- சிங்கை பிரனுஜா திருமலையில் நின்ற திருக்கோலத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு தினமும் அருள்பாலிக்கும் திருவேங்கடமுடையானைப் பற்றி நாலாயிரத் திவ்ய பிரபந்தங்களில் 202 பாசுரங்களை பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகரப் பெருமாள், பெரியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார் மற்றும் ஆண்டாள் ஆகியோர் அருளச்செய்து மங்களாசாசனம் செய்துள்ளனர். பெருமாளையே சரணாகதி என்று நினைத்து, அவருக்கு கைங்கர்யம் செய்வதே தனது வாழ்நாளின் முக்கியப் பணி என தொண்டு செய்தவர்தான் திருவஞ்சிக்களத்தில் (கேரளா மாநிலம்) பிறந்த குலசேகரப் பெருமாள் என்கிற குலசேகராழ்வார்..கலியுக வரதனான திருவேங்கடமுடையான் மீது தீராத பக்தியைக் கொண்ட இவர் தனக்கும், திருமலைக்கும் ஏதேனும் வகையில் பிறவிதோறும் தொடர்பு இருக்கவேண்டும் என்பதற்காக நாரையாகவும், மீனாகவும், புதராகவும்.... இப்படி ஏதாவது ஒரு பிறவி எடுத்து பெருமாளுக்கு கைங்கர்யம் செய்து, அவரது அழகிய திருமேனியை தினமும் தரிசனம் செய்யவேண்டும் என்கிற ஆவலில், நான்காம் திருமொழியில், “செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல் அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்துஉன் பவளவாய் காண்பேனே” (4.9)என வேண்டிப் பாடினார். கோயிலின் படியாக இருக்கும் பேறு பெறவேண்டும் என மனமுருகி வேண்டியதால், திருமலை கருவறை வாயிற்படிக்கு ‘குலசேகரப்படி’ என்கிற பெயர் இன்றும் நிலைத்து நிற்கிறது..இப்படி திருவேங்கடமுடையான் பெருமாளுக்கு நித்தம் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்பதே தங்களுடைய வாழ்நாளின் கடமை என வாழ்ந்து வந்தவர்களில் ஒருவர்தான் அனந்தாழ்வார் என்கிற வைணவச் செம்மல். இவர் மைசூர் பகுதியில் இருக்கும் ஸ்ரீரங்கப்பட்டினத்திற்கு அருகே இருக்கும் சிறுபுத்தூர் என்கிற கிராமத்தில் கி.பி. 1054ஆம் ஆண்டு பிறந்தார். பெருமாளின் தீவிர பக்தரான இவர் பெருமாளை அடித்த இரும்புக் கடப்பாரை திருமலை கோயில் பிரதான நுழைவுவாயிலில் பத்திரமாக மாட்டி வைத்துக் காத்து வரப்படுகிறது. இந்த இரும்புக் கடப்பாரையை கோயிலுக்கு உள்ளே செல்லும்போது வலதுபுறத்தில் இன்னும் காணலாம். ‘விசிஷ்டாத்வைதம்’ என்கிற வைணவநெறியை அடிப்படையாகக் கொண்ட சித்தாந்தத்தைப் போதித்தார் ஸ்ரீ இராமானுஜர் என்கிற ஆச்சார்ய புருஷர். இவரை ஆதிசேஷனின் அவதாரம் என்றும் சொல்லுவதுண்டு. கருணை வடிவமான இவரை ‘காரேய் கருணை இராமாநுச’ எனப் பெருமையாக இராமாநுச நூற்றந்தாதியில் திருவரங்கத்து அமுதனார் பாடியுள்ளார்.. ஒருநாள் ஸ்ரீ இராமானுஜர் தன் சீடர்களுக்கு திவ்யப் பிரபந்தம் பற்றிய பாடத்தைச் சொல்லிக் கொடுத்துக்கொண்டு இருந்தார். அப்போது நம்மாழ்வாரின் திருவாய்மொழியின் மூன்றாம்பத்து பாசுரங்களின் வியாக்யானத்தை எளிய நடையில் உபதேசித்து