- வெ. கணேசன் வற்றாத ஜீவநதியான தாமிரபரணியின் கரையில் பழமை மிக்கத் தலமாக விளங்குவது, கோபால சமுத்திரம். ஒரு மகா சமுத்திரத்தில் எவ்வாறு வற்றாத, குறையாத நீர்வளம் செழித்து இருக்கிறதோ, அந்த அளவுக்கு நீர்வளமிக்க ஊராக விளங்குவதால் இதற்கு கோபால சமுத்திரம் என்கின்ற பெயர் வந்திருக்கலாமென நம்பப்படுகிறது..இத்தலத்தில் கிழக்குப் பார்த்த வண்ணம் வெங்கடாசலபதி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கட்டப்பட்டதன் பின்னணியில் ஒரு சம்பவம் உள்ளது. பல நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதியை ஆட்சி செய்த மன்னருக்கு புத்திர பாக்கியம் கிட்டவில்லை. அந்த வேளையில் திருப்பதி வேங்கடமுடையான் அவரது கனவில் தோன்றி, தனக்கு நதிக்கரையில் ஓர் ஆலயம் எழுப்பினால் அழகிய, அறிவாளியான வாரிசு பிறக்கும் எனச் சொல்லி மறைந்தார். இந்த அதிசயக் கனவை பொழுது விடிந்ததும் அரண்மனையில் உள்ள எல்லோரிடமும் சொல்லி மகிழ்ந்த மன்னர் உடனடியாக பெருமாளுக்கு கோயில் கட்டும் திருப்பணியையும் துவங்கினார். கோயில் வேலை நிறைவடைந்ததைத் தொடர்ந்து மகாசம்ப்ரோக்ஷணமும் சிறப்பாக நடைபெற்றது. சொல்லி வைத்தாற்போல் அதற்கடுத்த சில நாட்களில் அரசி தாய்மைப்பேற்றை அடைந்தார். மறுவருடமே ஆண் மகவு பிறந்தது. இந்தச் சம்பவத்தை எடுத்துச் சொல்லும் விதமாக மகாமண்டபத் தூண்களில் அரசன், அரசி, இளவரசன் ஆகியோரது திருவுருவச் சிலைகள் அமைந்துள்ளன..இதே சம்பவத்தைப் போல் இங்கு வசித்து வந்த பக்தர் ஒருவருக்கும் நடந்ததுதான் ஆச்சர்யம். ஆம்! ஒருநாள் அவரது கனவில் தோன்றிய பெருமாள் தனது கோயிலுக்கு ஆதிசேஷன் மற்றும் திருவாச்சி ஆகியவற்றை உபயமாகச் செய்தால், கூடிய விரைவில் அவரது வீட்டில் மழலைச் சத்தம் ஒலிக்கும் என்று அசரீரியாகச் சொல்லி மறைந்தார். இதே விஷயத்தை கோயில் அர்ச்சகர் கனவிலும் பெருமாள் சொல்லிவிட்டார். வழக்கம்போல் அதிகாலை வேளையில் இருவரும் ஆற்றில் குளிக்கப் போகும்போது முதல் நாள் தோன்றிய கனவைப் பற்றி பகிர்ந்துகொண்டனர். இதுவும் அந்த பரந்தாமனின் கருணையே என எண்ணி வியந்து பெருமாளின் கட்டளையை அந்த பக்தர் நிறைவேற்றினார். சொல்லி வைத்தது மாதிரி அடுத்த வருடமே அவருக்கு புத்திர பாக்கியம் அமைந்தது. இந்த பெருமாளை குலதெய்வமாகவும் பலர் வழிபடுகின்றனர். அவர்கள் வெளியூரில் இருந்தாலும் வருடத்திற்கு ஒருமுறையாவது இக்கோயிலுக்கு வந்து பெருமாளை வழிபட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.. பல ஆண்டுகளுக்கு முன்பு கோயில் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அறநிலையத் துறையினர் கோயிலின் பிரதான வாசலில் பெரிய அளவிலான கேட் ஒன்றை அமைக்க முடிவு செய்தனர். இந்நிலையில் வெளியூர் சேவார்த்தி ஒருவர் இங்கு வந்திருந்தார். பெருமாளை மனதார சேவித்து முடித்தவர் வாசல் அருகே உள்ள ஆஸ்தான மண்டபத்தில் வந்து உட்கார்ந்தார். அப்போது, எதேச்சையாக வாசல் பக்கமே சற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவசரமாக எழுந்தவர் அர்ச்சகரிடம் சென்று வாசலுக்குப் பொருத்தமாக பெரிய கதவு ஒன்றை தான் செய்து தர விரும்புவதாகச் சொன்னார். அவரது விருப்பப்படியே மறுவாரமே வாசல் கதவு பொருத்தப்பட்டு அந்த வேலை நிறைவடைந்தது. ஆக, இந்த தலத்தைப் பொருத்தமட்டில் தனக்குத் தேவையான ஒவ்வொன்றையும் தனது சேவார்த்திகளிடமே இந்த நாராயணன் உணர்த்திப் பெற்றுக்கொள்வது ஆச்சரியமான விஷயமாக நடந்து வருகிறது. சாலக்கோபுர வாசலுடன் நான்கு பக்கமும் உயர்ந்த மதிலுடன் காணப்படுகிறது கோயில். ஆஸ்தான மண்டபம் தாண்டியதும் உள்சுற்றை அடையலாம். கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் என்ற அமைப்பில் அழகிய கலைநயத்துடன் கல்கட்டுமானமாக ஆலயம் அமைந்துள்ளது. உள்சுற்று முழுவதும் திருமாளிகை அமைப்பில் மண்டபமாகக் கட்டியுள்ளனர். அர்த்த மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசப் பெருமாள் காட்சியருள்கிறார்..