-வி.பி. ஆலாலசுந்தரம்பொதுவாக ஆதீனங்கள் என்றால் சமயம் சார்ந்த பணிகளில் மட்டுமே தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வர். ஆனால் கோவைக்கு அருகே அமைந்திருக்கும் கௌமார மடாலயம் மற்ற ஆதீனங்களில் இருந்து மாறுபட்டது. 1987 ஆம் ஆண்டு உலக நலனுக்காக 108 ஆண் யானைகள் பங்கேற்க 108 வேள்வி குண்டங்களை அமைத்து இவர்கள் நடத்திய பூஜை புகழ் பெற்றது..இந்த மடாலயம் சார்பில் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் கற்பித்தலுடன் பேச்சாற்றலை வளர்க்கவும், கவிதை இயற்றவும், வேத பாடல்களைப் படித்து பாராயணம் செய்யவும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.சமீபத்தில் நடந்த புதிய நாடாளுமன்றம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி அவர்கள் முன்பு தமிழகத்தைச் சார்ந்த ஆதீனங்கள் மற்றும் ஓதுவா மூர்த்திகள் தேவாரம், திருவாசகம், கோளறு பதிகம் பாடல்களைப் பாடினார்கள். அதில் அரசு விருந்தினராகக் கலந்துகொண்ட உடுமலைப்பேட்டையைச் சார்ந்த உமா நந்தினி என்பவர், கௌமார மடாலயப் பள்ளியில் படித்தபோது அளித்த பயிற்சியும், ஊக்கமும்தான் இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு முக்கியக் காரணம் என்றும்; இதை திருமுறைக்குக் கிடைத்த பெருமையாகக் கருதுவதாகவும் கூறியுள்ளார்.இப்படி ஆன்மிகத்தை வளர்க்கவும், பக்தி இலக்கியத்தைப் பரப்பவும், தமிழை முன்னிலைப்படுத்தியும் சேவையாற்றி வரும் கௌமார மடாலயம், சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் அவர்களை நேரில் சந்தித்து உரையாடினோம்..நமது ஆதீனத்தைப் பற்றியும், அதன் கொள்கை, கோட்பாடுகள் பற்றியும் சுருக்கமாகச் சொல்லுங்கள்.கோவை மாவட்டத்திலுள்ள கௌமார மடாலயத்தினுடைய ஆதி குரு முதல்வர் திருப்பெருந்திரு. இராமானந்த சுவாமிகள். அவர் 1890 ஆம் ஆண்டு சரவணம்பட்டிக்கும் சின்னவேடன்பட்டிக்கும் இடையிலே உள்ள தன்னுடைய பூர்வாசிரம இடத்தில் கௌமார மடாலயத்தைத் துவக்கி வைத்து முருகப்பெருமானுக்கும் விநாயகப்பெருமானுக்கும் தனித்தனியான சன்னதிகளைத் தோற்றுவித்தார். அவருடைய குருநாதர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் மிகப்பெரிய கவிஞர். 50,000 பாடல்களைப் பாடி இருக்கின்றார்கள். அவர்களை 1890 ஆம் ஆண்டு பழநியம்பதியிலே சந்தித்து அவர்களிடம் உபதேசம் பெற்றுக் கொண்டார்.கௌமார கங்கணத்தை அணிந்துகொண்டு கொல்லாமை, புலால் மறுத்தல் என்ற கோட்பாட்டோடு இருப்பது கௌமார நெறியினுடைய தலையாய சித்தாந்தமாகும்.கௌமாரம் என்பது முருகப்பெருமானை முழுமுதற் கடவுளாகக் கொள்ளும் வழிபாடு. ஆனால் நமது ஆதீனத்தில் சௌரம், சைவம், வைணவம், கணாபத்யம், சாக்தம், கௌமாரம் என ஆறு சமய கோவில்கள் உள்ளன. இது ஏன் ? திருமடத்தைத் தோற்றுவித்த தவத்திரு. இராமானந்த சுவாமிகளின் குருநாதர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அறு சமயத்தையும் முருகனுடைய வடிவமாகப் பார்த்தவர். அவர்களுடைய குருநாதராகப் போற்றப்படுகின்ற அருணகிரிநாதர், “அறு சமய சாஸ்திர பொருளோனே’’ என திருப்புகழில் பாடியுள்ளார். அந்த அடிப்படையிலே இந்த ஆறு சமயங்களில் பேதம் இல்லை என்பது வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளுடைய கோட்பாடு.