-பி.ராமகிருஷ்ணன்மகாபெரியவா ஸ்ரீமடத்துல அருளாட்சி செஞ்சிண்டிருந்த காலகட்டம். அப்போ ஒரு வெள்ளிக்கிழமையன்னிக்கு வழக்கத்தைவிட அதிகமா பொம்மனாட்டிகள் மகானை தரிசிக்க வந்திருந்தா..எல்லாரும் வரிசையா வந்து பிரசாதம் வாங்கிண்டு இருந்த சமயத்துல திடீர்னு பெரியவா, “ஸ்த்ரீகள் எல்லாம் வரிசைலேர்ந்து ஒதுங்கி தனியா ஒரு இடத்துல உட்கார்ந்து லலிதா சகஸ்ரநாமம் சொல்லுங்கோ!” அப்படின்னார்.திடுதிப்புன்னு எதுக்காக அப்படிச் சொல்றார்னு யாருக்கும் புரியலை. ஆனாலும் உடனே பெண்கள் எல்லாம் வரிசையா உட்கார்ந்து ஸ்லோகம் சொல்ல ஆரம்பிச்சா.ஒரு சில நிமிஷம் நகர்ந்திருக்கும். ஸ்ரீமடத்து வாசல்ல இருந்து, “வளையல், வளையல்னு பெரிசா ஒரு குரல் கேட்டுது!”.வளையல் வியாபாரியோட குரல் அதுன்னு எல்லாருக்குமே புரிஞ்சுது. ஆனா, அந்த வியாபாரிக்குதான், அது ஸ்ரீமடம்கறதோ அங்கே மகான் இருக்கார்ங்கறதோ தெரியலை. அதனால, மறுபடியும் மறுபடியும் குரல் குடுத்துண்டு இருந்தார்.ஸ்லோகம் சொல்லிண்டு இருந்தவாளுக்கு அது இடைஞ்சலா இருக்கும்னு நினைச்சு, வியாபாரியை போகச்சொல்றதுக்காக சிலர் எழுந்தா.அப்போ யாரும் எதிர்பார்க்காதவிதமா பெரியவா விரலை சொடுக்கினார். எல்லாரும் திரும்பிப்பார்க்க, “அந்த வளையல்காரரை விரட்டாதீங்கோ. உள்ளே வரச்சொல்லுங்கோ!” அப்படின்னார்.உடனே வளையல்காரரை உள்ளே அழைச்சுண்டு வந்தா. யாரோ ஒரு சன்யாசி உட்கார்ந்துண்டு இருக்கறதைப் பார்த்ததும் சங்கோஜத்துல நெளிஞ்சார் அந்த வியாபாரி..“சாமீ, இது மடம்னு தெரியாம குரல் கொடுத்துட்டேன்க. ஒரு வாரமா வியாபாரமே சரியா நடக்கலைங்க. உள்ளேர்ந்து பொம்பளைங்க பாடற சத்தம் கேட்டதால, வளையல் எதாச்சும் விற்கும்னு நினைச்சு குரல் கொடுத்துட்டேன்க!” தயங்கித் தயங்கிச் சொன்னார்.அவனை ஆதூரத்தோட பார்த்தார், பெரியவா. பரவாயில்லை. சரியான நேரத்துலதான் வந்திருக்கே. உன்னோட வளையல் பெட்டியை அங்கே வைச்சுட்டு, கைகால் அலம்பிண்டு சாப்டுட்டு வா!” பெரியவா சொல்ல, வியாபாரியை அழைச்சுண்டுபோய் போஜனம் பண்ணிவைச்சா, அணுக்கத் தொண்டர்கள்.அவர் சாப்டுட்டு வந்ததும், அணுக்கத்தொண்டரைக் கூப்பிட்ட பெரியவா, ‘‘சென்னைலேர்ந்து ஒருத்தர் இப்போதான் வந்து வரிசைல நின்னிருக்கார். அவரை அழைச்சுண்டு வா!” அப்படின்னார்..அப்படியே போய் தொண்டர் கூப்டதும், வந்து நின்னதுமே பெரியவா தரிசனமான்னு ஆச்சரியத்தோடவந்து பவ்யமா மகான் முன்னால நின்னார், அந்த பக்தர்.அவரைப் பரிவோட பார்த்தார், பரமாசார்யா. ‘‘என்ன, பொண்ணோட கல்யாணம் கைகூடற நேரத்துல தட்டிப் போறாப்புல இருக்கா..ஒண்ணு செய். இன்னிக்கு வெள்ளிக்கிழமை. இதோ இங்கே இருக்கற பொம்மனாட்டிகள் எல்லாருக்கும் நீ கை நெறைய வளையல் வாங்கிக் குடு. அம்பாளோட ஆசிர்வாதத்துல உன் பொண்ணோட கல்யாணம் ஜாம்ஜாம்னு நடக்கும்!” அப்படின்னார்.வந்தவருக்கு பரம சந்தோஷம். தான் சொல்லாமலே தன் பிரச்னையைப் புரிஞ்சுண்டு அது தீர்றதுக்குப் பரிகாரத்தையும் சொன்ன பெரியவாளை சாஷ்டாங்கமா விழுந்து கும்பிட்டுட்டு, அவர் சொன்ன மாதிரியே எல்லா பொம்மனாட்டிகளுக்கும் வளையல் வாங்கிக் குடுத்தார்..எல்லாருக்கும் வளையல் குடுத்து முடிச்சதும், “நீங்க எல்லாரும் இவ்வளவு நேரம் லலிதா சஹஸ்ரநாமம் சொன்னேள் இல்லையா, அந்தப் பலனா, இவரோட பொண்ணுக்கு விவாஹம் கைகூடி வரணும்னு பிரார்த்திச்சுக்குங்கோ!” அப்படின்னார். எல்லாரும் அப்படியே பண்ணினா.ஒரு டஜன் வளையலாவது விற்குமான்னு ஏக்கத்தோட வந்த வியாபாரியோட முகத்துல ஒட்டுமொத்த வளையலை விற்ற மகிழ்ச்சி பிரதிபலிச்சுது.அதுக்கப்புறம் அந்த பக்தரோட மகளுக்கு கல்யாணம் சுமுகமா கைகூடி வந்ததையும், அடுத்த வாரமே அவர் மறுபடியும் ஸ்ரீமடம் வந்து மகான் திருவடியில பொண்ணோட முகூர்த்தப் பத்திரிகையை வைச்சு நமஸ்காரம் செஞ்சதையும் சொல்லணுமா என்ன?