-பனையபுரம் அதியமான்கந்தபுராணம், கருடபுராணங்களால் புகழப்பட்ட மரம், நெல்லி. இதன் கனி காயகற்பம், நல்வாழ்வுக்கனி என்றெல்லாம் போற்றப்படுகிறது. சாகா வரம் தரும் அதிசய நெல்லிக்கனியை வள்ளல் அதியமான் ஒளவையாருக்கு அளித்ததாகச் சொல்லப்படுகிறது.. இந்தியா, இலங்கை, மலேசியா, மியான்மர், ஜப்பான், சீனா, இஸ்ரேல், கொரியா உள்ளிட்ட நாடுகளில் நெல்லி மரம் அதிகம் காணப்படுகின்றது. காடுகள், தோட்டங்கள், வீடுகளில் செழித்து வளரும் தன்மை கொண்ட இதில் காட்டு நெல்லி, பெருநெல்லி. கருநெல்லி, அரி நெல்லி எனப் பலவகைகள் உண்டு. இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூவகைச் சுவைகள் கொண்டது நெல்லி. நெல்லிமரம் பாலைத் திணைக்கு உரியதாக சங்க நூல்கள் கூறுவதை, "சங்க இலக்கியத்தில் செடிகொடி விளக்கம்" என்ற நூல் சான்றுகளோடு கூறுகிறது..இலக்கியம்:நெல்லி மரம் வறட்சியான சூழலில் வளரக்கூடியது என்பதை பின்வரும் வரிகள் கூறுகின்றன."விருந்தின் வெங்காட்டு வருந்தி வைகும்அத்த நெல்லித் தீஞ்சுவைத் திரள்காய்" - அகநானூறு, 241 "நெல்லி நீடிய கல்காய் கடத்திடை" − ஐங்குறுநூறு, 334நெல்லிக்காய் பல்லைக் கூசச்செய்யும் செயலை பின்வரும் பாடல் குறிப்பிடுகிறது."நெல்லி தின்ற முள்ளெயிறு தயங்கஉணலாய்ந் திசினா லவரொடு சேய்நாட்டு" −குறுந்தொகை, 262சுவைக்காய் நெல்லிப் போக்கரும் பொங்கர்வீழ் கடைத் திரள்காய் ஒருங்குடன் தின்றுவீசுனைச் சிறுநீர் குடியினள் கழிந்த − நற்றிணை, 271இவ்வாறு நெல்லியின் இலை, காய்கள் பற்றி சங்க நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.கடையேழு வள்ளல்களுள் ஒருவன் தகடூரை ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சி. அவன் தனக்குக் கிடைத்த அரிய கரு நெல்லிக்கனியின் பெருமைகளை உணர்ந்தான். அக்கனியை உண்டால் நோய் நொடிகள் நீங்கி நீடுழி வாழ்வார்கள் என்பதை அறிந்தான். இதை அருந்த தகுதியானவர் தமிழ் வளர்க்கும் ஒளவையே என்பதை முடிவுசெய்தான். அதன்படி ஔவைப் புலவருக்குத் தான் அரிதாகப் பெற்ற சாகா மருந்தான கரு நெல்லிக்கனியைக் கொடுத்து மகிழ்ந்தான். இதனை" சிறியவை நெல்லி தீங்கனி குறியாதுஆதல் நீன்னகத் தடக்கிச்சாதல் நீங்க எமக்கீந்தனையே" என்ற ஒளவையின் வரிகளும்,"பதிதா னிடுகா டுபைங்கொன் றை தொங்கல்மதிதா னதுசூ டியமைந் தனுந்தான்விதிதான் வினைதான் விழுப்பம் பயக்கும்நெதிதான் நெல்லிக்கா வுள் நிலா யவனே" - என திருநாவுக்கரசர் தேவாரமும் கூறுகின்றது.முதுநெல்லிக் கனியும் மூத்தோர் உரையும்முதலில் கசக்கும் பின் இனிக்கும் - என்கிறது முதுமொழி.புராணங்களில் நெல்லி:.ஒருசமயம் பகவதியும் லட்சுமியும் தீர்த்த யாத்திரைக்குச் சென்றனர். திருமால் வழிபாட்டுக்கு உகந்த பொருள் வேண்டுமென லட்சுமி கூற, பகவதியும் அதை ஆமோதித்தாள். அந்த உருவம் தெரியாத பொருள் மீது இருவருக்கும் பக்தி ஏற்பட்டது. அதன் பயனால் இருவரின் கண்களிலும் நீர்த்துளிகள் சுரந்து பூமியில் விழுந்தன. அதிலிருந்து நெல்லி தோன்றியது. அன்று மாசி மாத வளர்பிறை ஏகாதசியாகும். அன்றிலிருந்து நெல்லியும் நெல்லி இலைகளும் துளசிக்கு இணையாக புனிதமானவையாக விளங்கின என கருட புராணம் கூறுகின்றது.