தீப்பொறி எனும் செந்தணலிலிருந்து உருப்பெற்றவர் என்பதால் பழந்தமிழ் இலக்கி யங்கள் அழகன் முருகனை சேயோன் எனக் குறிப்பிடுகின்றன. 27 நட்சத்திரங்களில் 16-ஆவதாக வரும் விசாகம் நட்சத்திரம் ஞானத்துக்கு உரியதும், வியாழபகவானின் ஆதிக்கத்தில் இருப்பதுமாகும். சில நட்சத்திரங்கள் இறைவனுக்கு உகந்தவையாகவும், அத்தெய்வங்கள் அவதாரமெடுத்த நட்சத்திரங்களாகவும் கருதப்படுகின்றன.அப்படி வைகாசி மாதம் பௌர்ணமியில் வரும் விசாக நட்சத்திரம் கந்தனுக்கு உகந்ததாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் முருகப்பெருமான் அவதரித்ததால் விசாகன் என்று அறியப்படுகிறார் (வி = பறவை, மயில், சாகன் = பயணம்). மயில்மீது பயணம் செய்யக்கூடியவர் எனப் பொருள்படும். அந்நாளில் வடிவேலனை ஆராதிப்பதன் மூலம் பதினாறு பேறுகளையும் பெறலாம் என்பது அசையாத நம்பிக்கையாகும்.அறுவரும் ஒருவரான கார்த்திகை மாதம் கார்த்திகை தினம், அன்னையிடம் வேல் வாங்கிய தைப்பூசநாள், அசுரனை வதைத்து ஆட்கொண்ட ஐப்பசி சஷ்டி நாள், வள்ளியைத் திருமணம்புரிந்த தினமான பங்குனி உத்திரம் ஆகியவையும் வளம்பெருக்கும் நாட்களாகவே கருதப்படுகின்றன. முருகப்பெருமானுக்கு எத்தனை விழாக்கள் எடுத்தாலும், வைகாசி விசாகவிழாதான் வளர்ச்சியைக் கொடுக்கும் விழாவாக அமைகின்றது.முருகன் அருள் பெற்றவர்களில் முதன்மையானவர் குறுமுனி அகத்தியர். அவர் பொதிகைமலையில் கந்தனிடம் உபதேசம் பெற்று அகத்தியம் என்ற இலக்கண நூலை இயற்றினார்.பத்துப்பாட்டு நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது திருமுருகாற்றுப்படை. பன்னிரு திருமுறை பகுப்பில் இது பதினோராவது திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது. கடைச்சங்கப் புலவரான நக்கீரர் திருப்பரங்குன்றத்தில் தீயசக்திகளிடம் சிக்கித் தவித்தபோது முருகப்பெருமான் அவரைக் காப்பாற்றியருள, அப்போது முருகன் மீது பாடிய ஆற்றுப்படை நூல்தான் திருமுருகாற்றுப்படை. முருகனை வணங்கிப் பிரார்த்தனை செய்தால், தன் துன்பங்கள் அகன்றது போலவே, பிறரது துன்பங்களும் அகலும் என்பது அவர் வாழ்க்கை காட்டும் செய்தியாகும்..'நீரின்றி அமையாது உலகு' என்பது வள்ளுவன் வாக்கு. தண்ணீர் இப்பூமியின் அமு தம் என்பது சான்றோர் கருத்து. அந்த அளவுக்கு நீர் அவசியமானது. 'ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்' என்று ஓடிப்பாயும் நதியின் தேவையைக் கூறுகையில், நிலைத்து நிற்கும் குளத்து நீர் பாழ்படுவதை தவசீலர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். தண்ணீரை அசுத்தம் செய்து மீன்களாக மாறும்படி சாபம் பெற்ற முனிவரின் புத்திரர்களுக்குச் சாபவிமோசனம் கிடைத்தது இந்நாளில் தான். பத்து நாட்கள் நடைபெறும் வைகாசி விசாக திருநாளின் முக்கிய அம்சமாக மீன்களாக மாறிய ரிஷி புத்திரர்களுக்குச் சாபவிமோசனம் தரும் நிகழ்ச்சி திருச்செந்தூரில் நடைபெறுகிறது.பராசர முனிவருக்குச் சுட்டித்தனம் செய்வதில் ஒருவருக்கொருவர் சற்றும் சளைக்காத கெட்டிக்கார மகன்கள் ஆறு பேர் இருந்தனர். ஒருநாள் குளத்தில் நீராடும்போது தண்ணீரை அசுத்தம் செய்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். இதனால் அந்த நீரில் வாழ்ந்து வந்த மீன்கள், தவளைகள் சொல்லவண்ணா துயரம் அடைந்தன. அதனைக் கண்ட பராசர முனிவர், நீரை இப்படி அசுத்தப்படுத்தக் கூடாது; சிவபெருமானாக நினைத்து நீரை வழிபட வேண்டும். நீங்கள் நீராடியது போதும் வெளியே வாருங்கள்'' என்று கட்டளையிட்டார்..அப்பா சொல்லைக் கேட்காத பிள்ளைகள் நீரில் கும்மாளம் போட்டார்கள். இதனால் பல மீன்கள் இறந்தன. அதனைப் பார்த்த முனிவர், கோபம்கொண்டு குழந்தைகள் ஆறு பேரையும், 'மீன்களாக மாறக்கடவது' என்று சாபமிட்டார். உடனே ஆறு பிள்ளைகளும் ஆறு மீன்களாக மாறினர். தவறுக்கு வருந்திய அவர்கள் சாபவிமோசனம் கிடைக்காதா என்று கேட்டதற்கு, அன்னை பார்வதிதேவி அருளால் விமோசனம் கிடைக்கும் என்றார். மீன்களாக மாறிய ஆறு பேரும் அந்த நீரில் நெடுங்காலம் வாழ்ந்து வந்தனர். ஒருசமயம் சிவலோகத்தில் பார்வதிதேவி, முருகப்பெருமானுக்கு ஞானப்பாலை ஒரு தங்கக் கிண்ணத்தில் வைத்து ஊட்டும்போது அதிலிருந்து ஒரு சொட்டு பூலோகத்தில் பராசர முனிவரின் குழந்தைகள் மீன்களாக வாழும் குளத்தில் விழுந்தது. அதனை அந்த மீன்கள் பருகியதால் ஆறு பேரும் முனிவர்களாக மாறினார்கள்.