வரும் வேளையில், பாசுரத்தில் வரும் ‘சிந்துபூ மகிழுந் திருவேங்கடத்து’ என்கிற வரிக்கு விளக்கம் சொல்லும்போது ஸ்ரீ இராமானுஜர் தன்னை அறியாமல் அழுதார். உடனே சீடர்கள் பரபரப்படைந்து விளக்கம் கேட்க, ‘திருமலையில் தினமும் பூக்கும் வாசனை மலர்கள் திருவேங்கடமுடையானுக்கு மாலையாகப் பயன்படாமல் வீணாகப் (பூமியில் சிந்தும் பூ) போகின்றன. அப்பூக்களைப் பறித்து மாலையாகக் கட்டும் கைங்கர்யத்தை யார் செய்வார்களோ?’ என வேதனைபடக் கூறினார். சீடர்களில் யாரும் எந்தப் பதிலும் சொல்லாமல் மவுனமாக இருந்தனர்..காரணம், சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு திருமலையில் தங்கி சேவை செய்வது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை. அடர்ந்த மலைப்பகுதி. காடுகளில் வனவிலங்குகள் வசிக்கும். போக்குவரத்து மற்றும் இதர வசதிகள் மிகக் குறைவு. இப்படி பல அசௌகரியங்கள் இருந்தன. இதை எதையும் பொருட்படுத்தாமல் குருவின் ஆசையைப் பூர்த்தி செய்யவேண்டும் என்கிற நோக்கில் அனந்தாழ்வான் என்கிற சீடர் மட்டும் இத்திருப்பணியைச் செய்ய முன்வந்தார். சீடரின் தீரச் செயலைக் கண்டு மகிழ்ந்த ஸ்ரீ இராமானுஜர் அனந்தாழ்வானை ஆசிர்வதித்து திருமலைக்கு மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தார். ஸ்ரீ இராமானுஜர் தமது காலத்தில் நியமித்த 74 சிம்மாசனாதிபதிகளுள் அனந்தாழ்வான் ஒருவர் ஆவார்.. தன் குருவின் உத்தரவை நிறைவேற்ற அனந்தாழ்வான் கர்ப்பிணியான தன் மனைவியுடன் இருவர் மட்டும் சிரமம் பாராமல் திருமலைக்குச் சென்றனர். திருமலைக்குச் சென்றதும் அங்கு அழகிய நந்தவனத்தையும், செடிகளுக்கு நீர் தர ஒரு கிணற்றையும், குளத்தையும் அமைக்கலாம் எனத் திட்டமிட்டார். முதலில் காட்டுப்பகுதியை சீராக்கி அதில் அழகிய மணம் வீசும் பூச்செடிகளையும், திருத்துழாய் (துளசி) செடியையும், சிறிய தடாகத்தில் தாமரை, அல்லி பூவகைகளை தனித்தனி பாத்தியாகக் கட்டி கண்ணும் கருத்துமாய் நந்தவனத்தைக் காத்து வந்தார். அந்த அழகிய பூச்சோலைக்கு தனது குருநாதரின் பெயரையே (இராமானுஜ நந்தவனம்) சூட்டி மகிழ்ந்தார். அங்கு பூக்கும் பூக்களைக் கொண்டு மாலையாகக் கட்டி புஷ்ப கைங்கர்யத்தை பக்தியுடன் தினமும் செய்து வந்தார்.. கோடைக்காலத்தில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக ஒரு குளத்தை உருவாக்கத் தீர்மானித்து அதற்கான வேலைகளைத் தன் மனைவியுடன் சேர்ந்து ஈடுபட்டார். கடப்பாரையால் அனந்தாழ்வான் மண்ணைத் தோண்ட, அதை அவரது மனைவி கூடையில் சுமந்து கொண்டு போய் வேறு இடத்தில் போட்டுவிட்டு வருவார். இப்படியே திருப்பணியை செய்துகொண்டு இருந்த சமயத்தில் ஒருநாள் சிறுவன் ஒருவன் அனந்தாழ்வானின் மனைவியிடம் தான் மண்ணை சுமந்து செல்ல விரும்புவதாகக் கூறி, கூடையை வாங்கிச் சென்றான். காரணம் கர்ப்பிணியான பெண் சிரமப்படுவதால், இரக்க குணத்துடன் உதவ முன்வந்தான். மண்ணை உடனுக்கு