுலகங்களையும் அளந்தார். அவ்வாறு பிரம்மலோகம் வரையில் நீண்ட அவருடைய திருவடியை அங்கிருந்த பிரம்மதேவர் கங்கையின் நீரால் புனித நீராட்டிப் பூசித்தார். அந்தத் திருவடியிலிருந்து வழிந்த கங்காஜலத்தை சிவபெருமான் தம்முடைய ஜடாமுடியில் தாங்கினார். (பின்னர், பகீரதனின் தவத்திற்கிணங்கே அந்நதியை பாரத தேசத்தில் பெருகியோடச் செய்தார் சிவபெருமான்).இவ்வாறு அளந்த பின்பு, தாம் கேட்டபடி தமது திருவடியால் அளந்து எடுத்துக் கொள்ளக்கூடிய மூன்றாவது அடி நிலம் எங்கே என்று எம்பெருமான் கேட்டபொழுது மகாபலி பதில் சொல்ல இயலாமல் வெட்கித் தலைகுனிந்தார்..அதையடுத்து எம்பெருமான் மகாபலியைக் கட்டி வைத்தார். அதை அறிந்த மகாபலியின் பாட்டனார் பக்த பிரகலாதரும் அவ்விடத்திற்கு வந்து பெருமாளை வேண்டிக் கொண்டார்.மனம் இரங்கிய திருவிக்கிரமப் பெருமாள், மூன்றாவது அடியாகத் தமது திருவடியை மகாபலிச்சக்கரவர்த்தியின் தலை மீது வைத்து அவரைக் கீழுலகங்களில் ஒன்றான ஸுதலம் என்ற உலகிற்கு அனுப்பி வைத்தார். உடன் பக்தப் பிரகலாதரையும் அவ்வுலகிற்கு அனுப்பி வைத்தார். மேலும் மகாபலிச்சக்கரவர்த்தி அப்பாதாள உலகத்தில் பயமின்றி சுதந்திரமாக இருக்கலாம் என்றும், தாமே அவ்வசுர மன்னனுக்குக் காவலாளியாய் கதாயுதம் ஏந்திக் காவல் காப்பதாகவும் வரம் அளித்தார்.அதன் பின்னர் அசுரர்களின் ஆளுகையில் இருந்த தேவலோகத்தை மீண்டும் இந்திரனுக்கே வழங்கினார். தேவர்கள் தங்களது சுகவாழ்வினை மீண்டும் அடைந்ததை எண்ணி, அவர்களின் தாயான அதிதியும் மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைந்தாள்..சகல உலகங்களையும் படைத்துக் காத்து வருகின்ற பரம்பொருளாகிய ஸ்ரீமந்நாராயணன் தன்னை நாடிய தேவர்களுக்காகவும், அவர்களின் தாயாகிய அதிதிக்காகவும் தனது நிலையிலிருந்து மூன்றடி மண்ணை யாசகமாகக் கேட்ட காரணத்தினால் இவ்வுலகளந்த பெருமாளை, “ஓங்கி உலகளந்த உத்தமன்” என்று ஸ்ரீஆண்டாள் தனது திருப்பாவையில் மிகவும் கொண்டாடுகின்றாள். மேலும் பல ஆழ்வார்களும் இந்த அவதாரத்தைப் போற்றிப் பாடியுள்ளனர்.காஞ்சிபுரத்திலுள்ள திருவூரகம், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோயிலூர் ஆகிய திவ்வியதேசங்களில் ஸ்ரீஉலகளந்த பெருமாள் மிக அற்புதமாக நமக்குச் சேவை சாதிக்கின்றார்.வரும் 26.9.2023 (புரட்டாசி ஒன்பதாம் நாள்) அன்று ஸ்ரீவாமன ஜெயந்தித் திருநாள் அமைகின்றது