- கணேஷ் கல்யாணராமன் நேரடியா விஷயத்துக்கு வரேன்... தன்னோட கும்பாபிஷேகத்துக்காக, தன்னோட குழந்தைகளான உங்க எல்லாரையும் ஸ்ரீ அலங்காரவல்லித் தாயார் சமேத ஸ்ரீ அனந்தநாராயணப் பெருமாள் அழைக்கின்றார்! முதலாம் ராஜராஜன் கட்டிய பிரமாண்ட சிவாலயம் தஞ்சைப் பெரிய கோயில் - இது எல்லார்க்கும் தெரியும். இரண்டாம் ராஜராஜன் கட்டிய பெருமாள் கோயில் இது. இங்கு பெருமாள் பிரமாண்டம்!.நாகப்பட்டினத்திலிருந்து ‘சிக்கல்’ வழியாகச் சென்றால் 7 கி.மீ. தூரத்தில் உள்ளது, ‘ஆவராணி’ என்கின்ற அழகிய சிற்றூர். உங்க வசதிக்காக லீவு நாளான ஞாயிற்றுக்கிழமை அன்னிக்கே (10.9.2023) தன் குடமுழுக்குப் பெருவிழாவைக் கொண்டாடுகிறார் பெருமாள்! நீங்க நிதானமா வந்து கலந்து கொள்வதற்காக (காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள்) உகந்த நேரமும் குறித்திருக்கிறார் பெருமாள்! 12-ஆம் நூற்றாண்டில், இரண்டாம் ராஜராஜசோழன் இவ்வாலயத்தைச் சீரமைத்து நிகழ்த்தியது போலவே, 21-ம் நூற்றாண்டில் நாம் இப்போது கும்பாபிஷேகம் காணப்போகிறோம். இடையில் 15-ஆம் நூற்றாண்டிலே விஜயநகர மன்னன் திப்பய்ய மஹாராயரும் புதுப்பித்துக் கட்டி இருக்கிறார். ’ஆபரணதாரி’ என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் இவ்வூர் பேச்சுவழக்கில் இன்று ‘ஆவராணி’ என்று வழங்கப்படுகிறது. ஆலயத்தை ஒரு வலம் வந்துவிட்டு, தல வரலாற்றையும், ஆழ்வாருக்கும் இவ்வூர் பெருமாளுக்கும் இடையில் நடந்த திருவிளையாட்டையும் காண்போமா?.சுற்றிலும் பச்சைப்பசேல் வயல் சூழ்ந்த கிராமத்தின் மையத்தில் கோயில். வாசலில் அல்லிக்குளம்! சிறு விஷ்வக்சேனர் (விநாயகர்) குடில்கோயில். நாகர். பிரதான வாயில். கிழக்குப் பார்த்த அமைப்பு. விதானத்தில் நிதானமாய் சயனித்து நம்மை வரவேற்று ஆசிர்வதிக்கிறார் பெருமாள். உள்ளே நுழைந்தவுடன் துவஜஸ்தம்பம், பலிபீடம், இடப்புறம் ஆழ்வார் சந்நதி. படியேறி மேலே சென்றால், பெருமாளைப் பார்த்தபடி பெரிய திருவடி (கருடாழ்வார்). மேற்கூரையில் தசாவதாரக் காட்சிகள் அழகு சொட்ட காட்சி தருகின்றன. அவற்றை ரசித்தபடி பூசித்தபடி செல்ல, இடப்பக்கம் மீண்டும் விஷ்வக்சேனர் சந்நதி… குட்டிக்கொண்டு, தோப்புக்கரணம் போட்டுக் கடந்தால் வலப்பக்கம் ஸ்ரீ பத்ம ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். ராமபக்தரைப் பணிந்து வணங்கி முன்னேறினால்… பெருமாள்! உண்மையில் சொல்ல வார்த்தைகளே இல்லை. நேரில் பாருங்கள். அசந்து போவீர்கள். அவர் பெரும் ஆள்தான் என்று