ஆறுமுனிவர்களும் சிவபெருமானுக்கு நன்றி செலுத்தும் விதமாக மீண்டும் வழிபட்டபோது, "நீங்கள் ஆறு பேரும் திருச்செந்தூர் சென்று தவம் செய்யுங்கள். அங்கு முருகக் கடவுள் அருள்புரிவார்'' என்று அசரீரி ஒலித்தது.அதன்படி அனைவரும் திருச்செந்தூர் சென்று தவம் மேற்கொண்டனர். வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்துடன்கூடிய நிறைந்த பௌர்ணமி நாளில் சேயோனின் அருள் கிடைத்தது. சிவனின் அருளால் ஆறு முனிவர்கள் சாபம் நீங்க, முருகப்பெருமான் அருள்புரிந்த நாள் வைகாசி விசாகம் ஆகும். அன்றைய தினம் முன்வினைப்பயனால் துன்பப்படுபவர்கள் முருகப்பெருமானை வழிபட, துன்பம் நீங்கி இன்பம் பெறுவர் என்று புராணங்கள் கூறுகின்றன. பராசரரின் மகன்களுக்கு திருச்செந்தூரில் முருகப்பெருமான் காட்சிகொடுத்து அருளியதால் இந்நிகழ்வு வைகாசி விசாகத்தின்போது 10 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.இந்த திருநாளில் திருச்செந்தூர் கோயில் வசந்தமண்டபத்தில் உள்ள நீர்த்தொட்டி யில் ஆறு மீன் பொம்மைகளை இடுகின்றனர். முருகனின் வாயிலிருந்து சிந்தியப் பாலைக் குடித்த அந்த மீன்கள் சாபவிமோசனம் பெற்ற பராசரர் முனிகுமாரர்களை நினைவுபடுத்தும் விதமாக ஆறு முனிவர்களின் உருவ பொம்மை வைத்து முருகன் சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.இந்த விசேஷ தினத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய திருக்கோயிலில், கருவறை யில் தண்ணீர் நிற்கும்படி வைத்து இறைவனுக்கு உஷ்ண சாந்தி உற்சவம் எனும் வெப்பம் தணிக்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம். இந்த நாளில் இறைவனுக்கு சிறுபருப்புப் பாயசம், அப்பம், நீர்மோர் முதலியவை நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.முருகப்பெருமானுக்கு செந்நிற மலர்கள் உகந்தவை. அரளி, செம்பருத்தி முதலான மலர்களைக் கொண்டு வேலவனை அலங்கரிக்கலாம். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யலாம். முருகப்பெருமானுக்கு எத்தனை விழாக்கள் எடுத்தாலும் வைகாசி விசாக விழாதான் வளர்ச்சியைக் கொடுக்கும் விழாவாக அமைகின்றது. விசாக நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை தரிசித்தால் வெற்றி கிட்டும்! வேலவன் அருளால் விரும்பியது நடக்கும்! எனவேதான் திருச்செந்தூர் முதல் தேசமெங்கும் முருகனது ஆலயங்களில் இந்த விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள். விசாகத் திருநாளில் வேலவனின் சன்னதி சென்று வழிபட்டால் வேண்டிய வரம் கிடைக்கும்..கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்குபவர் கந்தன். அவரது வேலை வணங்குவதே வேலையாகக் கொள்ள வேண்டிய நாள் விசாகத் திருநாளாகும். இன்றைய தினம் பன்னிரண்டு கைகள் கொண்ட வேலவனை மனதில் இருத்தி விரதமிருந்து வழிபட்டால் சங்கடங்கள், இடையூறு சக்திகள் விலகும். லட்சியங்கள் நிறைவேறும். இந்த விசாகத் திருநாளில் முதலில் விநாயகப்பெருமானைத் தொழுது, அருகில் உள்ள முருகன் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வரலாம். கந்தசஷ்டி கவசம், திருப்புகழ் முதலிய முருகன் போற்றி தோத்திரங்களைப் படிக்கலாம்.வெயில் சுட்டெரிக்கும் கோடை காலத்தில் அதன் தாக்கத்தைச் சற்றேனும் குறைக்க உபயோகமாகும் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர்சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமணப்பேறு கிட்டும். குழந்தைப்பேறும் உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். இந்த விரதம் இருப்பவர்களுக்கு ஆபத்துகள் அகலும். அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறுவர் என்பது நம்பிக்கை.வீட்டில் விளக்கேற்றி முருகப்பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கல் அல்லது எலு மிச்சை சாதம் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்யுங்கள். முடிந்தால், இயலாதவர்களுக்கு எலுமிச்சை சாதம் வழங்குங்கள். ஞானகுருவான முருகப்பெருமானை அவனுக்கு உகந்த வைகாசி விசாக நட்சத்திர நாளில் வழிபட்டால், வாழ்வில் அனைத்து வளங்களையும் வாரித்தருவார். கடன் உள்ளிட்ட கவலைகளில் இருந்தும், வழக்கு உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்தும் நம்மை விடுவித்துக் காப்பார்.