-எஸ்.ஸ்ரீதுரை ஸ்ரீஆஞ்சநேய ஸ்வாமியை “அஸாத்ய ஸாதக ஸ்வாமி” என்று பக்தர்கள் போற்றுவர். பிறரால் செய்ய முடியாத காரியங்களையும் செய்து முடிப்பவர் என்பது இதன் பொருளாகும். .புனிதமான நம் பாரத தேசத்தில் பல்வேறு காலகட்டங்களில் அவதரித்த மகான்களும் ஸ்ரீஆஞ்சநேயஸ்வாமியைப் போலவே பிறரால் செய்ய இயலாத பெரும் செயல்களையும் தங்களது தவ வலிமையாலும் எம்பெருமானுடைய திருவருளின் மேல் தாங்கள் கொண்டிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையினாலும் சாதித்துக் காட்டியிருக்கின்றனர்.சுமார் அறுநூறு வருடங்களுக்கு மேற்பட்ட பாரம்பரியம் கொண்ட ஸ்ரீஅஹோபிலமடத்தின் பீடாதிபதிகளாய் விளங்கிய ஜீயர் ஸ்வாமிகள் ஒவ்வொருவரும் இப்படிப்பட்ட பெருமைகளுக்குச் சொந்தக்காரர்களாக விளங்கியவர்கள்தாம். .அவர்களுள், ஸ்ரீஅஹோபிலமடத்தின் நாற்பத்து நான்காவது பீடாதிபதியாக விளங்கிய ஸ்ரீமுக்கூர் அழகியசிங்கர் பூலோக வைகுண்டம் என்று ஸ்ரீவைஷ்ணவர்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கத்தில் மாபெரும் ராஜகோபுரத்தைக் கட்டியெழுப்பி மகத்தான சாதனை புரிந்தவராவார்..முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தில் வந்தவாசிக்கு அருகில் உள்ள முக்கூர் என்ற புனிதமான கிராமத்தில், ஸ்ரீரங்கராஜாச்சாரியார், ஸ்ரீரங்கநாயகி அம்மாள் என்ற உன்னதமான தம்பதியரின் திருமகனாக 1895 ஆம் வருடம் ஆவணி மாதம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் அவதரித்தவரே ஸ்ரீமுக்கூர் அழகியசிங்கர் ஆவார். இவருக்குப் பெற்றோர் இட்ட திருப்பெயர் ராஜகோபாலன்.வடகலை சம்பிரதாயத்தில் அவதரித்த ராஜகோபாலாசாரியார், இளம் வயதிலேயே வேதம், திவ்வியப் பிரபந்தம் உள்ளிட்டவற்றைக் கற்றுத் தேர்ந்ததுடன், ஸ்ரீபாஷ்யம், பகவத்விஷயம் போன்ற அற்புதமான உரைநூல்களின் பொருளைச் சிறந்த மகான்களின் அடிபணிந்து தெளிவாகக் கற்றறிந்தார். பண்டிதர்களும் பாமரர்களும் ஒரு சேர மனம் ஒன்றி அனுபவிக்கும் விதமாக ஆன்மிக உபன்யாசங்கள் செய்வதில் வல்லவராக விளங்கினார். ஸ்ரீவேதாந்த தேசிகருக்குக் “கவிதார்க்கிக சிம்மம்” என்ற பட்டப்பெயர் ஏற்பட்டிருந்தது. சிறந்த கவிஞராகவும், தம்முடன் வாதம் செய்பவரை எளிதில் தோற்கடிக்கும் சிங்கமாகவும் அம்மகான் விளங்கியதால் அவருக்கு இந்தப் பட்டப் பெயர் வழங்கப்பட்டது.அவரைப் போலவே, நம் ராஜகோபாலாச்சாரியாரும் சாஸ்திர விஷயங்களில் அபார ஞானம் கொண்டிருந்ததுடன், தம்மிடம் வாதம் செய்யும் பண்டிதர்களை மிகவும் சூட்சுமமான கேள்விகளைக் கேட்டு திகைக்க வைத்தும், அதற்குரிய பதிலைத் தாமே விளக்கிக் கூறியும் பிரமிப்பில் ஆழ்த்துவார். .ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் குறித்த வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறும் “ஸதஸ்” எனப்படும் நிகழ்வுகளில் இவர் பங்குபெறும் பொழுதெல்லாம் இவருடைய கேள்விக்கணைகளுக்கு பதில் கூற இயலாமல் மற்ற வித்வான்கள் திகைத்து நிற்பர். இவரே பிற்காலத்தில் ஸ்ரீஅஹோபிலமடத்தின் தலைமைப் பொறுப்பெற்ற பின்பு தாம் தலைமை வகித்து நடத்தும் “ஸ்ரீமாலோல வித்வத் ஸதஸ்” என்னும் விசிஷ்டாத்வைத மாநாடுகளில் கலந்துகொள்பவர்களிடம் நுணுக்கமான கேள்விகளை எழுப்பி அவர்களை பதிலளிக்கத் தூண்டுவது வழக்கம். இளம் வயதில் தில்லையம்பூர் சக்கரவர்த்தி ஐயங்கார் என்ற பெரிய வித்வானிடம் சகல சாஸ்திரங்களையும் கற்றுத்தேர்ந்த ராஜகோபாலாச்சாரியார், ஸ்ரீமத் அஹோபில மடத்தின் நாற்பத்து ஒன்றாம் பட்டத்து ஜீயராகிய ஸ்ரீகாருக்குறிச்சி சின்ன அழகியசிங்கரிடம் பரஸமர்ப்பணம் என்னும் முக்கியச் சடங்கைச் செய்துகொண்டார். நாற்பத்திரண்டாம் பட்டம் ஜீயர் ஸ்ரீமத் இஞ்சிமேட்டு அழகியசிங்கர், நாற்பத்து மூன்றாம் பட்ட ஜீயர் ஸ்ரீமத் தேவனார்விளாகம் அழகியசிங்கர் ஆகிய மகான்களின் அபிமானத்தைப் பெற்று ஸ்ரீவைஷ்ணவ உலகில் மிகவும் மதிப்பு வாய்ந்த அறிஞராக விளங்கினார். .இந்நிலையில், 1957ஆம் வருடம் வட இந்தியாவுக்கு விஜய யாத்திரையாக எழுந்தருளிய ஸ்ரீமத் தேவனார்விளாகம் அழகியசிங்கர் நைமிசாரண்யம் என்ற திவ்வியதேசத்தில் எதிர்பாராதவிதமாக முக்தியடைந்ததால், ராஜகோபாலாச்சாரியர் உடனடியாக இல்லற வாழ்வைத் துறந்து, சந்நியாசம் மேற்கொண்டு ஸ்ரீமத் அஹோபில மடத்தின் நாற்பத்து நான்காவது ஜீயராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதில் ஓர் அதிசயம் என்னவென்றால், 1895 ஆம் வருடம் ஆவணி மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் அவதரித்த ராஜகோபாலாச்சாரியர் தமது அறுபத்து மூன்றாவது வயதில் ஸ்ரீமத் அழகியசிங்கராகத் துறவு மேற்கொண்டார். அவ்வாறு, உடல்நிலை தளரத்தொடங்கும் வயதில் துறவு மேற்கொண்டவர் தாம் வழிபடும் ஸ்ரீமாலோலனின் அருளினால் தேக ஆரோக்கியத்தில் முன்னேற்றம் கண்டு, அதன் பின்னர் சுமார் முப்பத்தைந்து வருடகாலம் பீடாதிபதியாகப் பொறுப்பு வகித்தார். .அதுமட்டுமின்றி, 1979 ஆம் வருடம் தொடங்கி 1987 ஆம் வருடம் முடிவுற்ற ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் நிர்மாணப் பணிகளைத் தள்ளாத வயதிலும் மிகவும் திறம்பட உற்சாகத்துடன் நடத்திக் கொடுத்தார்.கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் கிருஷ்ணதேவரராயரின் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு, அடித்தளத்துடன் நின்றுபோன ஸ்ரீரங்கம் தெற்கு ராஜகோபுரத்தை பூர்த்தி செய்யும் உடல் வலிமை, மனோதிடம் ஆகியவற்றை ஸ்ரீமத் அஹோபிலமடத்தின் பிரதான வழிபாட்டு தெய்வமான ஸ்ரீமாலோலநரசிம்மரே இவருக்குக் கொடுத்தருளியுள்ளார். ஸ்ரீரங்கம் ராஜகோபுரக் கட்டுமானப் பணியில் தொடர்ச்சியாக எட்டு வருட காலம் நாள் ஒன்றுக்கு இருநூறு கட்டுமானத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பொதுமக்கள், மாநில அரசுகள், மடாதிபதிகள், தனியார் நிறுவனங்கள், இசையமைப்பாளர் இளையராஜா போன்ற பிரபலங்கள் ஆகிய அனைவருடைய உதவியும் ஒத்துழைப்பும் இந்த ராஜகோபுரப் பணிகளுக்குக் கிடைத்தாலும், அவ்வப்பொழுது சிற்சில தடங்கல்களும் ஏற்படத்தான் செய்தன..ராஜகோபுரம் எழுப்பப்படும் நிலப்பரப்பிலுள்ள மண்ணின் உறுதித்தன்மை குறித்து ஊடகங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டன. கோபுரத்தை ஒட்டியுள்ள வீடுகளும் கடைகளும் பாதிக்கப்படும் என்று சிலர் ஐயத்தைக் கிளப்பினர்.இவை போன்ற தடைகள் பலவற்றையும் தமது தவவலிமை, மனோதிடம், ஸ்ரீமாலோலப் பெருமானின் திருவருள் ஆகியவற்றின் துணையுடன் எதிர்கொண்ட ஸ்ரீமத்முக்கூர் அழகியசிங்கர் ஆசியாவிலேயே பெரியதாகப் பதின்மூன்று நிலைகளுடன் சுமார் இருநூற்றுநாற்பது அடி உயரமுள்ள அந்த ராஜகோபுரத்தைக் கட்டிமுடித்துக் குடமுழுக்கைச் செய்து முடிக்கும் வரையில் ஒருநாளும் ஓயவில்லை. ஒரு மடாதிபதியாக இருந்து கொண்டு தமது எண்பத்துநான்காவது வயதில் பிரமாண்டமான ராஜகோபுரம் கட்டும் பணிகளைத் தொடங்கி அதனைத் தம்முடைய தொன்னூற்றிரண்டாவது வயதில் வெற்றிகரமாக முடித்துக் காட்டிய ஸ்ரீமத் முக்கூர் அழகியசிங்கரின் உழைப்பும் மனோதிடமும் இன்றைய இளைஞர்கள் அனைவரும் கற்க வேண்டிய பாடமாகும். .ஸ்ரீமத் முக்கூர் அழகியசிங்கரின் தனிச்சிறப்புகள்:ஸ்ரீமத் முக்கூர் அழகியசிங்கரிடம் எல்லையற்ற கருணை, ஏழைகளிடம் இரக்கம் ஆகிய குணங்களும் வெகு இயல்பாகக் குடிகொண்டிருந்தன.தம்மை நம்பி வரும் பக்தர்களானாலும் சரி, ஸ்ரீமத் அஹோபில மடத்தின் பணியாளர்களானாலும் சரி, அவர்களுக்கு உதவி செய்வதில் ஸ்ரீமத் முக்கூர் அழகியசிங்கர் ஒருபொழுதும் கணக்குப் பார்த்ததில்லை. அவர்களின் முகத்தில் சிறு வாட்டம் தெரிந்தாலும்கூட என்ன விஷயம் என்று கேட்டு உதவி செய்வது சுவாமிகளின் வழக்கம். இவரது காலத்தில் ஸ்ரீமத் அஹோபில மடத்தின் நிதி உதவியால் பல ஏழைகளின் வீட்டுத் திருமணங்கள் நடந்தேறியிருக்கின்றன.தம்மை வணங்க வரும் சிஷ்யர்களை ஆசிர்வதிக்கும் விதமாக ஸ்ரீமத் முக்கூர் அழகியசிங்கர் அளிக்கின்ற பலமந்திராக்ஷதை மிகவும் சக்தி வாய்ந்தது. எண்ணிய நற்காரியங்களை எண்ணியபடியே நடத்திக் கொடுக்கக்கூடியது அந்தப் பலமந்திராக்ஷதை.ஸ்ரீமத் அஹோபில மடத்தின் சிஷ்யர் ஒருவரர் தமது அவசரத் தேவைக்காகத் தம்முடைய விவசாய நிலத்தை விற்கவேண்டியிருந்தது. ஆனால், அந்த நிலத்தில் குத்தகைக்குப் பயிரிட்டுவந்த விவசாயி அதனை விற்பதற்குத் தடையாக இருந்துள்ளார். அந்த சிஷ்யர் நேரடியாகக் கிளம்பி ஸ்ரீமுக்கூர் அழகியசிங்கரிடம் முறையிட்டார்.