-பொ.பாலாஜிகணேஷ்பல்வேறு திருநாமங்களில் கோயில் கொண்டுள்ள ஆனைமுகன், ‘ஆதி தாகம் தீர்த்த விநாயகர்’ என்ற பெயரில் சிதம்பரத்தில் தனி ஆலயத்தில் எழுந்தருளியுள்ளார். பிள்ளையாருக்கு இந்தப் பெயர் ஏற்பட்டதன் பின்னணி என்ன?.துர்வாசமுனிவர் தில்லைக்கு வந்தபொழுது சிதம்பரம் நடராஜர் மற்றும் ஆனந்தீஸ்வரரை தரிசித்துவிட்டு வடக்கு நோக்கி நடந்தார். அப்போது அவருக்குக் கடுமையான தண்ணீர் தாகம் ஏற்பட்டது. சோர்ந்துபோன அவர், ’’இறைவா! இந்த வனத்தில் தண்ணீர் எங்கேயும் இல்லை. நான் என்ன செய்ய?’’ என்று தில்லை நடராஜர் இருக்கும் திசை நோக்கி கரம் குவித்து கேள்வி எழுப்பினார்.என்ன அதிசயம்! மறுவிநாடியே, ‘’உன் தாகம் விரைவில் தீரும். அங்கேயே நில்!’’ என்று இறைவனின் குரல் அசரீரியாய்க் கேட்டது..சிறிது நேரத்தில் துர்வாச முனிவரின் முன்னால் தோன்றிய விநாயகப்பெருமான், தன் அங்குசத்தால் பூமியில் ஒரு கீறல் இட்டு, அதிலிருந்து வரும் தண்ணீரை அருந்தச் செய்தார்.மகிழ்ந்த துர்வாச முனிவர், ’’இறைவா! உன் புத்திரரை அனுப்பி என் தாகத்தைத் தீர்த்ததற்கு நன்றி! உன்னை நம்பி வந்த யாரையும் நீ கைவிட்டதில்லை என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி!’’ எனக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்..விநாயகர் தன் அங்குசத்தால் கீறிய இடம் ஒரு கிணறாக உருவானது. அவ் வனப்பகுதி வழியாக வருவோர் போவோர் அதைப் பயன்படுத்தத் தொடங்கினர். பின்னொரு காலத்தில் அங்கே வந்த ஒரு முனிவர் அந்த இடத்தின் புனிதத்தை அறிந்து அங்கே ஒரு விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்தார். நாட்கள் நகர்ந்தது. இயற்கைச் சீற்றங்களால் உருக்குலைந்த அந்தக் கிணறு முழுவதாக மூடப்பட்டுவிட்டது. ஆனால் விநாயகர் சிலை மட்டும் அதன் மேல் அப்படியே வைக்கப்பட்டது. மக்கள் அந்த விநாயகருக்கு ஆதி தாகம் தீர்த்த விநாயகர் என்ற திருநாமம் சூட்டி அங்கேயே வழிபடத் தொடங்கினர்..காலங்கள் பல உருண்டோடின. ஒருகட்டத்தில் விநாயகருக்கு ஓடுகள் வேய்ந்த கட்டடம் கட்டப்பட்டது. பிற்காலத்தில் அதை நூதன ஆலயமாகக் கட்டி இன்றுவரை தொடர்ந்து மிகச் சிறப்பான முறையில் பக்தர்களால் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.ஆலய நுழைவுவாயிலுக்கு மேலே நடுவில் விநாயகரும், அவருக்கு இருபுறம் ஐயப்பனும் சிவலிங்கமும்; இருபுற மூலைகளில் நந்தியும் காட்சிதருகிறார்கள். சுதையாலான திருமேனி. உள்ளே சென்றால் மகாமண்டபம். அதில் ஆஞ்சநேயர், திரெளபதி அம்மன், நாகதேவதை, துர்க்கை, முருகன், பராசக்தி, ராகவேந்திரர், ஐயப்பன், சிதம்பரேஸ்வரர், சிவகாமி, பிரத்யங்ரா, வள்ளலார், நவகிரகம், பைரவர் மற்றும் வக்ரகாளியம்மன் சன்னதிகள் அமைந்துள்ளன..அர்த்தமண்டபத்தைத் தொடர்ந்து கருவறையில் கிழக்கு நோக்கி விநாயகப் பெருமான் அமர்ந்த நிலையில் அற்புதக் காட்சி தருகிறார். அவருக்குக் கீழே மூஞ்சூறு வாகனமும் பலிபீடமும் அமைந்துள்ளன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, சேனையர், வீரபெருமாள் மற்றும் பிரம்மா உள்ளனர்.திருமணத்தடை நீங்க, புத்திரப்பேறு கிட்ட இங்கு விசேஷ பிரார்த்தனை செய்யப்படுகிறது. ஒரு தேங்காயில் மஞ்சள் தடவி, குங்குமம் வைத்து அதை வெள்ளைத் துணியால் விநாயகரின் வயிறில் கட்டி விடுகிறார்கள். பிறகு அதற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு அந்தத் தேங்காயை பிரார்த்திப்பவர்களிடமே கொடுத்து விடுகிறார்கள். அதை அவர்கள் எடுத்துச் சென்று வீட்டில் பூஜை அறையில் வைக்க வேண்டும். இப்படிச் செய்தால் விரைவாக திருமணமும், புத்திரப் பாக்கியமும் கிட்டுகிறது என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்..வீட்டில் முதன்முதலாக போர்வெல் போடுவதற்கு முன்னால் இக்கோயிலில் வந்து பிரார்த்தனை செய்துகொள்கிறார்கள். பிறகு பணிகளைத் தொடங்கினால் நல்ல தண்ணீரும், நல்ல நீரோட்டமும் கிடைப்பதாக நம்புகின்றனர்.உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் விநாயகருக்கு அபிஷேகம் செய்யும் தீர்த்தத்தை வாங்கி அருந்தினால் நோய் பாதிப்புகள் படிப்படியாகக் குறைவதாகக் கூறப்படுகிறது.கடலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடக்கும் ஆலயங்களில் இதுவும் ஒன்று. விநாயகர் சதுர்த்தி அன்று காலையில் ஆதி தாகம் தீர்த்த விநாயகருக்கு மகாஅபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சி தருவார். சங்கடஹர சதுர்த்தி நாளில் மூலவருக்கு அருகம்புல் மாலை சாற்றி கொழுக்கட்டை படைத்து பக்தர்கள் சர்வ பிரார்த்தனை மேற்கொள்கிறார்கள். மேலும் இங்குள்ள தெய்வங்களுக்கு அவர்களுக்குரிய நாளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது..அடுத்தமுறை சிதம்பரம் வரும்போது ஆதிதாகம் தீர்த்த விநாயகரை தரிசிக்க மறக்காதீர்கள்!எங்கே இருக்கு?சிதம்பரம் கஞ்சி தொட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கவேண்டும். அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் திருவள்ளூர் தெருவில் ஆதி தாகம் தீர்த்த விநாயகர் கோயில் உள்ளது.தரிசன நேரம்காலை 7 - 11; மாலை 5 - இரவு 8.