-வி.பி.ஆலாலசுந்தரம்காலங்களைக் கட்டுப்படுத்தக்கூடியவள் காளியம்மன். அவளை மனமொன்றியும், உரிய பரிகாரங்களைச் செய்தும் வழிபட்டால் எண்ணற்ற பலன்களைப் பெறலாம்..காளி வழிபாடு சிறப்பாக நடைபெறும் கோவில்களுள் ஒன்று, கோவை தடாகம் சாலையில் கே.என்.ஜி.புதூர் பிரிவிற்கு அருகே அமைந்துள்ளது.வக்ரகாளியம்மன் என்ற பெயரைக் கொண்ட இந்த அம்மனது சிலை ஆரம்பத்தில் காட்டின் நடுவே ஒரு மேடை மீது வடக்கு நோக்கி நிறுவப்பட்டது. பின்னர் அதற்கு ஓட்டுக் கட்டடம் அமைக்கப்பட்டது. ஒருகட்டத்தில் பல்வேறு பிரச்னைகளால் அம்மனுக்கு முறையான பூஜைகள் நடைபெறவில்லை.இந்நிலையில் காளி உபாசகர் ஒருவர் கனவில் தோன்றிய அம்மன், ‘’நான் யாரும் கவனிப்பாரற்ற நிலையில் காட்டில் இருக்கிறேன். நீ வந்து கோவிலைத் தூய்மைப்படுத்தி தினசரி பூஜைகளை செய்து வா. என்னை வழிபடுபவர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றி வைக்கிறேன்’’ எனக் கூறி, தாம் இருக்கும் இடத்தையும் சுட்டிக்காட்டி மறைந்தார். .மகிழ்ச்சியடைந்த காளி உபாசகர், அடுத்த நாள் காலையில், அம்மன் கனவில் காண்பித்த இடத்தைக் கண்டுபிடித்தார். அங்கே சுமார் ஏழடி உயர அம்மன் சிலை இருப்பதைக் கண்டு கண்ணீர் மல்க வழிபட்டார். கோவிலைப் பராமரித்தவரைச் சந்தித்து, அம்மன் கனவில் வந்து ஆணையிட்டதைத் தெரிவித்தார். இனிமேல் கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பையும், தினசரி பூஜைகளை செய்யும் பொறுப்பையும் தாம் ஏற்றுக்கொள்வதாகக் கூறி, அவரிடம் அனுமதி பெற்றார்..கோவிலையும் சுற்றுப்புறத்தையும் சுத்தம் செய்து தினசரி பூஜைகளையும், அமாவாசை பூஜைகளையும் மேற்கொண்டார். கோவில் மீண்டும் களைகட்டத் தொடங்கியது. அதிகளவில் பக்தர்கள் வரத் தொடங்கினர். காடாக இருந்த இடத்தில் படிப்படியாகக் குடியிருப்புகள் பெருகி இன்று ஊராக வளர்ந்துவிட்டது.ஆரம்ப காலத்தில் இங்கு உயிர் பலி போன்ற பூஜைகள் நடந்து வந்தன. ஆனால், பின்னர் அம்மனின் ஆணைக்கு இணங்க அவை நிறுத்தப்பட்டன. ஆகம விதிமுறைக்கு முரண்பாடாக சன்னதி இருப்பதால், அதை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது..கோவிலின் நுழைவுவாயில் தெற்கு நோக்கி அமைந்திருக்க, கிழக்கு நோக்கிய புதிய கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம், விமானம் ஆகியவையுடன் புதிய கோவில் உருவானது. கருவறையில் மூலவர் சிலை ஆகமப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டு 20.2.2011 அன்று முதல் கும்பாபிஷேகமும், அதைத் தொடர்ந்து 8.3.2023 அன்று இரண்டாவது கும்பாபிஷேகமும் சீரோடும் சிறப்போடும் நடந்து ஆலயம் புதுப்பொலிவுடன் திகழ்கிறது.அம்மனின் பெயர்தான் வக்ர காளி. ஆனால் குணத்தில் சாந்த சொரூபி. உயிர்பலிகள் கேட்பதில்லை; உக்கிரம் காட்டுவதில்லை; தன் பாதம் பணிந்தோரைக் காக்கத் தவறியதும் இல்லை. பொதுவாக துர்க்கை, காளி கோவில்கள் வடக்கு நோக்கி இருக்கும். ஆனால் இங்கு வித்தியாசமாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்..மூன்று புறமும் சுவரில்லாமல் திறந்த வெளி கொண்ட மகா மண்டபம் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. மையப்பகுதியில் பலிபீடமும் காளியை நோக்கியவாறு சிம்ம வாகனமும் அமைக்கப்பட்டுள்ளது. பலிபீடத்தின் கிழக்குப் பகுதியில் ஐம்பொன்னால் வடிக்கப்பட்ட திரிசூலம் காணப்படுகிறது. அர்த்தமண்டப நுழைவாயிலில் தெற்குப் பகுதியில் இருமுக விநாயகரும், வடக்குப் பகுதியில் முருகனும் அருள்பாலிக்கின்றனர்.