- டி.எம். இரத்தினவேல் தமிழ் இலக்கியங்களில் மிகவும் புராதனமானது தொல்காப்பியம். நர்த்தன கணபதி பற்றி அதில் ஓர் அருமையான பாடல் வருகிறது. “தடந்தாட் கொத்த தமனியச் சிலம்பு படந்தாழ் கச்சைப் பாம்பொடு மிளிர வென்றாடு திருத்தாதை வியந்து கைதுடிகொட்ட நின்றாடு மழகளிற்றை நினைவாரோ வினையிலரே!”ஆம்! கூத்தாடும் விநாயகரை எவ்வளவு அற்புதமாகப் படம்பிடித்துக் காட்டிவிட்டார் தொல்காப்பியர். இன்றும் தமிழ்நாட்டில் பல ஊர்களிலும், இந்தியாவின் பல பகுதிகளிலும் கூத்தாடும் பிள்ளையாரை, நடன கணபதியைக் கோயில்களில் காணலாம். சரி! இந்தக் கூத்தை கணபதி எங்கு பயின்றார்? பாதாமி என்றழைக்கப்படும் வாதாபியில் முதலாம் புலிகேசி மன்னன் நிறுவிய குடைவரை கோயிலில் ஒரு அற்புதமான சிவதாண்டவ வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. அதையொட்டி சிறிய உருவில் குட்டி கணபதி தன் தந்தையிடம் நடனம் பயில்வதாக ஒரு அழகிய சிற்பம் உள்ளது. அதனால் சிவமைந்தனுக்கு நாட்டியம் குலவித்தையாயிற்று என அறியலாம். நர்த்தனமாடும் நடராஜப்பெருமானுக்கு ஏற்றவாறு கணபதியும் நர்த்தன கணபதியானார்..கலிங்கத்தில் சைலோத்பவர் என்ற அரசன் நிறுவிய கோயிலில் உள்ள மூலவர் திரிபுவனேஸ்வரனின் பரிவாரத் தெய்வமாக விளங்குபவர் நர்த்தன கணபதியே. அவர் மட்டுமல்ல அவர் வாகனமான மூஷிகமும் அபிநய பாணியில் நிருத்தியாஞ்சலி செய்த வண்ணமிருக்கிறது.பழைய நூல்கள் மற்றும் பௌத்த மத கிரந்தங்களில் சற்றே நடனம் புரியும் கோலமேற்றவராகக் கணபதியை உருவகித்து தியானிக்க வேண்டும் என்ற குறிப்புகள் உள்ளன. நேபாள ஓலைச்சுவடி ஒன்றில் உக்கிரமும் அமோக சக்தியும் கொண்டது ‘கணபதி மந்திரம்’ என்றும்; இது தாத்பர்யம், சாதனை முறைகளை விளக்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வுருவத்துடன் தந்திர அட்சரங்களை சிறு ஓலையில் வடித்துச் சுருளாக்கி தாயத்தில் அடைத்துக் கையில் கவசமாக அணிவது அவர்கள் வழக்கமாக இருந்தது.வடஇந்தியா, திபெத், நேபாளம் இங்கெல்லாம் ஓவியங்களிலும் சிற்பங்களிலும் நர்த்தன கணபதி பிரதான இடத்தை வகிக்கிறார். அந்திவெயில்போல மஞ்சள் நிறம், ஒரு காலை தாமரை தாங்க, மறுகால் தூக்கிய திருவடியாக சதுர்புஜங்களில் ஒன்று லோலஹஸ்தமாகக் கொண்டு தாண்டவமாடும் கணேசரே, ‘நர்த்தன கணபதி’யாக விளங்குகிறார்..கி.பி. 12ஆம் நூற்றாண்டில் போசள மன்னன் விஷ்ணுவர்த்தனன் ‘ஹளேபீடு’ என்னும் தலத்தில் உருவாக்கிய நர்த்தன கணபதியின் அபூர்வ சிற்ப வடிவம் நுண்மையான கலைநுட்பங்களோடு நகாசு வேலையின் சிகரமாக உள்ளது.