நாம் எதை விதைப்போமோ அதைத்தான் அறுவடை செய்யமுடியும். நாம் செய்த உதவி, நாம் கதிகலங்கி நிற்கும்போது இன்னொருவர்மூலம் கிடைக்கும் என்பது நிதர்சனம். நல்லதே செய்வோம் என்ற ஆசிரியரின் தலையங்கம் ஆக்கப்பூர்வமானது.- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர். எஸ்.வஜ்ரவடிவேல், கோவை. நிர்மலா ராவ், சென்னை. ஏ.இளங்கோவன், வாழைப்பந்தல். தெய்வங்களுக்கு இணையாக இதிகாசங்களில் வியப்பூட்டிய பெண்களின் அளப்பரிய ஆற்றலையும், கருணையையும் தொகுத்தளித்து சௌபாக்ய சிறப்பிதழுக்கு மகுடம் சூட்டிவிட்டீர்கள்!- கே.பிரபாவதி, கன்னியாகுமரி. ஆர்.உமாராமர், மணலிவிளை..கயிலாயக் காட்சி கண்டதன் பலனை அளிக்கின்ற சிறப்புமிகு திருத்தலமாகத் திகழ்கின்ற திருவையாறு ஐயாரப்பர் ஆலயத்தின் மகத்துவங்களை விவரித்த கட்டுரையும் படங்களும் அந்த அற்புத ஆலயத்திற்குச் செல்லவேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்திவிட்டது.- த.சத்தியநாராயணன், அயன்புரம். மருதூர் மணிமாறன், இடையன்குடி. கஷ்டங்கள் களையும் கருணாசுவாமி கோயில் கட்டுரை படித்தேன். மழை இல்லாத சமயத்தில், இங்குள்ள வருணலிங்கத்தை நீரினால் மூழ்கச் செய்து மழையைப் பெறுகிறார்கள் என்னும் அரிய தகவலைப் படித்து வியந்தோம். குமுதம் பக்தி ஸ்பெஷல் ஒவ்வொரு வீட்டிலும் பாதுகாக்க வேண்டிய இதழ்!- எஸ். வைஷாலி சக்திவேல், திண்டுக்கல்..வீடு, மனை வரமருளும் ஸ்ரீ லட்சுமி வராகர் ஆலயம் இருக்கும் திக்கினைக் காட்டியிருந்த குமுதம் பக்தி ஸ்பெஷலிற்கு நன்றிகள் பல. இப்படியொரு அற்புத ஆலயம் திருவனந்தபுரம் ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமி திருக்கோயிலின் அருகிலேயே உள்ளது என்பதை முதன்முதலாக அறிந்து கொண்டதில் அளவற்ற ஆனந்தமடைந்தேன்.- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி. விதவிதமான சிறப்பிதழ்கள் வெளியிடுவதில் பக்திக்கு நிகர் பக்தியே! இந்த இதழ் சௌபாக்ய சிறப்பிதழாய்க் கிடைத்திருப்பது எங்களின் பாக்கியமே! அட்டையில் முழு நிலவாய் ஒளிரும் ஆதி சக்தியின் கண்கொள்ளாக்காட்சியைக் காண பல கோடி பிறவி வேண்டும்.- சங்கீதசரவணன், மயிலாடுதுறை. வெ.லட்சுமிநாராயணன், வடலூர். எஸ்.வளர்மதி, கொட்டாரம்..மங்கல வாழ்வை அருளும் மகாலட்சுமியைப் போற்றித் துதிக்க அஷ்டகம் என்னை மிகவும் கவர்ந்தது. மேலும் இதிகாசங்களில் பெண்கள் இணைப்புப் புத்தகம் மிகச் சிறந்த படைப்பு. இதுதான் எனது முதல் முயற்சி.- பி. அக்சயா, கீழ்வேளூர். மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் அவர்களின் பேட்டி படித்தேன். இறைவன் ஒருவனே நம்முடைய ஒரே சொத்து என்று அவர் சொன்னது முற்றிலும் உண்மை!- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. 17.8.2023 தேதியிட்ட குமுதம் பக்தி ஸ்பெஷலை படித்துவிட்டு சென்னை தி.நகர் முப்பாத்தம்மன் கோயில் சென்று தரிசனம் செய்துவந்தேன். அந்தக் கோயில் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.-கெளரி ராமச்சந்திரன், சென்னை-40.