சிஷ்யர் சொன்னதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட ஸ்ரீமுக்கூர் அழகியசிங்கர் அவருக்கு அட்சதைப் பிரசாதம் வழங்கியதுடன், “நீ இப்பொழுதே உன் ஊருக்குப் போய் உன்னுடைய நிலத்தில் இந்த அட்சதையைத் தூவிவிட்டு உன்வீட்டிற்குப் போ! நடக்க வேண்டியதை நம் மாலோலன் பார்த்துக்கொள்வான்” என்றும் அறிவுரை கூறினார். சிஷ்யரும் அவ்விதமே செய்தார். .என்ன அதிசயம்? அடுத்த ஒரே வாரத்தில் அந்த சிஷ்யரின் வீட்டைத் தேடிவந்த குத்தகைக் காரர், “நான் ஒதுங்கிக்கிறேன் சாமி. நீங்க உங்க நிலத்தை யாருக்காவது வித்துக்குங்க சாமி!” என்று சொல்லிவிட்டார். அந்தக் குத்தகைக்காரரின் மனமாற்றத்திற்கு ஸ்ரீமத் அழகியசிங்கர் அருளிய பலமந்திராக்ஷதையே காரணம் என்பதைத் தனியாகச் சொல்லவேண்டுமா என்ன?வேறொரு சமயம், உச்சிவெயில் நேரத்தில் அலுமினியப் பாத்திரங்களை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு தள்ளாடியபடி சென்றுகொண்டிருந்த வயதான முஸ்லிம் ஒருவரைத் தமது மடத்திலேயே சாப்பிடச் சொன்னதுடன், அவர் வைத்திருந்த அலுமினியப் பாத்திரங்கள் அத்தனையையும் விலைகொடுத்து வாங்கி, அவற்றை நாதஸ்வரக்காரர் உள்ளிட்ட பல்வேறு சிப்பந்திகளுக்கும் இலவசமாகக் கொடுக்க ஏற்பாடு செய்த இரக்கக் குணம் ஸ்ரீமத் முக்கூர் அழகியசிங்கருக்கே உரியது. அவருடைய அருளாட்சிக் காலத்தில் ஸ்ரீமத் அஹோபில மடத்தின் சிஷ்யர்கள் இதுபோன்ற பல அற்புதமான நிகழ்வுகளைத் தங்கள் கண்களால் பார்த்திருக்கின்றனர். ஸ்ரீவேதாந்த தேசிகரைப் போன்றே ஞானம், வைராக்கியம், இரக்கம், கருணை, பக்தி முதலிய பல சிறப்புகளையும் கொண்டு விளங்கிய ஸ்ரீமத் முக்கூர் அழகிய சிங்கரின் சந்நியாசத் திருப்பெயரும் “ஸ்ரீவேதாந்த தேசிக யதீந்திர மகாதேசிகன்” என்று அமைந்தது மிகவும் சிறப்பாகும்..வில்லிவலம் ஸ்ரீ உ.வே. கிருஷ்ணமாச்சாரியார் என்ற மஹானைத் தமக்கு அடுத்த நாற்பத்தைந்தாவது ஜீயராக அமர்த்தி மகிழ்ந்தார் ஸ்ரீமத் முக்கூர் அழகியசிங்கர்.தம்முடைய அருளாட்சிக் காலத்தில் ஸ்ரீஅஹோபிலம், திருவள்ளூர் போன்ற பற்பல திவ்வியதேசங்களிலும் பற்பல திருப்பணிகளைச் செய்து மகிழ்ந்த ஸ்ரீமத் முக்கூர் அழகியசிங்கர் 1992 ஆம் வருடம் ஆடி மாதம் கிருஷ்ணபட்ச திருதியை அன்று முக்தியடைந்தார்.ஸ்ரீமத் முக்கூர் அழகியசிங்கர் ஸ்ரீவேதாந்ததேசிக யதீந்திர மகாதேசிகனின் பிருந்தாவனம் ஸ்ரீரங்கம் ஸ்ரீதசாவதாரம் திருக்கோயிலின் அருகில் அமைந்துள்ளது.ஸ்ரீரங்கத்திற்குப் புனிதயாத்திரை செல்லும் அனைவரும் தவறாமல் ஸ்ரீமத் முக்கூர் அழகியசிங்கரின் பிருந்தாவனத்திற்கும் சென்று வணங்கித் தொழுது குருவருளுக்கும், ஸ்ரீமாலோலனின் திருவருளுக்கும் பாத்திரமாகி வாழ்வாங்கு வாழ்வோமாக!