மகாபெரியவா மேல பரிபூரண நம்பிக்கை உள்ளவர் அந்த பக்தர். அதேசமயம், ஜோஸியம், ஜாதகம், கிரஹங்கள்னு யாராவது ஏதாவது சொன்னா, அதையெல்லாம் தட்டாம கடைபிடிக்கக்கூடியவர்.அந்த பக்தர் ஒரு சமயம் மகானை தரிசிக்க ஸ்ரீமடத்துக்கு வந்திருந்தார். அப்போ கனிவர்க்கம், புஷ்பங்கள் எல்லாத்தையும் ஒரு மூங்கில் தட்டுல பெரியவா முன்னால வைச்சார். அதுக்கப்புறம் நவரத்னக் கற்கள் பதிச்ச மோதிரம் ஒண்ணை எடுத்து அந்தத் தட்டுக்கு நடுவுல வைச்சார்.எல்லாத்தையும் அமைதியா பார்த்துண்டு இருந்த பெரியவா, அவர் மோதிரத்தை வைச்சதும், ”என்ன இது?’’ அப்படிங்கற மாதிரி சைகையா கையை அசைச்சுக் கேட்டார்.“பெரியவா! என்னோட ஜாதகத்தைப் பார்த்துட்டு ஜோஸியர் ஒருத்தர், நவகிரஹ கல் பதிச்ச மோதிரம் போட்டுண்டா நல்லதுனு சொன்னார். அதான், நகைக்கடைல ஆர்டர் குடுத்து செஞ்சு எடுத்துண்டு வந்திருக்கேன். உங்க ஆசிர்வாதத்தோட போட்டுக்கலாம்னு...!” வார்த்தைய முடிக்காம நிறுத்தினார்.“இதை நீ போட்டுக்க வேண்டாம்.” அழுத்தமா சொன்னா பெரியவா. அதைக் கேட்டதும் அந்த பக்தரோட முகம் வாடிடுத்து. “பெரியவா... இதை...”ன்னு இழுத்தவர் முடிக்கறதுக்குள்ளே, ”அதான் சொல்லிட்டேனே!” அப்படின்னுட்டு, கல்கண்டையும் குங்குமத்தையும் தந்து ஆசிர்வதிச்சா பெரியவா. மகான் இப்படிச் சொல்லிட்டாரேங்கற ஆதங்கத்தோட மோதிரத்தை எடுத்துண்டு அமைதியா புறப்பட்டார், அந்த பக்தர்..அதுக்கப்புறம் ரெண்டு மாசம்கழிச்சு மறுபடியும் பெரியவாளை தரிசிக்க வந்திருந்தார் அந்த பக்தர். வழக்கம்போல பெரியவா முன்னால வந்து நமஸ்காரம் பண்ணினார்.“பெரியவா, ஒங்க பேச்சைக் கேட்காம அன்னிக்கு அந்த நவரத்ன மோதிரத்தைப் போட்டுண்டுட்டேன். அதோட விளைவு என்னோட விரலையே எடுக்க வேண்டியதாகிடுமோங்கற அளவுக்குப் பிரச்னை வந்துடுத்து. உங்க மேல பாரத்தைப் போட்டுட்டு வேண்டிட்டேன். நல்லவேளை, விரல் தப்பிச்சுடுத்து!” தழுதழுப்பா சொல்லிட்டு மறுபடியும் விழுந்து நமஸ்காரம் பண்ணிட்டு பிரசாதம் வாங்கிண்டு நகர்ந்தார்.அங்கே இருந்த பக்தர்களெல்லாம் அவரைக் கூப்பிட்டு விசாரிச்சப்போதான் தெரியவந்துது அந்த விஷயம்.பெரியவா அவரை மோதிரத்தைப் போட்டுக்க வேண்டாம்னு சொல்லிட்டாலும், ஜோஸியத்து மேல உள்ள நம்பிக்கையால, மறுநாளே அந்த மோதிரத்தைப் போட்டுண்டுட்டார் அந்த பக்தர். அதுக்கு சில நாளைக்கு அப்புறம் ஆபீஸ் விஷயமா வெளியூருக்கு பஸ்ஸுல போயிருக்கார். அப்போ ஜன்னல் பக்கம் உட்கார்ந்திண்டு இருந்த இவரோட கை லேசா வெளியில தெரிஞ்சிருக்கு. அதை கவனிச்ச திருடன், பஸ் புறப்படற நேரத்துல, இவர் கையில இருந்த மோதிரத்தைப் பிடிச்சு இழுத்திருக்கான். இவர் இழுக்க அவன் இழுக்க விரலே ஒடிஞ்சுடுமோன்னு ஆகியிருக்கு. பஸ் வேகம் எடுத்துட்டதால வேற வழியில்லாம அந்தத் திருடன் விட்டுட்டு ஓடியிருக்கான்.அதுக்கப்புறம் இவரோட விரல் பெரிசா வீங்கியிருக்கு. மோதிரத்தையும் கழற்றமுடியாதபடி ஆகியிருக்கு. டாக்டர்கிட்டே கொண்டு காட்டினப்போ, அவர் மோதிர விரல்ல ரத்தம்கட்டி வீங்கிடுத்து. தட்டான் கிட்டே காட்டி, மோதிரத்தை வெட்டிக் கழட்டிட்டு வாங்கோ அப்புறம் ட்ரீட்மெண்ட் பண்ணறேன்னு சொல்லியிருக்கார். அப்போதான் பெரியவா மோதிரத்தைப் போட்டுக்காதேன்னு சொன்னதோட அர்த்தம் புரிஞ்சிருக்கு! இதையெல்லாம் அவர் சொல்லச் சொல்ல, மகானோட மகிமையை நினைச்சு அப்படியே சிலிர்த்துப் போனா அங்கே இருந்தவா. -பி.ராமகிருஷ்ணன்