Bakthi Magazine
ஹிப் ஹாப் ஆதியின் ‘வீரன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் சூப்பர் ஹீரோ திரைப்படமான ‘வீரன்’ படத்தின் ரிலீஸ் தேதி அப்படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில், ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் ‘வீரன்’ திரைப்படம் இந்தாண்டு கோடை விடுமுறையில் வெளியாகுமென ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், தற்போது அந்தத் திரைப்படம் வரும் ஜூன் 2ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அப்படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை இயக்கியுள்ள ஏ.ஆர்.கே.சரவணன் இதற்கு முன்பு ‘மரகதநாணயம்’ படத்தை இயக்கியவர் ஆவார். மேலும், இந்தப் படம் தமிழில் வெளியாகும் சூப்பர் ஹீரோ திரைப்படமாகும். ஏற்கனவே மலையாளத்தில் வெளியான ‘மின்னல் முரளி’ என்கிற சூப்பர் ஹீரோ திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தற்போது தமிழில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் காளி வெங்கட், ஆதிரா ராஜ், முனிஷ்காந்த், சசி செல்வராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.