ஒவ்வொருவர் வாழ்விலும் எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்யும். அதேசமயம் எதிர்பார்த்தது நடக்காமல் போனால், மனம் வருந்தாமல் எதுவுமே நம்முடையதல்ல; எதுவும் இங்கு நிரந்தரமும் அல்ல என்பதை உணர்ந்து வாழ்வதற்கு எடுத்து வைக்கும் முதல் அடியே பக்திக்கான பிள்ளையார் சுழி என்பதை தலையங்கம் தெளிவுபடுத்தியது..- சங்கீதசரவணன், மயிலாடுதுறை. நிர்மலா ராவ், சென்னை-73. ஆர்.ஜே.கல்யாணி, திசையன்விளை. என்.காளிதாஸ், அண்ணாமலை நகர். எஸ்.வஜ்ரவேல், கோவை.இல்லறத்தாரின் கடமைகள் என்னென்ன? என்ற தலைப்பில் இணைப்புப் புத்தகம் வழங்கி, சம்பந்தப்பட்டவர்கள் வாழ்க்கை சிறக்க நல்வழி காட்டிவிட்டீர்கள். நன்றி!- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர். க.ஜெயராம், திண்டிவனம். ஆர்.விநாயகராமன், செல்வமருதூர். எஸ்.வளர்மதி, கொட்டாரம்.ஆடி வரும் பின்னே ஆடிச்சிறப்பிதழ் வந்துவிடும் முன்னே என்று ஆனந்தமாக ஆச்சரியப்படும் வண்ணம் அம்மன் புகழ்பாடும் அற்புதக் கட்டுரைகளுடன் சிறப்பிதழைப் படைத்து சிலிர்க்க வைத்துவிட்டீர்கள். காய்கறிப் பதார்த்தங்களுடன் கேழ்வரகுக் கூழ் குடித்துப் பசியாறிய பரவசம் ஏற்பட்டது.- த. சத்தியநாராயணன், அயன்புரம்.ஆடிச்சிறப்பிதழிற்குப் பெருமை சேர்த்திருந்தது, ஆடிப்பூரத்தின் அருமை பெருமைகளை உணர்த்தியிருந்த சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் என்ற கட்டுரை.- இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி. மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தரின் சிறப்புப்பேட்டி நன்றாக இருந்தது. குறிப்பாக அதில் தமக்கும் கவிஞர் கண்ணதாசனுக்கும் உள்ள தொடர்புப் பற்றி அவர் குறிப்பிட்டிருந்தது சிலிர்க்க வைத்துவிட்டது.- ஆர். ஹரிஹரன், கோழிக்கோடு.வீட்டில் இருக்கும் அம்மிக்குழவியைச் சுத்தம் செய்து, அம்மிக்குழவி வடிவில் அம்மனை வழிபாடு செய்யும் அற்புதத்தை குமுதம் பக்தி ஸ்பெஷல் வாயிலாக அறிந்தோம், மகிழ்ந்தோம்.- இராம.கண்ணன், திருநெல்வேலி.அஷ்ட ஐஸ்வர்யங்களை அள்ளித்தருளும் அனுமன் பற்றி புதிய செய்திகளைத் தெரிந்துகொண்டோம். அன்பின் வடிவமான சிவபெருமான் அருள் சக்தி வடிவமாவதை ஆடியும் அம்மனும் சிறப்புக் கட்டுரை உணர்த்தியது.- கோ.தியாகராஜன், கீழ்வேளூர். ஏ.இளங்கோவன், வாழைப்பந்தல். துரை.இராமகிருஷ்ணன், எரகுடி. வெ. லட்சுமிநாராயணன், வடலூர். புராணத்துடன் தொடர்புடைய பாபாதாம் இராவணேஷ்வர் மகாதேவ் கட்டுரையைப் படிக்க படிக்க பரவசம் ஏற்பட்டது.- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு..ஆட்டிப் படைப்பவருக்கு ஆடியில் விழா! ஆடி மாதம் என்றாலே அம்மனின் வழிபாடுதான் நினைவுக்கு வரும். ஆனால், தேனி மாவட்டம் குச்சனூரில் தனிக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் சனீஸ்வர பகவானுக்கு ஆடி மாத சனிக்கிழமைகள் மிகவும் விசேஷம். இத்திருத்தலத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரின் அம்சமாக சனீஸ்வரர் காட்சியளிக்கிறார். சுயம்புவான குச்சனூரானுக்கு திருநாமம், விபூதிப்பட்டை, ருத்ராட்ச மாலை ஆகியவை சாத்தப்பட்டு ஹரியும் சிவனும் ஒன்றே என்கிற பேருண்மை பறைசாற்றப்படுகிறது. குச்சனூரில் ஆடி முதல் சனிக்கிழமையன்று காக முத்திரை பொறித்த கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. 3-ஆம் சனிக்கிழமை பகவானுக்குத் திருக்கல்யாணமும் அன்று இரவு சக்தி கரகம் எடுத்தல், மஞ்சனக்காப்பு சாற்றுதல் போன்ற விசேஷ நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. ஞாயிற்றுக்கிழமை இரவு சர்வாலங்காரத்துடன் பகவான் திருத்தேரில் நகர்வலம் வருவார். இங்கு ‘எள் பொங்கல்’ படைத்து வழிபடுவது விசேஷம்.- ஆர். சாந்தா, மயிலாப்பூர்.