-பி.ராமகிருஷ்ணன்ஒரு சமயம் ஸ்ரீ மடத்துல இருந்த பெரியவாளை தரிசிக்க ஒரு பெண்மணி வந்திருந்தா. முப்பது வயசு இருக்கும் அவளுக்கு. நன்னா லட்சணமா இருந்தாலும் அவ முகத்துல ஒரு குறை இருக்கறது எல்லாருக்குமே நன்னா தெரிஞ்சுது. அதாவது நெத்தியில குங்குமம் இட்டுக்காம வெறும் விபூதிக் கீத்தை மட்டும் இட்டுண்டு இருந்தா அவ. உச்சி வகிட்டுலயும் குங்குமம் இல்லை..பெண்கள் பெரியவா முன்னால இப்படிப் பாழ் நெத்தியோட போய் நிற்கக் கூடாதுங்கறதால, சில பெண்கள் அவளுக்கு குங்குமம் குடுத்தா. ஆனா அந்தப் பெண்ணோ அதை வாங்கிக்காம தவிர்த்துட்டு, புடவை முந்தியால தலையையும் முக்கால்வாசி முகத்தையும் மூடிண்டு பெரியவா முன்னால் போய் நின்னா.அவ அப்படி வந்து நின்னதும் ஒரு தரம் ஏற இறங்கப் பார்த்த பெரியவா, கை நிறைய குங்குமத்தை அள்ளி அவகிட்டே நீட்டினார். ”இதை நெத்தியில இட்டுக்கோ..!” அப்படின்னார்.ஆனாலும் அவ ரொம்பவே தயங்கினா. கையைப் பின்னுக்கு இழுத்துண்டு ஒதுங்கினா.“நீ எதுக்காகத் தயங்கறேன்னு புரியறது... ஆனா, இதை இட்டுக்கறதுக்கான யோக்யதாம்சம் உனக்கு இருக்கு... தயங்காம வாங்கி இட்டுக்கோ!” அப்படின்னார் பெரியவா.அதுக்கப்புறமும் தயக்கத்தோடேயே குங்குமத்தை வாங்கி இட்டுண்டா அந்தப் பெண்மணி.அவ ஏன் அப்படித் தயங்கினா? பெரியவா உனக்கு யோக்யதை இருக்குன்னு சொன்னது எதைப்பத்தின்னெல்லாம் அப்போ யாருக்கும் தெரியலை. ஒரு மாசத்துக்கு அப்புறம் ரொம்ப சந்தோஷமா நெத்தி நிறைய குங்குமம் இட்டுண்டு, அகத்துக்காரரோட வந்து பெரியவாளை நமஸ்காரம் பண்ணின அவளை விசாரிச்சப்போதான் அந்த அற்புதம் தெரியவந்துது.அவளோட அகத்துக்காரர், மிலிட்டிரியில ஒர்க் பண்ணிண்டிருந்தார். ரெண்டு மாசத்துக்கு முன்னால எல்லைல நடந்த சண்டைல அவர் மார்புல குண்டு பாஞ்சு இறந்துட்டார்னு அவளுக்கு ராணுவத்துல இருந்து தகவல் வந்திருக்கு. அவரோட தேகம்கூட கிடைக்கலைன்னு சொல்லிட்டா. குழந்தைகள் இல்லாததால, தானே எல்லாக் காரியத்தையும் பண்ணியிருக்கா இவ. அதுக்கு ஒரு மாசத்துக்கு அப்புறம், அகால மரணம் அடைஞ்சுட்ட அகத்துக்காரரோட ஆன்மா சாந்தியடைய என்ன பரிகாரம்னு பெரியவா கிட்டே கேட்கத்தான் அவ போன மாசம் வந்திருக்கா. அப்போதான், பெரியவா அவகிட்டே குங்குமம் தந்து இட்டுக்கச் சொல்லியிருக்கார்.அதுக்கப்புறம் நடந்ததுதான் பேரதிசயம். சண்டைல குண்டுபாஞ்சு சரிவுல உருண்ட அவளோட அகத்துக்காரரை யாரோ மலைவாசிகள் தூக்கிண்டுபோய் சிகிச்சை செஞ்சு காப்பாத்தியிருக்கா. அதுக்கப்புறம் உடல்நலம் தேறினவர், அலுவலகத்துக்குப்போய் விஷயத்தைச் சொல்லிட்டு, பொண்டாட்டியைப் பார்க்க ஊருக்கு வந்திருக்கார்.அகத்துக்காரர் தவறிட்டார், தான் அமங்கலி ஆகிட்டோம்னு நினைச்சுண்டு இருந்தவளை, இல்லை நீ சுமங்கலிதான்னு சொல்லாம சொல்றவிதமாத்தான் உனக்கு அந்த யோக்யதை இருக்குன்னு அன்னிக்குப் பெரியவா சொல்லியிருக்கார்.இதெல்லாம் தெரியவந்ததும், அங்கே இருந்தவா எழுப்பின சங்கர கோஷம், ஸ்ரீமடம் முழுக்க எதிரொலிச்சுது.