வாரத்தில் ஏழு நாட்களும் 7 வழிபாட்டுக்குரியதாகச் சொல்கின்றார். ஞாயிறு பரிதிக்குரியது. திங்கள் சிவபெருமானுக்கான சைவத்திற்குரியது. செவ்வாய் சாக்தத்திற்குரியது. புதன் வைணவத்திற்குரியது. வியாழன் காணபத்யம் என்று சொல்லப்படுகின்ற கணபதிக்குரியது. வெள்ளி முருகப்பெருமானுக்குரிய கௌமாரத்திற்குரியது. சனிக்கிழமை பொது என்பதாக குருநாதருக்குரிய வழிபாடாக வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் சொல்ல, அந்தக் கோட்பாட்டின் அடிப்படையிலே கௌமார மடாலயத்தில் அறுசமயத்திற்கும் தனித்தனியான கோயில்கள் அமைந்திருப்பது சிறப்பாகும்..நமது ஆதீனத்தின் முக்கியப் பணிகள் என்னென்ன?சமயப் பணி, திருமுறைப் பணி, திருப்புகழ் அருட்பணி, கல்விப் பணி, சமுதாயப் பணிகளைக் கூறலாம். குறிப்பாக குழந்தைகளுக்குத் திருமுறைகளைக் கற்றுக்கொடுத்து திருமுறை வழியிலேயே சமய வழிபாடுகள் நடக்க வேண்டும் என எண்ணிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதுபோல் 60 ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பகுதியில் ஒரு பள்ளியை உருவாக்கியவர்கள் நமது மூன்றாம் குரு மகா சன்னிதானங்கள். இன்று வரை அந்தப் பள்ளியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று சென்றிருக்கின்றார்கள். பொருளாதாரத்தில் பின் தங்கிய குழந்தைகளை இங்கேயே தங்க வைத்து அவர்களுக்கு உணவு, கல்வி என அனைத்தும் இலவசமாகத் தருகிறோம். அதுபோல திருமுறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கும், திருக்கோயிலில் அர்ச்சகர்களாக இருக்கும் நபர்களுக்கும் இங்கு பயிற்சி அளிக்கப்படுகின்றது. மேலும் அறக்கட்டளை மூலமாக பொருளாதாரத்தில் நலிவடைந்த குழந்தைகளுக்கு கல்வி உதவி செய்யப்படுகிறது. கூடவே மருத்துவ உதவியும் செய்யப்படுகின்றது. இதுபோல பல்வேறு உதவிகளை நமது திருமடம் செய்து வருகின்றது..மடாலயத்தின் சார்பாக இயங்கும் கல்வி நிறுவனங்கள் எவை?மடாலயத்தின் சார்பாக நான்குக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருவது தவத்திரு.இராமானந்த அடிகளார் உயர்நிலைப்பள்ளி; 45 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருவது தவத்திரு. கந்தசாமி சுவாமிகள் மெட்ரிக் பள்ளி. பன்னாட்டு உறைவிடப்பள்ளி என்று சொல்லப்படுகின்ற சர்வதேசப் பள்ளியும் இங்கு செயல்பட்டு வருகின்றது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான “கௌமாரம் பிரசாந்தி’’ சிறப்புப் பள்ளி. இப் பள்ளி தமிழகத்தில் உள்ள ஆதீனங்களில் நம்முடைய ஆதீனத்தில் மட்டும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். அது