ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏற்றம் இறக்கம் சகஜம்தான். இரவும் பகலும் மாறிமாறி வருவதைப்போல்தான், பள்ளமும் மேடும் இருப்பதைப்போல்தான் அதுவும். நாம் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்க வாழ்க்கையில் அது மிக அவசியம்.வாழ்க்கை ஏற்றமாகப் போய்க்கொண்டிருக்க பின் ஒரு தடங்கல் அல்லது இறக்கம் வருவது இயல்பே. இந்த மாயச் சுழலில் இருந்து தப்பித்து வந்தவர்கள் யாருமில்லை எனலாம்.எந்த ஒன்று உங்களுக்குத் தடையை ஏற்படுத்தியதோ அதுவே பின்னர் ஏற்றத்தையும் அளிக்கும். அதையே சிலர், ’’நேரம் நல்லா இருந்தா எல்லாமே நல்லா நடக்கும்’’ என்பார்கள். சற்று உற்று நோக்கினால் அதை ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அறியமுடியும்.எனது திறமை, ஆற்றலால் அது கிடைத்தது என்று சிலர் நினைக்கலாம். யாருக்குத்தான் திறமையும் ஆற்றலும் இல்லாமல் இல்லை. எல்லோரிடத்திலும் ஏதாவது ஒரு திறமையும் ஆற்றலும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அதை வெளிப்படுத்த சரியான வாய்ப்புதான் அனைவருக்கும் கிடைப்பதில்லை. கிடைத்தாலும், அதை அவர்கள் தான் செய்தார்கள் என்று எடுத்துச்சொல்லுவதற்கு யாரும் இருப்பதில்லை. அதனாலேயே உரிய அங்கீகாரமும் அதற்கு ஏற்ற மதிப்பும் பலருக்குக் கிடைப்பதில்லை..எப்போது அதெல்லாம் ஒருவருக்குக் கிடைக்கிறதோ அப்போதுதான் அவர் சமுதாயத்தில் அந்தஸ்தையும் பொருளாதார வளர்ச்சியையும் பெறமுடியும். அது கிடைக்காமல்தான் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை.அவர்கள், ’’இதெல்லாம் வேண்டாம். இருப்பதே போதும்; அமைதியான வாழ்வு அமைவதே ஆனந்தம்’’ என்ற எண்ணத்தில் இருப்பவர்கள். அமைதியான நதியில்தான் ஓடம் நல்லபடியாகச் செல்லும். ஆர்ப்பரிக்கும் நதியில் அதைச் செலுத்துவது சிரமம் என்ற கருத்தை உடையவர்கள்.சிலருக்கு மட்டும் நல்ல நல்ல வாய்ப்பு கிடைக்கிறது. எனக்கு ஏன் அது கைநழுவிப்போகிறது? என்ற கேள்வியை சிலர் எழுப்புகிறார்கள்.எல்லாமே நல்லபடியாக அமைய வேண்டுமென்றால் ஒரே வழி, இறைவனிடம் சரணாகதி அடைவதுதான். அதைத் தவிர வேறு வழி இல்லை. திறமை, ஆற்றல் உள்ளிட்ட அனைத்தும் அவன் கொடுத்ததுதான். அதேபோல அந்த நல்ல வாய்ப்பையும் அதற்குரிய அங்கீகாரத்தையும் கிடைக்கச் செய்வதும் அவன் செயலே! பக்தியுடன் ஆசிரியர்