-மீரா திருநாவுக்கரசு பலி தேருதல் என்றால் பிச்சை எடுத்தல், யாசித்தல், இரத்தல் என்று பொருள். தம்மிடம் இல்லாத ஒன்றை, அந்த ஒன்று அதிகமாக இருக்கும் மற்றொருவரிடம் ஒருவர் யாசிப்பது பலி தேருதல் ஆகும்..இங்கு நம் ஊரில் சில ஏழைகளும், குடும்பத்தினால் கைவிடப்பட்ட சில முதியவர்களும் சோற்றிற்காக பிச்சை எடுப்பதை நாம் கண்டிருக்கிறோம். ஆனால் நம்மை எல்லாம் ஆளுகின்ற கருணை வடிவான நம்பெருமான் ஈசன் பிச்சை எடுக்கிறார்.ஆம், ஈசன் சிவபெருமான் ஒரு பிச்சைக்காரர். சற்று விசித்திரமான விஷயமாக இருந்தாலும் அது தான் உண்மை. செல்வத்தின் அதிபதியான குபேரனுக்கே செல்வம் வழங்கும் ஈசனிடம் பணம் இல்லையா அல்லது பொருள் தான் இல்லையா? அனைத்தும் இருந்தும் அவர் பிச்சை எடுக்கிறார் நமக்காக. ஆம் உலக உயிர்களாகிய நாம் உய்யும் பொருட்டு அவர் நம் பாவங்களை, தீய எண்ணங்களை, கெட்ட பழக்க வழக்கங்களை பிச்சை கேட்கிறார். ஈசனிடம் கெட்ட குணங்கள் ஏதும் இல்லை. ஆகவே தான் அந்த கெட்ட குணங்கள் அதிகம் நிரம்பியுள்ள நம் போன்ற மனிதர்களிடம் அவர் பிச்சை கேட்கிறார்.ஈசன் பிச்சை கேட்பது அவரின் நன்மைக்காக அல்ல. உலக மக்களாகிய நமக்காக தான். நாம் உய்யும் பொருட்டு அவர் நம் பாவங்களை பிச்சை கேட்கிறார்..ஈசனிடமிருந்து தான் உயிர் தோன்றுகிறது. இறுதியில் அவரிடமே சென்று ஐக்கியம் அல்லது முக்தி அடைகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் உயிரானது பல்வேறு பிறவிகளை எடுக்கிறது. அவற்றில் சிந்திக்கக் கூடியதும், பக்குவம் மிகுந்த பிறவியாகவும் திகழ்வது இந்த மானுட பிறவி தான். மானுட பிறவியிலும், முதலில் நாம் நாத்திகவாதிகளாக இருந்து கடவுளைத் திட்டுவோம். பிறகு ஒரு கடினமான தருணத்தில் இறைவன் பாதம் பணியத் துவங்குவோம். இறை பக்தர் ஆக மாறுவோம். பிறகு மேலும் மேலும் சிந்திக்க துவங்கும் போது, ஈசன் அருளும் கைக்கூடும் தருணத்தில் நமக்கு முக்தி அடைவதற்கான வழி புலப்படுகிறது..ஈசன் நமக்கு ஞானத்தை வழங்கி, நம்மை அவரது ஞான வெளியில் சேர்த்துக் கொண்டு முக்தி அளிக்க தயாராகத் தான் உள்ளார். ஆனால் நமது பிறவியின் விளைவாக கெட்ட எண்ணங்கள், தீய பழக்கங்கள் கொண்டு பாவங்களை பெருக்கிக் கொண்டு, அவரிடம் செல்ல முடியாமல் தவிக்கிறோம். இந்த பாவங்களை நாம் சுமக்கும் வரை, ஈசனால் நமக்கு ஞானத்தை போதிக்க முடியாது. ஆகவே தான் ஈசன் பிட்சாடனராக மாறி நம்மிடம் நமது தீய பழக்க வழக்கங்களை பிச்சையாக கேட்கிறார்.இப்படி நம் தீய குணங்களை அவரிடம் பிச்சையாக போட்டு விட்டால், நாம் தூயவராக மாறி, அவரின் ஞான உபதேசம் பெறத் தயாராகி விடுவோம். இதை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் மிக அழகாக இப்படி பதிவு செய்வார்..அக்கண மேமாய துர்க்குணம் வேறாக அப்படை யேஞான ...... வுபதேசம் (திருப்புகழ் - 946)இப்படி ஈசன் பிச்சை கேட்கும் பாத்திரம் ஒரு கபாலம் ஆகும். அது பிரம்மனின் மண்டை ஓடு. இதற்கு பின் ஒரு புராணக் கதை உள்ளது. ஒரு முறை திருமாலுக்கும், பிரம்மனுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி வர, ஈசனிடம் சென்று கேட்டனர். அதற்கு ஈசன் விஸ்வரூபம் கொண்டு, யவர் தனது அடி அல்லது முடியை முதலில் பார்த்து விட்டு வருகிறார்களோ, அவரே பெரியவர் என்று போட்டி வைத்தார். திருமால் பன்றி ரூபம் கொண்டு பூமியைக் குடைந்து கொண்டு ஈசன் திருவடியைக் காண சென்றார். அவர் வெகு தூரம் சென்றும் ஈசன் அடியைக் காண முடியவில்லை. ஆகையால் திரும்பி மேலே வந்து தன்னால் ஈசனின் பாதத்தைக் காண முடியவில்லை என்று உரைத்துவிட்டார்.