இதுபோல், ஆதிப்பிரளயத்தில் உலகம் அழிந்தது. அப்போது பிரமன் தவத்தில் மூழ்கினார். அவரின் தவவலிமையால் அவர் கண்களில் இருந்து நீர்த்துளிகள் பூமியில் விழுந்தன. உடனே அத்துளிகளில் நெல்லி முளைத்து மரமானது. அது பாவத்தையும் நோய்களையும் நீக்க வல்லதாக விளங்கியது என கந்தபுராணத்திலும் நெல்லியைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது..தேவலோக மரங்களான கற்பகம், சந்தனம், அரிசந்தனம், மந்தாரம், பாரிஜாதம் ஆகிய ஐந்து மரங்களும் சாபத்தினால் ஒன்று சேர்ந்து நெல்லிமரமானதாக நெல்லிக்கா தலபுராணம் கூறுகிறது. அற நூல்களில் கூறப்படும் பத்து மரங்களில் ஒன்றாக நெல்லி மரம் விளங்குகின்றது.வடமாநிலங்களில் ஆண்டுதோறும் நெல்லி காய்க்கும் காலத்தில் வளர்பிறை ஏகாதசியில் நெல்லிப்பூ, நெல்லிக்கனி, நெல்லிப்பட்டை இவற்றை நெல்லி மரத்தடியில் வைத்து வழிபாடு செய்கின்றனர். தென்னகத்தில் இதை புனிதமரமாகப் போற்றி வணங்குகின்றனர்..தலமரங்களாக நெல்லி:கேரளா, தமிழ்நாடு மாநிலங்களில் பல ஆலயங்களில் நெல்லி தலமரமாக அமைந்துள்ளன. திருநெல்லிக்கா, திருநெல்வாயில், பழையாறை வடதளி ஆகிய தலங்களில் நெல்லி மரமே தலமரமாகும். திருநெல்லிக்காவில் காலை, மாலை, இரவு பூஜைகள் நெல்லி மரத்திற்கு நடத்தப்படுகின்றன. திருப்புகழ்த் தலமான வெள்ளிக்கரத்தில் (திருவள்ளூர்) நெல்லி தலமரமாகும். நெல்லியின் தன்மைகள்:நெல்லி மர இலைகள் கூட்டிலைகள் போலத்தோன்றினாலும் அவை சிறிய இலைகள்தான். நெல்லி இலைகளுக்கும் காம்புகளுக்கும் இடையில் பூக்கள் உருவாகின்றன. ஒவ்வொரு சிறு கிளையிலும் ஆண் பூவும், பெண் பூவும் தோன்றி எளிதாக உதிர்ந்துவிடும்.மருத்துவம்:எந்தப் பழங்களிலும் இல்லாத அளவில் வைட்டமின் சி சத்து கூடுதலாக நெல்லிக்கனியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. நெல்லிக்கனிச்சாறு இதயக்கோளாறுகளுக்கு ஏற்ற மருந்தாகும் என "சரக சம்ஹிதா" என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.முதுமையை எதிர்க்கும் திறன் கொண்டது நெல்லி என அறிஞர் பெருமக்கள் கண்டறிந்துள்ளனர். உயிரணுக்களின் சிதைவைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது நெல்லி. நெல்லியின் பூ, இலை, காய், கனி, வேர், பட்டை, விதை, வற்றல் என அனைத்துமே மருத்துவக்குணம் கொண்டவை. வாய்ப்புண், பித்தம், சிறுநீர்க் கோளாறு, மலச்சிக்கல், நரம்புக் கோளாறு என அனைத்திற்கும் அருமருந்து நெல்லி. இதன் இலையை நீரில் கொதிக்க வைத்துக் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் ஆறும். நெல்லி வேர்ப்பட்டையைத் தேனில் உரைத்துத் தடவினால் நாக்குப் புண்கள் குணமாகும். நெல்லி மரம் பரணி நட்சத்திரத்திற்குரியதாகப் போற்றப்படுகின்றது.(தலவிருட்சம் வளரும்)