பார்வதிதேவி மயில் உருவில் பரமேஸ்வரனை வழிபட்ட இரண்டு தலங்களுள் ஒன்று, மயிலாடுதுறை. இங்குள்ள மக்களால் பெரிய கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ அபயபிரதாம்பிகை சமேத ஸ்ரீ மாயூரநாதசுவாமி திருக்கோவில், திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமானது.இந்த ஆலயத்திற்கு 3.9.2023, ஞாயிற்றுக்கிழமை, காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதாக திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அதற்கான இறுதிக்கட்ட பணிகள் இரவு பகலாக வெகு மும்முரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் ’ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது’என்ற பெருமை மிக்க இந்தத் தலத்தின் வரலாறு குறித்துத் தெரிந்து கொள்வது அவசியம்.முன்னொரு காலத்தில் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகள் மயில்கள் அதிகம் வாழும் காடாக இருந்ததாம். அப்போது அருகே உள்ள பரசலூரில் சிவபெருமானை அவமதித்து தட்சன் யாகம் செய்ததாகவும், கெளதம முனிவரின் சாபத்தால் அந்த யாகத்திற்குப் பயந்து தப்பி வந்த மயில்களுக்கு பார்வதி தேவி அபயம் அளித்துக் காப்பாற்றியதாகவும் (அபயம் அளித்தமையால் இறைவிக்கு அபயபிரதாம்பிகை என்று நாமம் ஏற்பட்டது), அதனால் சினங்கொண்ட சிவபெருமான் பார்வதியையும் மயிலாகும்படி கூறியதால் பார்வதிதேவி பெண் மயிலாக உருவெடுத்தாளாம்..லிங்க வடிவில் இருந்த சிவபெருமானை மயில் வடிவில் வெகுநாட்கள் பார்வதிதேவி பூஜிக்க, கடைசியில் மனமிரங்கிய சிவபெருமான் தானும் ஆண் மயில் வடிவத்தில் உருவெடுத்து பெண் மயிலான பார்வதி தேவியுடன் சேர்ந்து ஆடினார். சிவனும், பார்வதியும் மயில் உருவத்தில் ஆடியதால் இந்த ஊரும் மயிலாடுதுறை ஆயிற்று. இருவரும் ஆடிய இந்த தாண்டவம் மயூரதாண்டவம் ஆனது.மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறந்தது; பிரம்மபுரம், கெளரீமாயூரம், மாயூரம், மயிலாடுதுறை எனப் பல பெயர்களைத் தாங்கியது; பிரம்ம தீர்த்தம், ரிஷப தீர்த்தம், காசியப தீர்த்தம், அகத்திய தீர்த்தம் முதலிய எண்பத்தாறு தீர்த்தங்களைப் பெற்றுள்ளது ஆகிய சிறப்புக்குரியது மாயூரத்தலம்.காவிரியின் தென்பால் விளங்கும் இத்தலம் திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள், திருநாவுக்கரசு சுவாமிகளால் பாடப்பெற்றது; மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளை இயற்றிய தலபுராணம், நல்லத்துக்குடி கிருஷ்ண அய்யர் பாடிய அபயாம்பிகை சதகம், காளமேகப்புலவர் தனிப்பாடல் ஆகிய பாடற் சிறப்புகள் பெற்றது.கிழக்கு நோக்கிய 160 அடி உயரம் கொண்ட ஒன்பது நிலைகொண்ட மிகப்பெரிய ராஜகோபுரத்துடன் ஆலயம் பிரமாண்டமாகக் காட்சியளிக்கிறது. ராஜகோபுர உட்புற நுழைவாயிலில் தெற்கு முகமாக தங்கமுனீஸ்வரர் அனைவரையும் வரவேற்கிறார். அர்த்த மண்டபம், மகா மண்டபம், கர்ப்ப கிரகம், அந்தராள மண்டபம், வசந்த மண்டபம் கொண்ட கோவில்.கருவறையில் ஸ்ரீ மாயூரநாதர் கிழக்கு நோக்கியும், வடக்கே தனிக்கோவிலில் ஸ்ரீ அபயாம்பிகை கிழக்கு முகமாகவும் வீற்றிருக்கின்றனர். கிழக்கு ராஜகோபுரம் வழியே சென்று இரண்டாவது நிலை கோபுரம் பக்கத்தில் உள்ள கொடிமரம் அருகே விநாயகர், வடக்கு புறமாக ஆறுமுகப்பெருமான் ஆகியோரை தரிசிக்கலாம். மாயூரநாதர் உட்பிராகாரத்தில் அறுபத்து மூவர்கள் காட்சிதருகின்றனர். தென்பிராகாரத்தில் குதம்பைச்சித்தர் ஐக்கியமான விநாயகர் உள்ளனர். .