- வடிவேல் முருகன் அடுக்கடுக்கான மலைகளில் பொழியும் மழைநீர் பல காடுகள், ஓடைகள் வழியாக ஓடிவந்து, ‘சோ’வென பெரும் அருவியாய்க் கொட்டி அழகுக் காட்டுவது மணிமுத்தாறு. இந்த அருவிக்கு மேலேதான் காஷ்மீரைப் போல் இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் மாஞ்சோலை உள்ளது. மணிமுத்தாறிலிருந்து மலைப்பாதையில் பயணம் மேற்கொண்டால் காணும் இடமெல்லாம் பச்சைப்பட்டு விரித்த மாதிரி தேயிலைத் தோட்டங்கள். இந்த இயற்கையின் சீதனத்தை வைத்த கண் வாங்காமல் அனுபவித்துக் கொண்டே போனால் மலைவாசஸ்தலங்களான மாஞ்சோலை, காக்காச்சி, நாலு முக்கு, குதிரை வெட்டி என ஒவ்வொரு குடியிருப்பையும் தாண்டி ‘ஊத்து’ தலம் வருகிறது. இங்கு சிறிய அளவில் விஜய மகாகணபதி கோயில் அமைந்துள்ளது. நூறு வருடங்களாக இந்த மலைப்பகுதியில் தேயிலை, காபி, ஏலக்காய் ஆகிய பணப்பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பல மலைக்கிராமங்களில் தேயிலை எஸ்டேட்கள் நன்கு செயல்பட்டு வருகிறது. இந்தப் பயிர்கள் செழிப்பாக வளர தோட்டத் தொழிலாளர்கள் ஒவ்வொரு பருவமழை துவக்கக் காலத்திலும் இத்தலத்தில் அமைந்துள்ள முழுமுதல் கடவுளான விஜய மகாகணபதிக்கு பொங்கலிட்டு வணங்குவது வழக்கம். அவர்களின் நம்பிக்கை பொய்க்காமல் போதுமான அளவு மழை பெய்து, வருடம் முழுவதும் தடையில்லாமல் வேலை வாய்ப்பு கிடைத்து, அவர்களது வாழ்க்கைச் சக்கரம் நன்றாக ஓடுகிறது..ஊரின் மையப் பகுதியில் கிழக்குப் பார்த்த வண்ணம் கருவறை, அர்த்த மண்டபம் என்ற அமைப்பில் சாலக்கோபுர வாசலுடன் விநாயகர் கோயில் அமைந்துள்ளது. கருவறை மூலவராக விஜய மகா கணபதி சாந்நித்யமிக்கத் தெய்வமாக எழுந்தருளியுள்ளார். இவர் அருகே ராகுவும் எதிரே மூஞ்சூறு வாகனமும் அமைந்துள்ளன. இந்த ஆனைமுகத்தானை நம்பிக்கையோடு வணங்கிவர கல்வியில் உயர்ந்த நிலை, உடல்நலனில் மேம்பாடு, தொழில் வளர்ச்சி, எடுத்த காரியத்தில் வெற்றி என அனைத்து விஷயங்களும் அமோகமாக நடப்பதாக இங்குள்ள தொழிலாளர்கள் பரவசத்தோடு சொல்கிறார்கள். தினமும் இரு கால பூஜை நடைபெறுகிறது. விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. சித்திரை மாதம் முதல் வாரம் கொடியேற்றும் நிகழ்ச்சியும், இரண்டாம் வாரம் இருநாள் விழாவாக கொடை நிகழ்ச்சியும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதுசமயம், மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து கலந்துகொள்வார்கள். இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டியும், நள்ளிரவு வரை மேளவாத்திய கச்சேரியும் நடைபெறும். .வாழ்வின் கவலைகள் யாவும் மறந்து இயற்கை அன்னை நமக்குத் தந்த சீதனத்தை, மலைவாசஸ்தலத்தில் விஜய மகாகணபதி வீற்றிருக்கும் பேரழகை அவசியம் ஒருமுறை குடும்பத்துடன் வந்து தரிசித்து மகிழலாமே! எங்கே இருக்கு?திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் இருந்து மணிமுத்தாறு 5 கி.மீ. அங்கிருந்து குறுகலான மலைப்பாதையில் கோதையாறு செல்லும் வழியில் 48 கி.மீ. தொலைவில் மலையின் உச்சியில் ஊத்து தலம் அமைந்துள்ளது. பேருந்து நிறுத்தத்திலேயே கோயில் உள்ளது. தரிசன நேரம்காலை 7.30 - 8.30; மாலை 5 – இரவு 7.30.