உடன் வேகமாகக் கொட்டிவிட்டு வந்தான். இதை அறியாத அனந்தாழ்வான் கர்ப்பிணியான தன் மனைவி விரைவில் மண்ணைக் கொட்டிவிட்டு வருவதைப் பற்றி ஆச்சரியத்துடன் கேட்க, ஒரு சிறுவன் தனக்கு உதவியதைக் கூறினாள். பெருமாள் திருப்பணியை தானே செய்யாமல் அடுத்தவரிடம் கொடுப்பதை விரும்பாமல் மனைவியை அனந்தாழ்வான் கடிந்துகொண்டார். பிறகு சிறுவனை அழைத்து தன் குருவின் கட்டளைப்படிதான் இந்த திருப்பணியை மகிழ்ச்சியுடன் செய்து வருவதாகவும், இதில் மற்றவர்களின் தலையீடு என்பது நல்லது இல்லை எனப் பக்குவமாகக் கூறினார். இதை சிறுவன் ஏற்காமல் தானும் இந்த கைங்கர்யத்தில் ஈடுபட விரும்புவதாகத் தொடர்ந்து கூறினான். மண் கூடையை சுமந்த அனந்தாழ்வானின் மனைவியிடம் கூடையை தன்னிடம் தருமாறு சிறுவன் கேட்க, இதனால் கோபமடைந்த அனந்தாழ்வான் சிறுவனைத் துரத்த அவன் அங்கும், இங்கும் ஓடினான். மண்ணைத் தோண்டுவதற்காக வைத்திருந்த கடப்பாரையால் அடிக்கும் பாவனையில் ஓங்க, அது தவறி சிறுவனின் தாடையில் பட்டு ரத்தம் வரத் தொடங்கியது. இதனால் பதறிய அனந்தாழ்வான் சிறுவனுக்கு சிகிச்சை செய்ய முற்பட்டபோது அவன் அனந்தாழ்வான் அருகே வர பயந்து மீண்டும் ஓடத் தொடங்கினான். அப்படியே இருவரும் ஓட, சிறுவன் திருமலை கோயிலுக்குள்ளே சென்றபின்னர் எங்கு சென்றான் எனத் தெரியவில்லை. எப்படியோ மறைந்துவிட்டான். சிறுவனுக்கு தான் கோபத்தில் தீங்கு இழைத்ததை நினைத்து அன்று இரவு முழுவதும் தூங்காமல் மனம் வருந்தினார். மறுநாள் காலையில் திருமலை கோயிலுக்கு தான் கட்டிய மாலையை சமர்ப்பிக்க சந்நதிக்குச் சென்றபோது திருவேங்கடமுடையானின் திருஉருவ அர்ச்சாமேனியின் வாய் தாடையில் ரத்தம் வடிவதாக கோயில் அர்ச்சகர் கூற, நடந்த விஷயத்தை அனந்தாழ்வான் புரிந்துகொண்டு பெருமாளிடம் மன்னித்து அருளுமாறு அழுதுகொண்டே வேண்டினார்.. கோயில் கருவறையிலிருந்து அசரீரியாக பெருமாள், “அனந்தா! உன்னிடம் விளையாடவே யாம் சிறுவனாக வந்தோம். உன் தூய பக்தியை இனி எல்லோரும் அறிவார்கள். கவலைப்படவேண்டாம்!” எனக் கூற, அனந்தாழ்வான் உட்பட அனைவரும் ஆனந்தம் அடைந்தனர். தாடையில் கசியும் ரத்தத்தை நிறுத்த பச்சைக் கற்பூரத்தை (ஸ்ரீபாதரேணு) அடிபட்ட இடத்தில் வைக்க ரத்தம் கசிவது நின்றது. அன்று முதல் திருவேங்கடமுடையானின் தாடையில் பச்சைக்கற்பூரம் வைக்கும் வழக்கம் வந்தது. இந்த சம்பிரதாயம் இன்றுவரை தொடருகிறது. திருவேங்கடமுடையானை தரிசனம் செய்யும்போது நாம் இதைக் காணலாம். திருமலையில் முதன்முதலில் அனந்தாழ்வான் அமைத்த நந்தவனத்திற்கு ‘ஸ்ரீ அனந்தாழ்வார் பிருந்தாவனம்’ (புரசைவாரீ தோட்டம்) என்றும், அவர் அமைத்த குளத்திற்கு ‘இராமானுஜர் புஷ்கரிணி’ என்றும் அழைக்கப்படுகிறது. வருடம்தோறும் அவர் அவதரித்த நாளில் பிருந்தாவனத்தில் உள்ள பழமையான மகிழம்பூ மரத்திற்கு சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். எம்பெருமாளின் திருவடிகளே சரணம்!