Bakthi Magazine
கூந்தலூர் : நவகிரக தோஷம் போக்கும் நாதரூபன்!
இப்பூவுலகின் மொத்த நிலப்பகுதியும் ஆதியில் ஜம்பூத்வீபம் என்று அழைக்கப்பட்டுள்ளது. அதாவது நாவல் தீவு. அவ்வகையில் சிறப்புப் பெற்ற நாவல் மரக்காடாக இருந்த இடத்தில் ஈசன் தோன்றி உலகோரைக் காத்ததால் இத்தல இறைவன் ஜம்புகாரண்யேஸ்வரர் என்று அழைக்கப்படுகின்றார். இங்கு முதன்மை தெய்வம் சிவனாக இருந்தாலும், சிவகுமாரனுக்கு சிறப்புமிக்க சன்னதி அமைந்துள்ளதால் இது முருகன் தலமாகவே போற்றப்படுகிறது.