திறமை, படிப்பு, தகுதி அனைத்தும் ஆண்டவன் கொடுத்ததுதான். அது இருந்தும் சிலருக்கு நல்ல வாய்ப்புகள் கைநழுவிப்போய்விடும். எனவே இறைவனிடம் சரணாகதி அடையுங்கள். அதுவே சகல நற்பலன்களையும் பெறச் சிறந்த வழி என்பதை தலையங்கம் சிறப்பாய் எடுத்துரைத்தது.- சங்கீத சரவணன், மயிலாடுதுறை. இராஜேஸ்வரி .இராமகிருஷ்ணன், எரகுடி. ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர். என்.காளிதாஸ், அண்ணாமலை நகர். ’அலகிலா விளையாட்டுடையான்’ எனும் அழகிய தலைப்பில் கூரத்தாழ்வானின் மகத்துவங்களை விவரித்த இணைப்புப் புத்தகம் கண்டு அளவிலா பரவசம் கொண்டேன். இதுபோன்ற அற்புதமான இலவச இணைப்புகளை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.- த. சத்தியநாராயணன், அயன்புரம். இரா.ஜனனி, எரகுடி..வலங்கைமான் வரதராஜம்பேட்டையில் கோவில் கொண்டுள்ள ஸ்ரீ சீதளாதேவி மகாமாரியம்மனுக்கு பாடையில் பிணம் போல படுத்து நேர்த்திக்கடன் செலுத்தினால் துயரங்கள் தூளாகும் என்ற தகவலும் படங்களும் அருமை. இத்தகைய ஆன்மிகத் தகவலைத் தந்த குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.- எஸ். வஜ்ரவடிவேல், கோவை..கஷ்டங்கள் போக்கும் கரியமாரியம்மன், பொருளாதாரப் பிரச்னைகள் தீர்க்கும் அமாவாசை பூஜை, மனநலப் பாதிப்புகள் போக்கும் மகிமை மிக்க தீர்த்தம் என வசந்தமாக வாழ வழிபாடு செய்யவேண்டிய தெய்வங்களை அடையாளம் காட்டி கூடவே புண்ணியமும் தேடிக்கொண்டீர்கள்.- கே. பிரபாவதி, கன்னியாகுமரி..தலையெழுத்தை மாற்றும் ஜாதக அர்ச்சனை கண்டேன். இனிமேல் ஜாதகம் சரியில்லை என்று கூறும் பக்தர்களின் எண்ணிக்கை குறையும்.- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. எஸ்.வைசாலி சக்திவேல், திண்டுக்கல். ஜி.ஜெயராம், திண்டிவனம்..அகல் விளக்கு எரிவது பற்றி இதுவரை யாருக்குமே தெரியாத விளக்கத்தை நமது குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்த அகல்விளக்கு உணர்த்தும் உண்மையில் தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொண்டேன்.- இரா. தில்லைவாசன், நத்தக்காடு..புற்றிடங்கொண்ட புகழ்மிக்க தெய்வங்கள் பற்றிய தொகுப்பு பக்தியின் பெருமுயற்சி என்றே கூறலாம்.- வெ. லட்சுமி நாராயணன், வடலூர். ப.முருகேசன், சாமந்தன்கோட்டை.