சிவபெருமானின் ருத்ர ரூபமாக விளங்குபவர், காலபைரவர். இவரது வழிபாடு தொன்மையானது. சனியின் குருவாகவும், பன்னிரண்டு ராசிகள், எட்டுத் திசைகள், பஞ்சபூதங்களுடன் காலத்தைக் கட்டுப்படுத்துபவராகவும் இவர் விளங்குகிறார்.பைரவரை எவர் ஒருவர் தொடர்ந்து வழிபட்டு, அவர் அருளை பரிபூரணமாகப் பெறுகிறார்களோ அவர்களை யாராலும் வெல்லமுடியாது என்பர். வாழ்வில் துன்பம் நீங்கி இன்பம் பெற அவர் வழிபாடு உதவும். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, ஏரிப்புதூர் கிராமத்தில் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாக காலபைரவர் எழுந்தருளியுள்ளார். எல்லை தெய்வமாக வழிபடப்படும் இவர், சுயம்பு மூர்த்தம். இந்தக் கிராமத்தில் நடக்கும் சகல விழாக்களையும் இவரை முதன்மையாக வைத்து முதல் பூஜையை நடத்திய பிறகுதான் ஆரம்பிக்கிறார்கள். ஆன்மிகப் பெரியவர்களின் ஆலோசனையின்படி, 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் தேதி காலபைரவருக்கு திருவுருவம் அமைக்கப்பட்டு, கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. புதிய திருமேனிக்கு முன்பாக ஆதிமூர்த்தமான சுயம்பு மூர்த்தம் உள்ளது. இந்த காலபைரவரை வணங்குபவர்களுக்கு சகல வியாதிகளும், சகல கஷ்டங்களும், சகல தடைகளும் நீங்குகிறதாம். உத்யோக சங்கடங்கள் நீங்குகிறதாம். எண்ணிய காரியங்கள் ஈடேறுகிறதாம். - என்.முருகேசன்