Bakthi Magazine
ஸ்ரீராமபிரான் அளித்த தாமரை மலர்கள்!
ஸ்ரீஸத்தியஸந்தர் வடநாட்டிலுள்ள புண்ணிய க்ஷேத்திரமாகிய கயாவுக்குச் சென்ற பொழுது அங்குள்ளவர்கள் தங்களுக்குப் பணம் கொடுக்காவிட்டால் கோயிலைத் திறக்க மாட்டோம் என்று கூறியிருக்கின்றனர். ஆனால், ஸ்ரீஸத்தியஸந்தர் திருக்கோயில் வாசலை அடைந்த மறுகணமே திருக்கோயிலின் பூட்டுகள் உடைந்து, கதவுகளும் திறந்தன. தொடர்ந்து ஒரு வார காலம் இது போன்று நிகழ்ந்ததைக் கண்ட கோயில் நிர்வாகிகள் ஸ்வாமிகளின் பெருமையை உணர்ந்து மன்னிப்புக் கேட்டுள்ளனர்.