Bakthi Magazine
வணக்கம் - ஆசை நிறைவேறட்டும்!
’’மற்றவர்களைவிட கூடுதல் திறமை உள்ள எனக்கு ஏன் அது கிடைக்கவில்லை?’’ என்ற கேள்வி மனதில் எழுந்தாலும், நீங்கள் கண்டிப்பாக இயங்கிக் கொண்டுதான் இருக்க வேண்டும். சிலருக்கு உடனே அங்கீகாரம் கிடைக்கும்; சிலருக்கு சில காலம் சென்ற பிறகு தான் கிடைக்கும். சிலருக்குக் கிடைக்காமல் போகவும் வாய்ப்பு உள்ளது.
ஏன் இந்த முரண்பாடு என்று உங்களுக்குள் ஒரு கேள்வியும் எழும். நீங்கள் விருப்பப்பட்டு எதைப் பற்றியும் சிந்திக்காமல் செயல்படும் போது உங்களுக்கு ஒரு மகிழ்ச்சி உண்டாகும். அது தான் அதற்கு சன்மானம்.