வியந்து போவீர்கள்.. இருபத்தியோரு அடி நீளத்தில் பிரமாண்டமான பள்ளி கொண்ட பெருமாள்! ஏழு தலை ஆதிசேஷன் மீது… தலைக்கு மரக்காலை வைத்துக்கொண்டு, நம்மை வைத்த கண் வாங்காமல் பார்க்க வைக்கின்ற அழகு! அவரும் நம்மையே பார்த்தபடி இருப்பது சிலிர்ப்பு. கையில் சக்ராயுதம், காதுகளில் குண்டலம், தலையில் மணிமகுடம், உடல் முழுதும் ஆபரணங்களைத் தரித்திருப்பதால்தான் இவ்வூர் பெயர் ‘ஆபரணதாரி’. பத்து விரலிலும் மோதிரம், காலில் தண்டை, நாபிக்கமலத்தில் நான்முகன், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக இவ்வளவு பெரிய திருமேனியராய்க் காணும்போது, ஆழ்வாரின் ‘இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்’ என்னும் வரிகள் உள்ளோடுகின்றன. சந்நதி உள்ளே பிருகு மகரிஷி, வியாச முனியும் சேவித்தபடி இருக்கின்றனர். ஒரே வாசலால் சேவிக்க முடியாதபடி பெரிய பெருமாள் ஆதலால், திருமுடி-திருவடி தரிசிக்க இரு ஜன்னல்களும் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று வழிகளாலும், ஆயிரம் கண்களாலும் கண்டு, ஆயிரம் நாவினால் போற்றினாலும் இவர் அதிசய அழகை சொல்லி முடியாது! நீங்களே போய் ஆசை தீர அந்த ஆரா அமுதைப் பருகினாலும் தாகம் தீராது..சந்நதியின் வலதுபுறம் இருக்கின்ற ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள், ஸ்ரீ யாதவ நாராயணர், ஸ்ரீசெல்வரை தரிசித்துவிட்டு பிராகாரத்திற்கு வந்தோம். ஆஹா… தாயார் சந்நதி! சுற்றிலும் நந்தவனம். பூ மரங்களே சாமரங்களாக… பழ மரங்கள் நிழற் குடைகளாக அனந்த நாராயணரின் ப்ரியசகி ‘அலங்காரவல்லி’ என்கிற திருநாமத்தோடு அமர்ந்து அருளை, பொருளை, ஆற்றலை, அறிவை, அன்பை அள்ளி அள்ளித் தருகிறாள்!.தாயார் அழகா, பெருமாள் அழகா என்று மனசில் ஒரு பட்டிமன்றம் நடத்தியபடியே பிராகாரம் சுற்றி வருகையிலே, திருமாலின் மார்பிலே நித்யவாசம் செய்வதால்தான் நான் அழகாக இருக்கிறேன் என்று தாயாரும், என் மார்பிலே ஸ்ரீதேவி குடியிருப்பதால்தான் நான் அழகாக இருக்கிறேன் என்று பெருமாளும் பதில் உரைத்து, வாயடைத்துப் போக வைத்தனர்! பலிபீடத்தை அடைந்து நமஸ்கரித்து அமர்ந்துகொண்டு ‘பஞ்ச நாராயண க்ஷேத்திரம்’ பற்றி அறிந்து கொள்வோம். இவ்வூரின் அருகில் இருப்பது ஆழ்வாரால் பாடப்பெற்ற ‘திருக்கண்ணங்குடி’ என்னும் திவ்விய க்ஷேத்திரம். இது 108இல் ஒன்று. அதன் அபிமானத் தலம் இந்த ஆவராணி மற்றும் 4 தலங்கள். அவையே பஞ்ச (ஐந்து) நாராயண க்ஷேத்திரம். இவற்றில் சயனத் திருக்கோலம் ஆவராணி மட்டுமே என்பது தனிச்சிறப்பு. நின்றான், இருந்தான், நடந்தான், கிடந்தான் என்பதில் கிடந்த திருக்கோலம் சிலாகித்துக் கூறப்பட்டுள்ளது பெரியோர்களால்.. 