- வடிவேல் முருகன் மக்களின் மனக்கவலையைத் தீர்த்து வைக்கும் மகேசன் கோவில்களுள் ஒன்றாக விளங்குகிறது காயல்பட்டினம் மெய்கண்டீஸ்வரர் ஆலயம். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவலிங்கத் தலங்களில் இது ஐந்தாவதாகும். பிற்காலப் பாண்டியர் ஆட்சியில் குடநாடு என்ற உள்நாட்டுப் பிரிவில் இவ்வூர் அடங்கியிருந்தது. கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் குடநாட்டுப் பகுதி சேர நாட்டின் ஆதிக்கத்தில் இருந்தது. அவ்வேளையில் இவ்வூர் உதயமார்த்தாண்ட பட்டினம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது..வங்கக்கடல் அலைகள் சீறிப்பாய்ந்து அழகு காட்டும் கடற்கரை அருகே காயல்பட்டினம் அமைந்துள்ளது. ஊரின் ஈசான மூலையில், மேற்குப் பார்த்த வண்ணம் நாலாபுறமும் உயர்ந்த திருமதில் சூழ கோவில் காணப்படுகிறது. கிழக்குப் பக்கமாகவும் ஒரு வாசல் இருந்தாலும் மேற்குப் பக்க வாசலே பிரதானமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், வசந்த மண்டபம் என்ற அமைப்பில் அமைந்துள்ள ஆலயத்தின் வெளிச்சுற்று முழுவதும் வாசமலர் பூத்துக் குலுங்கும் நந்தவனம் குளுமையாய்க் காணப்படுகிறது..கி.பி. 14 ஆம் நூற்றாண்டில், பாண்டிய நாட்டில் அந்நியர் படையெடுப்பு நடைபெற்ற வேளையில் இக்கோவில் பெருமளவு பாதிப்புக்குள்ளானது. பல சிலைகளும், மண்டபத் தூண்களில் உள்ள சிற்பங்களும் திட்டமிட்டுச் சேதமாக்கப்பட்டன. மகாமண்டப விதானச் சுவரில் இதிகாச புராணக் கதைகளை எடுத்துச்சொல்லும் அதியற்புதமான சிற்பங்கள் பார்ப்போரின் கண்ணையும் கருத்தையும் கவர்கிறது. மகாமண்டப வடபுறம் தில்லைக்கூத்தர் சந்நதி அமைந்துள்ளது. அர்த்த மண்டபத்தில் பிரதோஷ நந்தி தேவர் வீற்றிருக்க, கருவறை மூலவராக மெய்கண்டீஸ்வரர் லிங்கமூர்த்தமாக எழுந்தருளியுள்ளார். தினமும் இரு கால பூஜை நடைபெறுகிறது. நெய்தீபம் ஏற்றி நம்பிக்கையோடு இத்தல இறைவனை வழிபட்டால், கருத்து வேற்றுமையால் பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வர். நோய் நொடியால் ஏற்பட்ட பாதிப்புகள் விலகுகிறது. விரும்பிய வேலை வாய்ப்பு அமைகிறது. வாரிசு இல்லா குறை நீங்குகிறது. .உழவாரப் பணியும், திருவாசக முற்றோதல் பாராயணமும் தொடர்ந்து நடைபெறுகிறது. தலவிருட்சம் வில்வம்.பிரதோஷம், ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை, அமாவாசை, பௌர்ணமி ஆகிய விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்னியர் படையெடுப்பால் அம்பாள் சந்நதி முற்றிலும் பாதிக்கப்பட்டதால், புதியதாக அம்பாள் சந்நதியும், பரிவார தேவதை சந்நதிகளும் அமைப்பதற்கு அடியார்கள் தற்போது உள்ளன்போடு முயற்சியைத் துவங்கியுள்ளனர். உயர்ந்த வாழ்வும், நலமும் வேண்டுவோர் அவசியம் ஒருமுறை குடும்பத்தோடு இத்தலத்திற்குச் சென்று தரிசித்து வரலாமே! எங்கே இருக்கு?தூத்துக்குடி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் 30 கி.மீ. தொலைவில் காயல்பட்டினம் அமைந்துள்ளது. தரிசன நேரம்காலை 7.30 – 9.30; மாலை 5.30 – 7..மகப்பேறு தரும் மரக்குடுவை பிரார்த்தனை! சக்திதேவியின் உடல் பாகங்கள் பூமியில் விழுந்த இடங்களை சக்தி பீடங்களாக வணங்கி வருகிறோம். அவற்றில் ஒன்றாகக் கருதப்படும் ரூர்கி தலத்திலுள்ள அம்மன் ஆலயம், சதிதேவியின் ஆபரணமான சூடாமணி விழுந்த இடமாகும். பல்வேறு வேண்டுதலுக்காக பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டாலும் மழலைச்செல்வம் வேண்டி வருபவர்களே அதிகம். பிள்ளைப்பேறளிப்பதில் வரப்பிரசாதியானவள் இவ்வன்னை. .இவ்வாலயத்தில் ஒரு வினோதமான வழக்கம் உள்ளது. ஆலயத்திலுள்ள பொருட்களை பக்தர்கள் எடுத்துச்செல்லக்கூடாதென்பது பொதுவான மரபு. திருட்டுக்குச் சமமான குற்றம் அது. ஆனால், இங்கு ஆலயத்திலுள்ள பொருளை எடுத்துச்செல்வது வழிபாட்டில் ஓர் அங்கமாக உள்ளது. பிள்ளைவரம் வேண்டும் தம்பதியர் மரத்தால் செய்யப்பட்ட குடுவை ஒன்றைக்கொண்டு வந்து அம்மனுக்கு முன்வைத்துவிட்டு வேண்டிக் கொள்கின்றனர். திரும்பிச் செல்லும்போது அங்கிருக்கும் வேறொரு குடுவையை எடுத்துச்சென்று விடுகின்றனர். பிரார்த்தனை நிறைவேறி குழந்தை பிறந்ததும், அந்தக் குடுவையுடன் இன்னுமொரு குடுவையும் செய்துகொண்டு வந்து, குழந்தையை அன்னையின் காலடியில் வைத்து வணங்கி, அன்னதானம் செய்கின்றனர். பின்னர் இரண்டு குடுவைகளையும் அங்கேயே விட்டுச் செல்கின்றனர். இந்த வழிபாட்டை பெரும்பாலும் ஆடிமாதத்திலே செய்கின்றனர். உத்தரகண்ட் மாநிலத்தில் ரூர்கி எனும் நகருக்கருகில் கடியால் என்னும் கிராமத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.- ஆர். சாந்தா, மயிலாப்பூர்.