Bakthi Magazine
குறையில்லா வாழ்வருளும் குடவரசி!
கொள்ளிட நதிக்கரையில் கீரங்குடி என்ற கிராமத்தில் கோயில் கொண்டு, அப்பகுதியில் வசிக்கும் பல குடும்பங்களுக்குக் குலதெய்வமாக விளங்குகிறாள், குடவரசி அம்மன். ஆண்டுக்கு ஒருமுறை அத்தெய்வத்துக்குப் படையலிட்டு வழிபடுவதை குலதெய்வ மக்கள் இன்றும் தொடர்ந்து வருகிறார்கள். சிதலவதி, கடேஸ்வரி, ரேணுகாதேவி என்றும் இந்த அன்னை அழைக்கப்படுகிறாள்.