Bakthi Magazine
ஓலை கொண்ட மாரியம்மன்!
சுயம்புவாகத் தோன்றிய மாரியம்மனுக்கு ஒரு சமயம் ஊரைச் சுற்றிப் பார்க்கும் ஆசை வந்தது. அதனால், ஒரு சாதாரணப் பெண் வடிவம் கொண்டு, இவ்வூரில் உள்ள தேவாரப்பாடல் பெற்றத் தலமான அருள்மிகு பனங்காட்டீசன் திருக்கோயில் சன்னதித் தெருவிற்கு வந்தாள். ஆலயத்தின் எதிரில் இருந்த பனைமரத்தடியில் இருந்த சுமைதாங்கிக் கல் மீது அமர்ந்தாள். பிறகு அத்தெருவில் வருவோர் போவோரை வேடிக்கை பார்த்திருந்தாள். அப்போது அத்தெரு வழியே வளையல் வியாபாரி ஒருவர் கூடையைத் தன் தலையில் சுமந்தபடி, "வளையல் வாங்கலியோ வளையல்" என்று கூவியபடி சென்றார்.