கருவறை மூலவராக வெங்கடாசலபதிப் பெருமாள் சாட்சாத் திருமலை வேங்கடவன் போலவே சேவை சாதிக்கிறார். இவரை வழிபட்டால் திருப்பதி சென்று வந்த பலன் கிட்டுவதாகச் சொல்கிறார்கள். மூலவருக்குத் தினமும் திருமஞ்சனமும், அலங்காரமும் நடைபெறுகிறது. மூலவர் விமானம் வேசர வடிவில் உள்ளது. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, நரசிம்மர், பிரம்மா ஆகியோர் புடைப்புச் சிற்பங்களாக உள்ளனர். வடக்குச் சுற்றில் சேனை முதலி, நம்மாழ்வார், மணவாள மாமுனிகள், இராமானுஜர் ஆகியோர் விக்ரகங்கள் உள்ளன. இதன் எதிரே உள்ள தூணில் சிறிய திருவடியின் புடைப்புச் சிற்பம் உள்ளது. இவரது மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிது. இதை மெய்ப்பிப்பதுபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆம்! இந்தச் சிற்பத்தை சிற்பி உருவாக்கி முடித்த தருணத்தில் தத்ரூபமாக உயிரோட்டத்துடன் எழுந்து வருவது மாதிரி தோன்றியது. இதனால் அதிர்ந்துபோன சிற்பி தாமதிக்காமல் அதன் வாலில் உளியால் ஒரு முறை அடித்தார். அடுத்த கணம் அது மறுபடியும் சிற்பமாக மாறியதாம்..அதுபோல ஆஸ்தான மண்டபத் தூணில் சந்திரனின் புடைப்புச் சிற்பம் அழகாக உள்ளது. கிருஷ்ண ஜெயந்தி அன்று நிலவின் கிரணங்கள் பரிபூரணமாக இதன் மீது படுமாம். அந்த வேளையில் பெருமாளுக்கு தீபாராதனை முடித்து இந்த சந்திரனுக்கும் காட்டப்படுவது விசேஷமாகும். ஆந்திர மாநிலம் அகோபில மட 46 வது பட்டம் ஸ்ரீவண் சடகோப ஸ்ரீரங்கநாத யதீந்திர மகா தேசிக சுவாமிகள், சிருங்கேரி விச சேகர பாரதி தீர்த்த சுவாமிகள் உள்ளிட்டோர் இத்தலப்பெருமாளை மங்களா சாசனம் செய்துள்ளனர். மாங்கல்ய யோகம், புத்திர பாக்கியம் கிட்ட, நாள்பட்ட கோர்ட் வழக்குகளில் நல்ல தீர்ப்பு அமைய ஜாதகத்தை பெருமாள் முன்பு வைத்து சேவித்து நீராஞ்சன பூஜை செய்கின்றனர். வெளிச்சுற்று நந்தவனத்தில் பூக்கும் வாசமலர்களும், இளநீரும் நித்ய பூஜைக்கு பயன்படுத்தப்படுகிறது. தினமும் இரு கால பூஜை நடைபெறுகிறது. சித்திரை விஷு, ஆனி திருவோண தினத்தில் வருஷாபிசேகம், புரட்டாசி சனிக்கிழமைகளில் கருட சேவை, ஐப்பசி விஷு கருட சேவை, திருக்கார்த்திகை, மார்கழி மாதம் திருப்பள்ளியெழுச்சி, வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி, தைப்பொங்கல், மாசி மகத்தில் இங்குள்ள ரிஷப தீர்த்தக் கட்டத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். ஆண்டுக்கு இருமுறை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை இப்பெருமாளுக்கு சார்த்துவது வழக்கம்.. வாழ்வில் எதிர்ப்படும் பிரச்னைகள் எதுவானாலும் அதிலிருந்து எளிதாக விடுபட்டு வளமாக, நிம்மதியாக வாழ்வதற்கு அவசியம் ஒருமுறை குடும்பத்தோடு இத்தலத்திற்கு வந்து சேவித்துச் செல்லலாமே!எங்கே இருக்கு?திருநெல்வேலி டவுன் கணேஷ் தியேட்டர் வாசலில் இருந்து மினி பஸ் வசதி உள்ளது. கோயில் வாசலிலேயே இறங்கிக்கொள்ளலாம். பயண தூரம் 10 கி.மீ. சுத்தமல்லி விலக்கு நிறுத்தத்திலிருந்தும், பிராஞ்சேரியிலிருந்தும் ஆட்டோவில் பயணிக்கலாம். பயண தூரம் 3 கி.மீ. தரிசன நேரம்:காலை 7.45 – 9.45; மாலை 6 – இரவு 7.45.