நுழைவாயிலை ஒட்டி துவாரபாலகிகள் இருவர் காவல்புரிய, கருவறையில் சுமார் ஏழடி உயரத்தில் சிவன் கிடந்த நிலையில் இருக்க, அவர் மார்பின் மேல் தனது வலது காலை வைத்த வண்ணம், வலது கைகளில் சக்கரம், கொடுவாள், திரிசூலம், சுக்குமாந்தடி, வாள் ஆகியவற்றைத் தாங்கியும்; இடது கைகளில் சங்கு, வில் அம்பு, கபாலம், அக்னி மற்றும் கேடயத்தை ஏந்தியும் வக்ர காளியம்மன் எழுந்தருளியுள்ளார்.முக்கண்களுடன் வாயின் இருபுறமும் சிங்கப்பற்கள் தெரிய, அவரது நீண்ட நாவில் பல்லியும், பீடத்தில் ஒன்பது நவகிரகங்கள் வரிசையாக நின்ற நிலையில் இருப்பது சிறப்பு. பத்து புஜங்கள் இருப்பதால் த்ரிநேத்திர தசபுஜ வக்ர காளியம்மன் எனவும் அழைக்கப்படுகிறார். கருவறைக்கு மேல் ஏகக் கலசம் தாங்கிய இருநிலை விமானம் கோவிலுக்கு அழகு சேர்க்க, அதை பிரத்யங்கரா தேவி, மகாகாளி, வெக்காளியம்மன் ஆகியோரது சுதைச் சிற்பங்கள் அலங்கரிக்கின்றன.உள் பிராகாரத்தில் வலம்புரி விநாயகர், சப்தமாதர், மேதா தட்சிணாமூர்த்தி மற்றும் அஷ்டபுஜ காலபைரவர் ஆகியோரது தனிச் சன்னதிகள் உள்ளன. காரண ஆகம விதிப்படி காலை 9 மணிக்கும் மாலை 6 மணிக்கும் இரு கால பூஜைகள் நடைபெறுகின்றன. செவ்வாய், வெள்ளி, பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. குறிப்பாக காளிக்கு மிகவும் உகந்த நாளான அமாவாசை தினத்தன்று 12 வகையான திரவியாபிஷேகங்களுடன் குருதி பூஜை, தொடர்ந்து அலங்கார ஆராதனைகள் நடைபெறும். தொடர்ந்து ஒன்பது அமாவாசை சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு அம்மனைப் பணிந்து வேண்டினால் விவாகத்தடை நீங்குதல், குழந்தைப்பேறு கிட்டுதல், பில்லி சூனியப் பாதிப்புகள் விலகுதல், சொத்து பிரச்னை, வழக்குகள் போன்றவற்றில் நல்ல தீர்ப்பு போன்ற வேண்டுதல்கள் நிறைவேறுகின்றதாம். அம்மன் பீடத்தில் நவகிரகங்கள் அருள்பாலிப்பதால் இந்த அம்மனைத் தொழுதால் நவகிரகங்களின் தாக்கம் அறவே குறைந்து விடுகிறதாம்..புரட்டாசி பௌர்ணமி மற்றும் மாசி உத்திரத்தன்று நடத்தப்படும் சண்டியாகம் இத்தலத்தில் பிரசித்தி பெற்றதாகும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் பங்குபெறுவர். நவராத்திரி நாட்களில் தினசரி வேள்விகளுடன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அன்னை அருளாட்சிபுரிவார்.அம்மன் ஆலயம் என்றாலே ஆடி வெள்ளிக்கிழமைகள் விசேஷம்தான். இந்த ஆலயமும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆடி வெள்ளிக்கிழமைகளில் வெவ்வேறு அலங்காரங்களில் இந்த அம்மனைக் காண கண்கோடி வேண்டும். ஆடி கடைசி செவ்வாய்க்கிழமையன்று கொண்டாடப்படும் ஆடிக்குண்டம் தலையாயப் பெருவிழாவாகும்.கணபதி ஹோமத்துடன் தொடங்கி காப்புக் கட்டுதல், சப்த மாதர் வேள்வி, அஷ்டபுஜ பைரவர் ஹோமம், விளக்கு பூஜை, சக்தி கரகம், பம்பை உடுக்கை வாத்தியத்துடன் பச்சைக்காளி, பவளக்காளி வேடத்துடன் நடனம் ஆடியபடி வருதல், திருக்கல்யாணம், ஊஞ்சல் உற்சவம், மயான பூஜை, அடுத்த நாள் செவ்வாய்க்கிழமையன்று காலை 11 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் விரதம் இருந்து 12 அடி நீளம் உள்ள குண்டத்தில் நடந்து வருவதைக் காணும்போது மெய்சிலிர்க்கும். இப் பெருவிழா மகா அபிஷேகத்துடன் நிறைவு பெறும். இவ்வாண்டு 15.8.2023 செவ்வாயன்று குண்டம் திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் கலந்துகொண்டு அம்மனை வேண்டினால் அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேறும் என்பது நம்பிக்கை!எங்கே இருக்கு ?கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி. பிரிவு அருகே அகர்வால் பள்ளி சாலையில் வக்ரகாளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. கோவை ரயில் நிலையத்திலிருந்து தடம் எண் 11, 11 ஏ பேருந்து மூலம் கோயிலை அடையலாம்.தரிசன நேரம் காலை 9 - 11; மாலை 6 – இரவு 8. (விழாக் காலங்களில் நேரம் மாறுதலுக்கு உட்பட்டது)