- எஸ். இராமதாஸ் ஓர் ஏழைப் பெண்மணி, அவளிடம் மண் பிள்ளையார் வாங்கக்கூட காசில்லை. நைவேத்யம் செய்யவும் ஒரு கட்டி வெல்லம் தவிர வேறெதுவும் இல்லை. விநாயகர் சதுர்த்தியை எப்படிக் கொண்டாடுவது என்று வருந்தினாள். கவலையுடன் படுத்தாள். கனவில் கணேசன் தோன்றினான்."அம்மையே வருந்தாதே. உன்னிடம் உள்ள வெல்லக்கட்டியின் ஒரு பகுதியை பிள்ளையாராய்ப் பிடித்து வை. மிகுதியைக் கிள்ளி எடுத்து அதையே நைவேத்தியம் செய்துவிடு. நீ கொழுக்கட்டை செய்தாலும் அதனுள் இந்த வெல்லம் தானே இனிக்கும்?" என்று கூறி மறைந்தார். அந்தப் பெண்மணியும் அவ்வாறே செய்து மகிழ்ந்தாள்.இப்படி அவரவர் விரும்பும் வண்ணமெல்லாம் ஓடிவரும் குழந்தையாய் இருப்பதால்தான் அவரை எல்லோரும் பிள்ளையார் என்றனர். எந்தத் தெய்வமும் நம்மிடம் விரும்புவது பக்தியைத்தான்; பொருளையல்ல!.கடையனும் கடைத்தேற :நறுமண மலர்களைத் தேட வேண்டாம். எருக்கம்பூ மாலையும், அருகம்புல்லும் போதும். ஏழைக்கு எளியவன். சடையனும் கடைத்தேற அருளும் வள்ளல் விநாயகர். இடையில் ஆடைகூட அணியாத அரசமரத்தடி பிள்ளையாரும் உண்டு!விக்னம் :விநாயகரை வழிபடாமல் தொடங்கும் எந்தக் காரியமும் விக்னம் ஆகிவிடும். தடை (விக்னம்) நீக்கும் தலைவன். ஆகவே, விக்னேஸ்வரன் என்ற பெயர். திரிபுராந்தக அசுரர்களை வதம் செய்யப் புறப்பட்டார் சிவன். கணபதியை வழிபட மறந்துவிட்டார். அதனால் அவர் ஏறிச் சென்ற தேரின் அச்சு முறிந்தது. பின்பு தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கர்ணமும் போட்டார். தேரோடியது. வெற்றியும் பெற்றார். (தோப்புக்கர்ணம் ஒரு யோகாசனமும்கூட. அறிவியல்படி உடல் நலமுற ஏற்றது) தந்தையே ஆனாலும் விதிமுறை மாறக் கூடாது. பிரணவ வடிவம் :பரிபூரணனாகிய இறைவனின் மூச்சுக்காற்றே வேதம். அந்த வேதத்தின் விழுப்பொருளே பிரணவம் என்னும் மூலமந்திரம். எனவே ஓங்காரம் 'ஓம்' என்ற பிரணவ வடிவமே விநாயகர் உருவமாகும். ஒரு காலை மடித்து துதிக்கையை வளைத்து விநாயகர் அமர்ந்திருக்கும் நிலையை கற்பனைச் செய்தால் ஓங்காரம் புலப்படும். விநாயகர் வடிவம் பரிபூரணமானது. ஆகவேதான் அவருக்குப் படைக்கும் கொழுக்கட்டையுள் பூரணம் வைக்கப்படுகிறது. அந்தப் பூரணமும் இனிப்பு, விநாயகர் உருவமும் இனிப்பு. யானையைக் கண்டால் குழந்தைகள் மகிழும்.சனீஸ்வரனும் விக்னேஸ்வரனும் :சனிபகவான் கோள்களில் (கிரகங்களில்) ஒருவர். இவருக்கும் ஈஸ்வர பட்டம் உண்டு. எல்லோரையும் ஏழரை ஆண்டுகள் பிடிக்கவேண்டுமென்பது அவரது கடமை. ஆனால் சனி என்றால் தீமைதான் செய்வார் என்பது தவறான கருத்து. ஏழரை ஆண்டில் நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு. தன் கடமையைச் செய்ய விநாயகரை அணுகினார் சனி. "நாளைக்கு வரவும்" என்று எழுதி வைத்தே ஏமாற்றிவிட்டார் விநாயகர். இப்படி ஒரு கதை. அது மட்டுமல்ல, "என்னை வழிபடுபவர்களை அதிகம் தொல்லைப்படுத்தக்கூடாது” என்று சனியிடம் வாக்குறுதியும் பெற்றுவிட்டார். அதனால்தான் விநாயகரை வழிபட்டால் சனியின் கெடுதல் குறையும் என்பர் சோதிடர்கள்.