-மீரா திருநாவுக்கரசு எது சிறந்த செல்வம் என்பது அவரவர் எண்ணங்களைப் பொறுத்தது. அது பொருட் செல்வமாக இருக்கலாம் அல்லது குழந்தைச் செல்வம், கல்விச் செல்வம், அருட் செல்வம், வீடுபேறு என்று எதுவாகவும் இருக்கலாம். இப்படி நாம் வேண்டும் அனைத்துச் செல்வங்களையும் அருளும் அம்மன் தான் சௌபாக்ய சுந்தரி அம்மன்..இந்த சௌபாக்ய சுந்தரி அம்மனை சௌபாக்ய துர்க்கை அம்மன், சௌபாக்ய யோக வராஹி அம்மன், சௌபாக்யதாயினி என்று பல பெயர்களில் பக்தர்கள் வணங்கி வருகிறார்கள். இந்த சௌபாக்ய சுந்தரி என்ற நாமம் அம்மனுக்கு ஏற்பட்டது எப்படி என்பது ஒரு சுவாரசியமான கதை.ஒருமுறை பார்வதி தேவி ஈசனின் திருக்கண்களை விளையாட்டாக மூடிவிட, அண்ட சராசரமும் இருளில் மூழ்கியது. பின்பு ஈசன் தனது நெற்றிக்கண்ணைத் திறந்து உயிர்களை ரட்சித்தார். விளையாட்டு விபரீதமானதால், அன்னையை பூலோகம் சென்று தன்னை நோக்கி தவம் மேற்கொள்ள ஆணையிட்டார் ஈசன்.அதன்படி அன்னை பார்வதி தேவி காஞ்சிபுரம் வந்து கம்பா நதிக்கரையில் மணலால் லிங்கம் உருவாக்கி பூஜை செய்து ஈசனை வணங்கி வந்தார். பின்பு அவர் முன் தோன்றிய ஈசன், அன்னைக்கு மற்றொரு வேலை செய்யவும் பணித்தார். இரண்டு நாழி, அதாவது 2 படி நெல் கொடுத்து, இதனை வைத்து இங்குள்ள மக்களுக்கு நல்ல காரியங்களைச் செய்யுமாறு கூறினார். அம்மையும் அதன்படி, 2 நாழி நெல்லை வைத்து காமக்கோட்டம் அமைத்து 32 வகை அறங்களை சிறந்த முறையில் செய்து வந்தார்.அன்னதானம், ஓதுவித்தல், சிறைப்பட்டோருக்கு உணவு அளித்தல், ஊருக்கு உணவளிப்பது, கண்ணேறகற்றல் (கண் திருஷ்டி கழித்தல்), பசுவுக்கு உணவு வழங்குதல், ஆவினம் பெருக சேவினம்விடுதல் (இனப்பெருக்கத்திற்காக ஏறு வளர்த்தல்), தர்ம கல்யாணம், நோய்க்கு மருந்து, எண்ணெய் ஈதல், கடன் தீர்த்தல், மடம் கட்டுதல், மயிர்வினைஞர் நல்குதல் (மயிர் களைய உதவுதல்), வண்டிப்பாதை அமைத்தல், சோலை வைத்தல், இரப்போர்க்கு ஈதல், ஈமக்கடன் கழித்தல், கன்னிகாதானம், சிறுவர்க்கு சிற்றுண்டி, ஆவுரிஞ்சுதறி (விலங்குகளுக்கு நீர் கொடுத்தல்), காதோலை ஈதல், மகப்பேறு பார்த்தல், கண்ணாடி கொடுத்தல், தண்ணீர் பந்தல் அமைத்தல், ஆடை அழுக்கு களைதல், சாலை அமைத்தல், இல்லறம் இனிது நடத்துதல், குடி தண்ணீர் குளம் அமைத்தல், செழுங்கிளை தாங்குதல் (குழந்தை வளர்த்தல்), சுண்ணம் - இலை - பாக்கு அளித்தல், குழந்தைக்கு பால் கொடுத்தல், சுமை இறக்க சுமைதாங்கி அமைத்தல் ஆகியவை அந்த 32 அறங்கள் ஆகும்.இதனை,நண்ணும் மன்னுயிர் யாவையும் பல்க நாடு காதலில் நீடிய வாழ்க்கைப்புண்ணி யத்திருக் காமக்கோட் டத்துப் பொலிய முப்பதோடு இரண்டு அறம் புரக்கும் (தி. 12, ப. 19, பா. 71) என்று சேக்கிழார் பெருமான் அன்னை பற்றியும், காஞ்சி காமக் கோட்டத்தைப் பற்றியும் பாடுகிறார்.இந்த அனைத்து திருப்பணிகளையும் அன்னை பூலோகத்தில் ஒரு சாதாரண மனிதராகச் செய்து முடித்தார். ஈசன் மனம் மகிழ்ந்து அன்னையை வாழ்த்தினார். மக்கள் அன்னையிடம் வேண்டும் அனைத்தையும் வழங்கும் வரம் அளித்தார். ஆகவே தான் இந்த அருப் பெருஞ்செயலை செய்த அன்னையை, துர்வாச மகரிஷி, “சௌபாக்ய சிந்தாமணி" என்று புகழ்கிறார். அன்னை சௌபாக்ய சுந்தரியாக பக்தர்களுக்கு சகல சௌபாக்யங்களும் வழங்கும் அன்னையாக பல திருக்கோவில்களில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். நாமும் அன்னையிடம் வேண்டிய செல்வம் கேட்டு சௌபாக்யம் அடைவோமாக!