மட்டுமல்லாமல் பாடத்தில் உள்ள கல்வியை மட்டும் கற்றுக்கொடுக்காமல், குழந்தைகளுக்கு நன்னெறிப் பாடங்கள் புகட்ட வேண்டும் என்பதற்காக, அவர்களைச் சமயம் சார்ந்த அறவழியில் ஈடுபடுத்த வேண்டும் என்பதற்காக ஊடகப்பிரிவு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்குழந்தைகளை இணைய வழியிலேயே பேச வைப்பது, பாட வைப்பது என்ற முறையை நாம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே தோற்றுவித்தோம். பெருந்தொற்றுக் காலத்தில் இணைய வழியை அவர்கள் நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். அதன் விளைவாக இன்று இணையவழி மூலம் நம்முடைய குழந்தைகள் பல உரைகளை நிகழ்த்தி வருகின்றனர். குறிப்பாக மதி ராஜா என்ற மாணவன் இளம் வயதிலேயே திருப்புகழை அழகாகப் பாடுகின்ற ஆற்றலைப் பெற்றிருக்கிறார். பவதாரணி என்ற மாணவி நூற்றுக்கணக்கான உரைகளைச் சிறப்பாக நிகழ்த்தி இருக்கின்றார். உலகம் முழுவதும் அவரது உரை சென்று சேர்ந்திருக்கிறது. இன்னும் பல குழந்தைகள் திருப்புகழ், தேவாரங்களை எல்லாம் அழகான முறையிலே பாடுகின்ற ஆற்றலைப் பெற்றிருக்கின்றார்கள். ஆகவே கல்வி நிறுவனம் என்பது வெறும் மதிப்பெண்ணை மட்டும் பெறுகின்ற நிறுவனமாக இல்லாமல் சமய ஒழுக்கம், பண்பாடு, பெற்றோர்களை மதித்தல், அற நூல்களைக் கற்றுக் கொடுத்தல் என்கின்ற வகையில் நம் கல்வி நிறுவனம் செயலாற்றிக் கொண்டிருக்கிறது..மாநில முருக பக்தர்கள் அறக்கட்டளையின் தலைவர் பொறுப்பில் உள்ளீர்கள். அதனுடைய செயல்பாடுகள் பற்றிக் கூறுங்கள்?தமிழகத்தில் ஏராளமான முருக பக்தர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் விசேஷ நாட்களில் மாலை அணிந்து, பல்வேறு முருகன் திருத்தலங்களுக்குச் சென்றுவருகின்றார்கள். தனித்தனியாக ஆங்காங்கே முருக பக்தர்கள் பேரவைகளை வைத்தும் செயல்பட்டு வருகின்றார்கள். தமிழகத்தில் முருக பக்தியை ஒருங்கிணைத்து எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக மூன்றாவது குரு மகா சன்னிதானங்கள் சுந்தர சுவாமிகளுடைய காலத்தில் 1986 ஆம் ஆண்டு முருக பக்தர்கள் பேரவை என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. அதன் பின்பு 1992 ஆம் ஆண்டு முதலாவது மாநில முருக பக்தர்கள் மாநாடு பழநியம்பதியில் சிறப்பான முறையில் நடைபெற்றது. அதில் ஆயிரத்திற்கும் அதிகமான முருக பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். ஒவ்வொரு மாநாட்டின் போதும் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி அதை நடைமுறைப்படுத்த அரசை வலியுறுத்துகிறோம்.