கர்ப்ப கிரகத்திற்கு நேர் பின்புறம் குமரக்கோவிலில் முருகப்பெருமான் தன் இரு பெரும் தேவியரோடு எழுந்தருளுகிறார். வடக்கு பிராகாரத்தின் மேல் பகுதியில் சட்டநாதர் உள்ளார். இவருக்கு புனுகுச்சட்டம் மட்டுமே சாத்தப்படுவது வழக்கம். இங்கே சனீஸ்வரர் வடக்கு முகமாக அருள்பாலிப்பது விசேஷமானது. களஞ்சிய விநாயகர் எதிரே நாதசர்மா என்பவர் வழிபட்டு இறைவனிடம் ஐக்கியமான லிங்கத்திருமேனி உள்ளது. கோவில் நெற்களஞ்சிய அறை அருகே களஞ்சிய விநாயகர் என்ற கணக்கடி விநாயகர் உள்ளார். இன்றும் கணக்குகளில் வெற்றி பெற பள்ளி மாணவர்களும், மற்றவர்களும் இந்த விநாயகர் முன்பு கணக்குகளை விரலால் எழுதுவது வழக்கமாக உள்ளது.கோவிலின் உள்ளே உள்ள தீர்த்தம் பிரம்மதீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. பிரம்மதேவன் இங்கு நீராடி மீண்டும் படைப்புத்தொழிலைக் கைவரப்பெற்றதால் பிரம்மாவின் பெயரிலேயே பிரம்மத்தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.அடுத்தது துலாக்கட்டம் என்ற காவேரி நதி நடுவில் உள்ள ரிஷப தீர்த்தம். இங்குதான் ஐப்பசி மாதத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. பக்தர்கள் நீராடும் இந்த இடம் முழுக்குத்துறை என அழைக்கப்படுகிறது.முன்னொரு காலத்தில் மூன்றரைக்கோடி தீர்த்தங்களும் கயிலைக்குச் சென்று தவம் செய்தன. பெருமான் எழுந்தருளி நீங்கள் விரும்புவது யாதெனக் கேட்டார். தீர்த்தங்கள் அனைத்தும் எங்களிடம் எல்லோரும் வந்து நீராடுவதால் பாவங்கள் எல்லாம் சுமந்து ஒளி குன்றிக் கறுத்துவிட்டோம். எங்கள் பாவத்தைக் கழுவும் இடம் ஒன்று அருளுதல் வேண்டும் என்று வேண்டிக்கொண்டன. அதற்கு பெருமான் மாயூரத்திலே ரிஷப தீர்த்தத்தில் மூழ்கி பாவங்களைப் போக்கிக்கொள்க என அருளி மறைந்தார். தீர்த்தங்களும் அவ்வாறே ரிஷப தீர்த்தத்தில் நீராடி மாயூரநாதனை வழிபட்டு புனிதமாயின..இக்கோவிலில் நடைபெறும் மிகப்பெரிய உற்சவம் துலா உற்சவமாகும். ஐப்பசி 1 ஆம் தேதி ஆரம்பித்து, கடைமுழுக்கு ஐப்பசி கடைசி நாளன்று நிறைவடைகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி மாதத்தில் ரிஷப தீர்த்தத்தில் காசி முதல் கன்னியாகுமரி வரையுள்ள மக்கள் வந்து நியமப்படி நீராடி வருவதையும் கடைமுழுக்கு, முடவன் முழுக்குகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் நீராடி பயன்பெறுவதையும் அனைவரும் அறிவர். ஐப்பசி மாதம் முழுவதும் பல்வேறு உற்சவங்கள் நடைபெறும்.அளவிடற்கரிய பெருமைகளை உடைய இத்தலத்தில், காவிரி துலாக்கட்டத்திலுள்ள ரிஷப தீர்த்தத்தில் ஐப்பசி மாத அமாவாசை நண்பகலில் கங்கை முதலிய புண்ணிய நதிகள் யாவும் நீராடி, இடபாரூடரான மாயூரநாதரையும் அஞ்சல் நாயகியையும் வழிபட்டு பாவம் நீங்கப்பெறுவதாக ஐதிகம்.இந்த பிரமோற்சவம் தவிர மாத உற்சவம், பட்ச உற்சவம், பிரதோஷம், ஷஷ்டி, ஆடிக்கடைவெள்ளியன்று லட்சதீபப் பெருவிழா, நவராத்திரி உற்சவமும், வைகாசி திருவிழாவின் முடிவில் பிரம்ம தீர்த்தக்குளத்தில் தெப்போற்சவமும், ஐப்பசி பெளர்ணமியன்று அன்னாபிஷேக விழாவும் சிறப்பாக நடைபெறும்.இந்தக் கோவிலில் பெளர்ணமியன்று சுவாமி, அம்பாள் இருவரையும் சேர்த்து வெளிப்பிரதட்சணம் செய்து பதினொரு முறை வலம் வருவது திருவண்ணாமலையில் கிரிவலம் வருவதற்குச் சமமானதாகச் சொல்லப்படுகிறது. எங்கே இருக்கு?மயிலாடுதுறை ரயில்வே ஜங்ஷனிலிருந்து ஒன்றரை கி.மீ தொலைவிலும், மயிலாடுதுறை புதிய மற்றும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஐந்நூறு மீட்டர் தொலைவிலும் மாயூரநாதசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.தரிசன நேரம்காலை 5.30 - பகல் 12; மாலை 4 - இரவு 8.30. -ஆர்.விவேக் ஆனந்தன்