ஒரு தரம் மகாபெரியவா, ஸ்ரீமடத்துல அருளுபதேசம் பண்ணிண்டு இருந்தார்.“பசுபதின்னு ஈஸ்வரனைச் சொல்றா. பசுன்னா கோமாதான்னு அர்த்தம் உண்டு. ஆனா, இங்கே அது அர்த்தம் இல்லை. லோகத்துல உள்ள எல்லா ஜீவன்களுமே பசுக்கள்தான். எல்லா உயிருக்கும் தலைவன்கறதால ஈஸ்வரன், பசுபதி.இப்படி எல்லாமே பசுவா இருந்தாலும், கோமாதாவான பசுவுக்கு ஒரு தனி விசேஷம் உண்டு. அதோட தேகத்துல சகல தெய்வங்களும் வசிக்கறதா வேத, புராணங்கள் சொல்றது. அதுமட்டுமல்லாம, தன்னோட ஷீரத்தால லோகத்துல உள்ள எந்த ஜீவராசியையும் ரக்ஷணம் பண்ணக்கூடியது, கோமாதா. அதாவது, ஒவ்வொரு ஜீவனுக்கும் தனித்தனியா ஒரு தாயார் இருந்தாலும், கோமாதா எல்லா ஜீவனுக்கும் பொதுவான தாயார். அதனாலதான் கோமாதாவை….” சொல்லிண்டே இருந்த பெரியவா, ஏதோ சலசலப்பு சத்தம் கேட்க, சட்டுனு நிறுத்திட்டு, என்ன காரணம்னு பார்த்தார். “சுவாமி, வீதியில ரெண்டு பசுமாடுங்களைப் பார்த்தேன்க. யாருமே கவனிக்காததால, உடம்பு ரொம்ப நலிஞ்சு சுத்திக்கிட்டு இருந்துச்சுங்க. பாவமா இருந்ததால, அதுகளைப் பிடிச்சுகிட்டு வந்து பக்கத்துல உள்ள கோசாலைல கொண்டுபோய்விட்டேன்க… அதையெல்லாம் வாங்கிக்கமுடியாதுனு சொல்றாங்க. அதான், இங்கே உங்ககிட்டே வந்து முறையிடலாம்னா, இவங்க தடுக்கறாங்க!” அப்படின்னார், அந்த மனுஷர்.“ஏன்?” அப்படின்னு கேட்கறாப்புல தலையை உயர்த்தினார் பெரியவா. அதைப் புரிஞ்சுண்ட சீடர்,.“பெரியவா, இவர் கொண்டுவந்திருக்கறது, கறவை நின்னுபோன பசு. ரொம்ப வயசாயிடுத்து. அதனாலதான் வேண்டாம்னு சொல்லியிருக்கா!” சொன்னார்.“உங்களுக்கெல்லாம் தெரியுமோ… யௌவனத்துல இருக்கறப்போ தாயாரை யாரும் கவனிச்சுக்க வேண்டாம். அவ தன்னையும் பார்த்துண்டு, மத்தவாளையும் பார்த்துப்பா. ஆனா, வயோதிகத்துலதான் அவளுக்கு ஆதரவு, அன்பு எல்லாம் தேவைப்படும். அதே மாதிரிதான், கோமாதாவும். பாலைக் குடுக்கற வரைக்கும் பத்திரமா பார்த்துப்பா. அதுக்கு அப்புறம் தெருவுல விரட்டவோ, மத்ததுக்கு அனுப்பவோ செய்வா.அப்படி அநாதரவா விடப்படற கோமாதாவை ரக்ஷணம் பண்ணறதுதான் உண்மையான கோ சம்ரக்ஷணம். பால் வேண்டி வளர்க்கறதெல்லாம் ஒரு வகைல சுயநலம். இதோ தன்னால அதுகளை வளர்க்க முடியாதுன்னாலும், கோமடத்துல கொண்டுவந்து சேர்க்கணும்னு இவர் கூட்டிண்டு வந்திருக்காரே… இதுதான் தூய்மையான கோ சம்ரக்ஷணம்!” சொன்ன பெரியவா, எழுந்து ஸ்ரீமடத்தோட வாசலுக்கு வந்து, அந்த ஆசாமி அழைச்சுண்டு வந்த பசுக்களைப் பார்த்தார்.தாயாரைப் பார்த்த குழந்தைகள் மாதிரி, பெரியவாளைப் பார்த்ததும் அந்தப் பசுக்கள் குரல்குடுத்துது. கொஞ்சம் பழங்களைக் கொண்டுவரச்சொல்லி, அதுகளுக்குக் குடுத்த பெரியவா, ஒரு சீடனை அழைச்சார். “நான் சொன்னதா சொல்லி, இதுகளை பசுமடத்துல விட்டுட்டு வா!” அப்படின்னுட்டு, பசுக்களை அழைச்சுண்டு வந்தவர்கிட்டே மாதுளங்கனிகள் ரெண்டைக் குடுத்து ஆசிர்வதிச்சார்.உண்மையான கோசம்ரக்ஷணம்னா என்னன்னு புரிஞ்சுண்டதுக்கு அடையாளமா, அங்கே இருந்தவா எழுப்பின சங்கர கோஷம், ஸ்ரீமடம் முழுக்க நிறைஞ்சு எதிரொலிச்சுது. -பி.ராமகிருஷ்ணன்