ஓர் அறிவு கொண்ட உயிரினங்கள் எல்லாம் காலநிலை சூழ்நிலைகளுக்கேற்றவாறு தங்களைத் தயார்படுத்திக்கொண்டு கவலையின்றி வாழ, ஆறறிவு படைத்த மனிதன் மட்டும் சிறு கல் தடுக்கினால்கூட சிகரம் அளவிற்கு கவலையை வளர்த்துக்கொள்கிறான் என்பதையும்; எல்லாம் அவன் செயல் என்று நம்பிக்கையுடன் நாட்களைக் கடந்தால் எல்லா நாளும் இன்பமே என்பதையும் தலையங்கம் சிறப்பாக உணர்த்திவிட்டது.- சங்கீதசரவணன், மயிலாடுதுறை. ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர். ஏ.சரஸ்வதி, வாழைப்பந்தல். தென் நாட்டு துவாரகை எனப் போற்றப்படும் கிருஷ்ணாலயத்தின் மகத்துவம் கூறும் கட்டுரை தொடங்கி கிருஷ்ண ஜெயந்தியன்று குட்டிக்கண்ணனை வரவேற்போம் என்று குதூகலமூட்டும் கட்டுரை வரை பகவான் ஸ்ரீகிருஷ்ணன் அவதாரத் திருநாள் சிறப்பிதழ் கட்டுரைகள் அனைத்தும் பரவசத்தில் ஆழ்த்திடும் பழ வகை விருந்து எனலாம்.- த. சத்தியநாராயணன், அயன்புரம். மாதவன் நம்பூதிரியிடம் குருவாயூரப்பன் ஓணத்தின்போது இரண்டு பட்டு வஸ்திரத்தை தனக்கு தந்தே ஆகவேண்டும் என்று குழந்தை வடிவில் ஆடிய திருவிளையாடலை நினைத்து கண்ணீர்மல்க நெகிழ்ந்து போனேன்.- நிர்மலாராவ், சென்னை-73..வேதமும் வியாசரும் என்ற கட்டுரையில், அறிவியல் கோட்பாடுகளின் உண்மையான பிறப்பிடம் வேதங்கள்தான் என உஜ்ஜைனியில் உள்ள மகரிஷி பாணினி சமஸ்கிருத மற்றும் வேதிக் பல்கலைக்கழகத்தில் இஸ்ரோ தலைவர் பேசிய பேச்சை மேற்கோளாகக் காட்டியிருப்பது இந்தச் சமயத்தில் பொருத்தமாக அமைந்திருந்தது.- எஸ். விஜயலக்ஷ்மி, சாலிகிராமம். 31.8.2023 குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் இடம்பெற்ற ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்ற கட்டுரை மூலம், மயிலாடுதுறையின் ஆன்மிகச் சிறப்புகள் அளப்பரியவை என்பதை அறிந்தேன். தரணி போற்றும் தல மரங்கள் வரிசையில் ‘குரா’ மரத்தின் சிறப்புகளைத் தெரிந்துகொண்டேன்.- எஸ். வளர்மதி, கொட்டாரம்..மோகன் குருஜியின் கேள்வி - பதில்கள் மற்றும் வரலக்ஷ்மி விரத ஸ்லோகங்கள், விரத பலன்கள், பிரசாதங்கள் யாவும் எனக்கு மிகவும் பேருதவியாக இருந்தது. வேதமும் வியாசரும் கட்டுரையை எனது கணவர் படித்து மகிழ்ந்தார்.- பி. அக்சயா, கீழ்வேளூர். முன் முகப்பு அட்டையில் தேஜஸாக குழந்தை கிருஷ்ணர், தமிழ்நாட்டில் கிருஷ்ணர் நிகழ்த்திய அவதாரம், சகலப்பேறு தரும் சம்மோஹன கோபாலன், ராமாயணம், மகாபாரதம் தொடர் என குமுதம் பக்தி களை கட்டி நிற்கிறது அய்யா! கூடவே ஆழ்வார்கள் அருளிய அமுதம் குட்டி இணைப்புப் புத்தகம் குதூகலம் சார்!- கே. பிரபாவதி, கன்னியாகுமரி. 31.8.2023 குமுதம் பக்தி ஸ்பெஷல் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு தலங்களில் எம்பெருமாளின் அருட்பிரவாகங்களை ஒருசேர அறியும் வாய்ப்பினைத் தந்து பரவசமடைய வைத்தது.- ப. முருகேசன், அவிநாசி.