மறு பக்கம் பிரம்ம தேவரோ அன்னப்பறவை ரூபம் கொண்டு ஈசனின் முடியைக் காணப் பறந்து சென்றார். தொலை தூரம் பறந்து சென்றும் ஈசனின் முடியைக் காண முடியவில்லை. என்றாலும் தன்னால் முடியவில்லை என்று ஏற்றுக்கொள்ள பிரம்மனுக்கு மனம் ஒப்பவில்லை. ஆகவே அங்கு கீழே விழுந்து கொண்டிருந்த தாழம்பூவினை பார்த்து பிரம்மன், 'ஈசன் தலையிலிருந்து நீ வருவதால், நான் முடியைப் பார்த்துவிட்டதாக சாட்சி சொல்ல வா’ என்று அழைத்துக் கொண்டு ஈசனிடம் சென்று அவ்வாறே கூறினார். பொய் உரைத்ததை அறிந்த ஈசன் பிரமனின் 5வது தலையை கொய்து விட்டார். தவறு செய்ததற்காக கொய்யப்பட்ட பிரம்மனின் தலையிலே மக்களின் பாவங்களையும், தீய பழக்க வழக்கங்களையும் பலி தேருவேன் என்று உரைத்தார். அப்போதிலிருந்து ஈசன் நம்மிடம் நம் தீய குணங்களை பிரம்ம கபாலத்தில் பலி தேருகிறார்..இப்படி பலி தேருவதை கீழத்தரமான செயல் என்று எண்ணாமல் உலக மக்கள் அனைவருக்காகவும் செய்யும் ஈசன் தான் உண்மையான தலைவன், ஒப்பற்ற தலைவன் என்று சைவப் பெருமக்கள் நால்வர் சிறப்பாக எடுத்துக் கூறுவர். திருநாவுக்கரசர் பெருமான் தனது திருவங்கமாலை பதிகத்தில்,"தலையே நீ வணங்காய்தலையாலே பலி தேரும் தலைவனைதலையே, நீ வணங்காய்"என்று பெருமைப்பட பாடுவார்.மாணிக்கவாசகர் பெருமானோ, "ஆரூர்எம் பிச்சைத் தேவா" என்று திருவாசக அச்சப் பத்தில் புகழ்கிறார். சுந்தரமூர்த்தி நாயனார் ஈசனை கேலி செய்வது போல் புகழ்கிறார் தனது திருவோணகாந்தன்தளி பதிகத்தில்."தைய லாள்உல குய்ய வைத்த...காமக் கோட்டம்உண் டாக நீர்போய்ஊரி டும்பிச்சை கொள்வ தென்னேஓண காந்தன் தளியு ளீரே".அன்னபூரணியாக அன்னை பார்வதி அன்னதானம் முதலிய 32 அறங்களை வளர்த்துக் கொண்டிருக்கும் போது, அவரது கணவர் ஈசன் ஊர் ஊராக பிச்சை எடுக்கலாமா என்று கேலி பேசுவது போல புகழ்கிறார். ஈசன் பலி தேருவது உலக மக்கள் ஞானம் பெற்று உய்யும் பொருட்டு அல்லவா. இதை உணர்த்தவே அமைந்தது தான் ஈசனின் பிட்சாடனர் வடிவம். பிட்சாடனர் கோலத் தத்துவத்தை இக்காலத்தில் மக்கள் நினைவு கொள்ள வேண்டும் என்று தான் பிரபலமான சிவாலயங்களில் பிரமோற்சவத்தின் போது 9ம் நாள் திருவீதி உலாவில் ஈசன் சிவபெருமான் பிட்சாடனர் கோலத்தில் வலம் வருவார். எந்த ஒரு ஆடை ஆபரணங்களோ இல்லாமல் வெற்று கபாலத்தை மட்டும் கையில் ஏந்திக் கொண்டு வலம் வருவார். அதில் காசோ பணமோ இடுவதற்கு பதில், நாம் நம் தீய பழக்கம் ஒன்றை அவரிடம் தந்து விடலாம். இதுவே நாம் நம் வாழ்வில் செய்யும் மிகப்பெரிய பரிகாரமும் ஆகும். நம் பிரச்னைகளுக்காக ஈசனுக்கு விளக்கு ஏற்றுதல், அங்கப்பிரதட்சணம் செய்தல், யாகம் வளர்த்தல் போன்ற பரிகாரங்களை செய்வதை விட அவரிடம் நம் தீய பழக்கம் ஒன்றை விட்டு விடுகிறேன் என்று கூறி பரிகாரம் செய்வது மிகச் சிறந்த பரிகாரம் ஆகும். நம் தீய குணம் ஒன்றை விடுத்து, ஈசனுக்கு பரிகாரம் செய்வோமாக!திருச்சிற்றம்பலம்.