இந்த அமைப்பு நான்கு மாநில மாநாடுகளையும், பல மாவட்ட மாநாடுகளையும் நடத்தி இருக்கின்றது. அதன் மூலம் முருகன் கோவில்களில் நடைபெறுகின்ற திருப்பணிகள் குறித்தும், பக்தர்களுக்குச் செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் பற்றியும் அரசுக்கு எடுத்துச் சொல்லி இருக்கின்றோம். அதை அரசு ஏற்றுக்கொண்டு பல செயல்பாடுகளைச் செய்திருப்பது பாராட்டுதலுக்குரியது. குறிப்பாக தைப்பூசத்திற்கு விடுமுறை விடவேண்டும் என்று முதன் முதலாக முருக பக்தர்கள் பேரவை தான் கேட்டது. அதைச் சென்ற அரசு ஏற்று உடனடியாகச் செயல்படுத்தி இருக்கின்றார்கள். பழநிக்கு பாதயாத்திரையாகச் செல்பவர்களுக்கு தனிப்பாதை அமைக்க வேண்டும் என்று அரசை கேட்டுக்கொண்டோம். திண்டுக்கல்லில் இருந்து பழநிக்கு தனியாகப் பாதை அமைத்துக் கொடுத்திருக்கின்றார்கள். அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டோம். அதையும் அவர்கள் செய்து கொடுத்திருக்கின்றார்கள். இலவசமாக மிதியடிகள் பாதுகாப்பு நிலையம் வேண்டும் என்று கேட்டோம். அதையும் அரசு செய்து கொடுத்திருக்கின்றது. மருத்துவ உதவி மையம் வேண்டும் என்று கேட்டோம். அதையும் செய்திருக்கிறது அரசு. இப்படி பல்வேறு கோரிக்கைகள் அரசுக்கு முன் வைக்கப்பட்டு, அரசு அதைச் செயல்படுத்தி இருக்கின்றது. ஆகவே இந்த மாநில முருக பக்தர்கள் தலைமையகமாக நம் திருமடம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது..தமிழக அரசுடன் இணைந்து கோவில்களில் குடமுழுக்கு விழாக்களை தமிழில் நடத்துவதற்கு முக்கியத்துவம் தருகின்றீர்கள். கிராமக் கோவில்கள் என்றால் சரி. ஆனால், ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோவிலாக இருந்தால் வேத ஆகமப்படி தானே குடமுழுக்கு நடத்த வேண்டும்?சுமார் எழுபது ஆண்டுகளாக நம்முடைய சிரவை மற்றும் பேரூர் ஆதீனங்கள் இணைந்து கிராமக் கோவில்களில் குறைந்த செலவிலோ, இலவசமாகவோ நம்முடைய திருமுறைகளை ஓதி, திருக்குட நன்னீராட்டு விழாக்களை சிறப்பாகச் செய்துவருகின்றோம். அது மட்டுமல்லாது, ஆகமப்படி நடைபெறுகின்ற கோவில்களில் எந்த மாற்றங்களையும் செய்யாமல் குடமுழுக்கு செய்து வருகின்றோம். அதை அவர்கள் தவறாகப் புரிந்து இருக்கவேண்டும். நமது சுவாமிகள் அவிநாசி, திருச்செங்கோடு, வெஞ்சமாகூடல் இப்படி பல்வேறு கோவில் திருப்பணிகளை எல்லாம் எடுத்துச் செய்தார்கள். அந்தக் கோயிலுக்கு அவர்கள் தலைவராக இருந்து வழிகாட்டி இருக்கின்றார்கள். அந்த மரபுப்படி தான் இதுவரை திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றிருக்கின்றது. அதைத்தான் நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். சமீபத்தில்கூட, நீண்ட காலமாக திருப்பணி ஆகாமல் இருந்த மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நம்முடைய வழிகாட்டுதல்படி திருப்பணிகள் நடைபெற்றது. அதன் பின்பு திருக்கோவிலிலே இருக்கின்ற அர்ச்சகர்கள், அவர்களைச் சார்ந்து இருக்கின்ற வேத விற்பனர்களைக் கொண்டுதான் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது. கூடுதலாக ஓதுவா மூர்த்திகளை வரவழைத்து திருமுறை, திருப்புகழ்கள் பாடப் பெற்றன. ஆகவே ஆகம விதிகளுக்கு மாறாக எப்பொழுதும் நாங்கள் செயல்படுவது இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.(பேட்டி தொடரும்)