ஆலமரத்தில் இயற்கையாகத் தோன்றி பக்தர்களின் இன்னல்களைப் போக்கி வருகிறார், சென்னை அரசினர் தோட்டத்தில் ஆலயம் கொண்டுள்ள ஆலமர இயற்கை விநாயகர். பிரபலமான இடத்தில் இருப்பதால் இவரை பல பிரபலங்களும் அடிக்கடி வந்து தரிசித்துச்செல்கின்றனர். இவர் தன்னை ஆலமரத்தில் வெளிப்படுத்திக் கொண்டது ஓர் அற்புதமாகும்.அரசினர் தோட்டப் பகுதியில் அப்போது ஒரு சிவன் கோவில் இருந்தது. அங்குள்ள சிவனை வழிபட அருகிலுள்ள நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், கடைகளில் வேலை பார்ப்பவர்கள், சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு வருபவர்கள், தமிழ்நாடு தேர்வாணையத்திற்கு வருவோர் எனப் பலர் சென்று வழிபடுவது வழக்கம். 1968-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் தேதி அந்த சிவன் கோவிலுக்கு குடமுழுக்கு நடந்தது. அன்று அந்த சிவனை வழிபடச் சென்ற பக்தர் ஒருவர் வெயில் அதிகமாக இருக்க சற்று இளைப்பாறுவதற்காக அருகிலுள்ள ஓர் ஆலமரத்தடியில் அமர்ந்தார். அசதி காரணமாக அப்படியே கண்ணயர்ந்துவிட்டார். சிறிதுநேரத்தில் அவர் கனவில் யானை ஒன்று தோன்றி, ‘’நான் இங்கே இருப்பது உனக்குத் தெரியவில்லையா?’’ எனக்கேட்டது.திடுக்கிட்டு கண்விழித்த அவர் முன்பாக அந்த மரத்தின் வேர்ப்பகுதியில் ஓரிடத்தில் அச்சு அசலாக விநாயகர் காட்சி தந்தார். ஆச்சரியமடைந்த அவர் அங்கிருந்த பக்தர்கள், தெரிந்தவர்கள், நண்பர்களை அழைத்து வந்து காண்பித்தார். ஆலமர வேரில் விநாயகரே அமர்ந்திருக்கும் கோலத்தைக் கண்டதும் அனைவரும் தலையில் குட்டிக்கொண்டு, தோப்புக்கரணம் போட ஆரம்பித்து விட்டனர். மறுநாளே அந்த ஆலமர வேர் விநாயகருக்கு தடபுடலாக பூஜைகள் துவங்கியது. இதுபற்றி அறிந்ததும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஆலமர வேர் விநாயகரை வணங்கிச் சென்றனர். இவரே ஆலமர இயற்கை விநாயகர் என அழைக்கப்படுகிறார். முதன் முதலாக ஆலமரத்தில் விநாயகரைக் கண்ட அந்த பக்தரே பல்லாண்டுகளாகக் கோவிலைப் பராமரித்து பூஜைகளையும், உற்சவங்களையும் தொடர்ந்து செய்து வந்தார்.விருட்சங்களைகடவுள்மூர்த்தங்களுக்குஇணையாகக்கருதிவலம் வந்துவழிபடுவர். ஆனால் இங்கு விருட்சத்திலேயே விநாயகர்தோன்றி அருளுவதால் ஆலமர இயற்கை விநாயகர் அதிக ஆற்றல் கொண்டவராக விளங்குகிறார்..கேட்டதைத் தரும் பெரும் வரப்பிரசாதி. பல அரசியல் பிரமுகர்கள் தங்கள் காரியங்களைத் துவங்கும் முன்பு இங்கு வந்து வணங்கிச் செல்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர். தினமும் காலையில் ஆனைமுகனுக்கு அபிஷேகமும் பூஜையும் நடைபெறும். திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகள் இவரை வழிபட மிகவும் உகந்த நாட்களாகும்.23 பரிவார மூர்த்திகள், அம்பாள் சமேத சிவன், நவகிரக சன்னதி, பைரவர் ஆகியோரும் இங்கு எழுந்தருளியுள்ளனர். பிரதோஷத்தன்று சிவபெருமானுக்கு மாலை 5.30 மணியளவிலும், அஷ்டமியன்று பைரவருக்கு இரவு 7.30 மணியளவிலும், சங்கடஹர சதுர்த்தியன்று காலை 7.30 மணிக்கு ஹோமமும், 8.30 மணிக்கு அபிஷேகமும் சிறப்பாக நடைபெறுகிறது. ஆலமர இயற்கை விநாயகரை முதலில் கண்ட ஜூலை 14ஆம் தேதியை அவரது ஜெயந்தி தினமாகக் கொண்டாடுகிறார்கள். விநாயகர் சதுர்த்தி, தைப்பொங்கல், தமிழ் வருடப்பிறப்பு ஆகிய நாட்கள் விசேஷமானவை.இவர் பிரார்த்தனைகளை விரைவில் நிறைவேற்றும் விநாயகராக விளங்குகிறார். இவருக்கு சிறப்பான வழிபாடு ஒன்று நடக்கிறது. பக்தர்கள் நாட்டு சர்க்கரையை வாங்கி வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் ஆலமர இயற்கை விநாயகருக்குப் படைத்து தொடர்ந்து 11 வாரங்கள் வழிபடுகின்றனர். பின்னர் சிதறு தேங்காய் அடித்து வழிபட, நினைத்தது நிறைவேறுகிறதாம். சில பக்தர்களின் கனவில் இந்த விநாயகர் தோன்றி தன் ஆலயத்துக்கு அவர்களை வரவழைத்து அருள் வழங்கியுள்ள அற்புதங்களும் நடந்துள்ளன.தமிழ்நாடு அரசின் பன்னோக்கு மருத்துவமனையின் பின்புறம் கோவில் அமைந்துள்ளதால், உடல்நலம் பாதிக்கப்பட்ட தங்கள் உறவினர்களுக்காக வந்து வேண்டிச்செல்லும் பிரார்த்தனை தலமாகவும் இது திகழ்கிறது. எங்கே இருக்கு?தமிழ்நாடு அரசின் ஓமந்தூரார் தோட்டத்தில், பன்னோக்கு மருத்துவமனையின் பின்புறம் இக்கோவில் அமைந்துள்ளது. சென்னை அண்ணாசாலை சிம்சன் பேருந்து நிறுத்தத்திலோ, அரசு பன்னோக்கு மருத்துவமனை நிறுத்தத்திலோ இறங்கி கோவிலை அடையலாம்.தரிசன நேரம்காலை 7.30 - பகல் 12; மாலை 5.30 - இரவு 8. -இரா.இரகுநாதன்