பக்தி: 25ஆசி: 19நிம்மதி! சந்தோஷம்! உற்சாகம்! தினமும் நடைபெறும் எந்த ஒரு நிகழ்வும் நமக்கு நேரடியாக அல்லது மறைமுகமாக தொடர்பு கொண்டதாகவே இருக்கிறது. அதில் நமது பங்களிப்பு இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம். சில நிகழ்வுகள் நமக்கு மகிழ்ச்சி தரலாம். சில தராமலும் போகலாம்.நம் தேசம் மிகப் பெரிய செயலை வெற்றிகரமாக நிகழ்த்தும்போது, நம்மை அறியாமல் நமக்குள் ஒரு சிலிர்ப்பும் பெருமிதமும் ஏற்படத்தான் செய்கிறது. அது போலத் தான் ஒரு மனிதன் தன் நாட்டின் சார்பில் பங்கு கொண்டு வெற்றி பெறும் போது அந்த வெற்றியை நாமே அடைந்த உணர்வு ஒவ்வொருவருக்கும் ஏற்படுகிறது. இத்தனைக்கும் நமக்கு நன்றாகத் தெரியும்…. அதில் எந்தத் தொடர்பும் பங்களிப்பும் நமக்கு இல்லை என்று! ஆனாலும் ஒரு மகிழ்ச்சி வரத்தான் செய்கிறது. அதே போலத்தான் நமக்கு தொடர்பில்லாத சில நிகழ்வுகள் வருத்தத்தையும் அளிக்கின்றன.இதற்கு எல்லாம் காரணம், இந்தப் பிரபஞ்சத்தில் நாம் எல்லோரும் கண்ணுக்குத் தெரியாத ஓர் இழையில் இணைக்கப்பட்டுள்ளதுதான். எப்படி உயிர், ஆன்மா, உடல் கண்ணுக்குத் தெரியாமல் இணைக்கப்பட்டு உள்ளதோ அதே போலத் தான் இதுவும்!பிரபஞ்சத்தில் யாரும் தனியாக இல்லை…. இருக்கவும் முடியாது! எல்லா உயிர்களும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருக்கிறது. நமக்கு உணவு உற்பத்தி செய்கிறவர்கள் முதல் தட்டில் நமக்கு உணவு கொண்டு வருபவர்கள் வரை பலருடைய உழைப்பு மட்டுமல்ல…. இயற்கையும் நம் எல்லோருக்காகவும் இவ்வொரு கணமும் உழைத்துக்கொண்டு தான் இருக்கிறது.வாழ்வில் நமக்கு மட்டுமல்ல… பிறருக்காகவும் பயனுள்ள பணியை நாம் மேற்கொள்ளவேண்டும். நம் வெற்றியை மற்றவர்களும் தம் வெற்றியைப்போல் கொண்டாடினால், அது நாம் நன்றாக வாழ்ந்ததற்குச் சான்று!பொறாமை என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. நாம் உயர்ந்த நிலையை அடையும்போது நம் உறவினர்களும், பணிபுரியும் இடத்தில் சிலரும் பொறாமைப்படுவதுண்டு. அது சராசரி மனிதர்களின் இயல்பு.எல்லா செயலையும் நடத்திவைப்பது இறைவன்தான். எந்த ஒரு செயலிலும் நாம் ஒரு கருவி மட்டுமே என்று எண்ணி வாழ்பவர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. நம்முடைய தொடர் வெற்றி காலவெள்ளத்தில் பொறாமைப்படுபவர்களை அடித்துச்சென்றுவிடும்.போனது போகட்டும். இனியாவது, ஒருவரின் வளர்ச்சி, வெற்றி, வசதி ஏதாவது ஒன்றைக்கண்டு பொறாமைப்படுவதைத் தவிர்ப்போம். நமக்காக மட்டுமல்லாமல் பிறருக்காகவும் நல்ல காரியங்களைச் செய்ய பிள்ளையார் சுழி போடுவோம். அப்படிச் செய்தால் அதன் மகிழ்ச்சியே தனிதான். செய்பவர்களுக்குத்தான் அது புரியும்! பக்தியுடன் ஆசிரியர்