ஐந்து ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும், பஞ்ச கிருஷ்ண தலங்களுள் ஒன்றானதும், கீழைவீடு எனப் புகழப்படுவதுமான திருக்கண்ணபுரம் எனும் தலத்தில் கோவில் கொண்டுள்ளார் சௌரி ராஜப்பெருமாள். இங்கு தினமும் இரவில் பெருமாளுக்கு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யப்படுகின்றது. இந்த ஏற்பாட்டைச் செய்தவர் சோழ மன்னர்களிடம் பணிபுரிந்த முனியோதரன் எனும் சேனாதிபதி. அதனால் இப்பொங்கலுக்கு முனியோதரன் பொங்கல் என்று பெயர். பஞ்ச கிருஷ்ணாரண்ய க்ஷேத்திரங்கள்!கிருஷ்ண பரமாத்மா தான் தங்க ஏற்றதாகத் தேர்ந்தெடுத்த தலங்கள் ஐந்து. அவை திருக்கண்ணபுரம், திருக்கபிஸ்தலம், திருக்கண்ண மங்கலம், திருக்கோவிலூர் மற்றும் திருக்கண்ணங்குடி ஆகியவை. இந்த ஐந்து திருத்தலங்களும் பஞ்ச கிருஷ்ணாரண்ய க்ஷேத்திரங்கள் என அழைக்கப்படுகின்றன. துவாரகை கிருஷ்ணன் கோவில்! குஜராத் மாநிலம் துவாரகையிலுள்ள துவாரகநாதர் கோவிலில் கொடிமரம் இல்லை. இங்கு கருவறையில் கண்ணபிரான் கரிய நிறத்துடன், நான்கு கரங்களுடன் வெள்ளி மஞ்சத்தின் மீது நின்ற கோலத்தில் மேற்கு முகமாக அருள்புரிகிறார். இங்கு கண்ணன் திருவடிகளில் நாமே துளசி இலைகளை சமர்ப்பித்தும் அர்ச்சித்தும் வழிபடலாம். அபூர்வ கிருஷ்ணன் விக்ரகம்! கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மளூர் நவநீதகிருஷ்ணன் ஆலயத்தில் கருநிறக்கல்லில் நவநீதகிருஷ்ணன் தவழ்ந்து கொண்டிருக்கும் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அபூர்வ விக்ரகத்தில் கிருஷ்ணன் பாதங்களில் சங்கு, சக்கர ரேகைகள் காணப்படுகின்றன. கையில் வெண்ணெய் உருண்டையுடன் குழந்தை கண்ணன் தவழும் நிலையில் தத்ரூபமாக அமைந்துள்ளது. கழுத்தில் முத்துமாலை, புலிநக மாலை அசைந்தாடும் விதத்திலும், இடுப்பில் கட்டப்பட்டிருக்கும் சலங்கைப் பட்டையின் ஒலி கேட்கும் விதத்திலும் கருநிறக்கல்லாலான நகைகளுடன் சிற்பம் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பால் பிரசாதம்!நாகர்கோவில் வடசேரிக்கு அருகில் கிருஷ்ணன் கோவில் உள்ளது. இங்கு கிருஷ்ணன் குழந்தை வடிவில் கோவில் கொண்டுள்ளார். இரவில் அர்த்தஜாம பூஜை முடிந்தவுடன் தொட்டிலில் பட்டுத்துணி விரித்து உற்சவ விக்ரகத்தை அதில் படுக்க வைத்து நாதஸ்வரத்தில் தாலாட்டை இசைத்து, பால் நைவேத்தியம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. .கோயில்ல விசேஷங்க!ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோயில், காலடிப்பேட்டை – 20.8.2023சென்னை-19, காலடிப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோயில் அஷ்டபந்தன மஹா ஸம்ப்ரோக்ஷணம் 20.8.2023, ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் நடைபெற இருக்கிறது.சித்தி விநாயகர், ஆதிவைத்தியநாத ஸ்வாமி ஆலயம், பாண்டூர் – 20.8.2023மயிலாடுதுறை மாவட்டம், பாண்டூர் கிராமத்தில் அமைந்துள்ள சித்தி விநாயகர் மற்றும் ஸ்ரீ பாலாம்பிகா ஸமேத ஸ்ரீ ஆதிவைத்தியநாத ஸ்வாமி ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் 20.8.2023, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு மேல் 10 மணிக்குள் நடைபெற உள்ளது.- எஸ். விஜயலக்ஷ்மி