Bakthi Magazine
ராசி பலன் 11.5.2023 முதல் 24.5.2023 வரை
கவனமாக இருந்தா, கஷ்டங்கள் நீங்கும் காலகட்டம்க. பணியிடத்துல உங்க திறமை உரியவர்களால் உணரப்படும்க. புதிய பொறுப்புகள் அதிகரிக்கலாம்க. அவற்றைத் திட்டமிட்டு நேரம் தவறாமல் செய்தா தேனான எதிர்காலம் காத்திருக்குங்க. வாழ்க்கைத் துணையிடம் வீண் ரோஷம் தவிருங்க. சகோதர உறவுகளால் ஆதாயம் உண்டுங்க. அடிவயிறு, கீழ்முதுகு, அலர்ஜி உபாதைகளை உடனே கவனியுங்க. மகாலக்ஷ்மியைக் கும்பிடுங்க. மங்களங்கள் சேரும்.