Bakthi Magazine
தொடர்: தரணி போற்றும் தலமரங்கள்!
திருக்கச்சி ஏகம்பம் எனும் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள மாமரம் பலநூறு ஆண்டுகள் பழைமையானது. வேத மரமாகப் போற்றப்படும் இதை காஞ்சிபுராணம் புகழ்கிறது. இதற்கெல்லாம் மகுடமாக துளிர்விடாமல் நீண்ட காலம் இருந்த மாமரம், அண்மையில் பூத்துக் குலுங்குவது இறையருளே. நாள்தோறும் காலைச் சந்தியில் இம்மரத்திற்கு பூஜை நடக்கிறது.