Bakthi Magazine
பக்தி செய்தி: கந்தனுக்கு அரோகரா! காந்திக்கு ஜே ஜே!
இத்தல முருகப்பெருமானுக்கும் சுதந்திர வேள்விக்கும் சுடராய் ஒளி வீசிய தன்மை உண்டு. திருச்செந்தூரில் நடக்கும் வைகாசி விசாகம் பெருந்திருவிழாவையொட்டி குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து புறப்பட்டுச் செல்லும் காவடிகள்தான் சுதந்திர வேள்விக்கு நெய் ஊற்றிய பங்களிப்பையும் செய்துள்ளன.