1. திருக்கண்ணங்குடியில் தாமோதர நாராயணர் – நின்ற, அமர்ந்த திருக்கோலம். 2. தேவூர் தேவயநாராயணர் – நின்றான். 3. வடக்காளத்தூர் வரத நாராயணர் – நின்றான். 4. கீழ்வேளூர் யாதவ நாராயணர் – நின்றான். 5. ஆவராணி அனந்த நாராயணர் – கிடந்த திருக்கோலம். திருவிளையாடல்: நாமெல்லாம் அறிவோம் திருமங்கை ஆழ்வார், மன்னராக இருந்து பின் கள்வனாய் மாறி பொருள் சேர்த்து திருவரங்கநாதருக்குத் திருப்பணிகள் செய்த வரலாறு. அவர் ஒருமுறை திருடச் சென்றபோது நம் பெருமாள் செய்த லீலைதான் இத்தல வரலாறு. பணக்காரத் திருமண கோஷ்டி பெருத்த பணம், நகைகளுடன் வந்தது. வழிமறித்த திருமங்கை ஆழ்வார் அனைத்தையும் பறித்தார். இதுவரை அவர் அறியாத மணிகளும், நவரத்தினங்களும் கிடைத்தது. பெருவேட்டை என மகிழ்ந்தார். பெருமாளுக்குத் திருப்பணி செய்து மகிழலாம் என குதூகலித்தார். அப்போது அவர் அறியார் மணக்கோலத்தில் வந்ததே ‘அரி’யார்தான் என்று! நகை மூட்டைகளுடன் சென்றுகொண்டிருந்தபோது வழியிலே ஒருவன் அசந்து தூங்கிக் கொண்டிருந்தான். அருகில் சென்று பார்த்தால் தான் திருடிச் சுமந்து வரும் நகைகளையே, இவனும் அணிந்து படுத்திருப்பது பார்த்து அதிர்ந்தார்! அவனை எழுப்பி, நகைகளைத் தரும்படி மிரட்டினார். அறி துயில் கொண்ட அரி, “அறியவில்லையா இன்னும் இந்த அரியை நீ?!” என்றார்.. திருமங்கை ஆழ்வார் விதிர்விதிர்த்துப் போனார். “பெருமாளே… உங்களிடமா திருடிவிட்டேன்?!” என்று கதறினார். திருடருக்கெல்லாம் திருடரான அந்த வெண்ணெய்த் திருடர் சிரித்தபடி, “திருமங்கை! உன் திருப்பணிக்கு மேலும் பொருள்தரவே வந்தேன்… இந்தா இதையும் எடுத்துக்கொள்” என்று ஆபரணதாரியாய் தான் அணிந்திருந்த, ஆபரணம் எல்லாவற்றையும் களைந்து தந்தார். பிரசாதமாய் அவற்றையும் பெற்றுக்கொண்ட ஆழ்வார், திருவரங்கம் நோக்கிப் புறப்பட்டார். அவர் போனதும், மாயனுக்கெல்லாம் மாயனான நம் மாயவன் மீண்டும் மறுமுறை அதே எல்லா ஆபரணங்களையும் தோற்றுவித்து தாம் அணிந்து கொண்டார்.... இப்போது நாம் காணும் அழகிய ஆபரணதாரி அனந்த நாராயணப் பெருமாள் அவரே! வாருங்கள்! உங்களுக்கு வேண்டியதெல்லாம் பெறுங்கள்!.எங்கே இருக்கு?நாகப்பட்டினம் - திருவாரூர் மார்க்கம் சிக்கல் வழியாக 7 கி.மீ. தரிசன நேரம்:காலை 7 – 11; மாலை 5 – இரவு 8.